Published:Updated:

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றமா... பின்னணி என்ன?

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

`விரைவில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாற்றப்படலாம்’ என்ற தகவல் போலீஸ் வட்டாரத்தில் பரவுகிறது.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது ஒருபுறமிருக்க, இந்த மாற்றங்கள் தேர்தலுக்காக ஆளுங்கட்சி செய்யும் மாற்றங்கள் என்றும் சொல்லப்படுகிறது. `அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பதவியைத் தொடர்ந்து வகிக்கும்படியும் இது நிகழவிருக்கிறது’ என்றும் கிசுகிசு பரவிக்கொண்டிருக்கிறது.

இதன்படி, `வடக்கு கூடுதல் கமிஷனர் அருண் ஐ.பி.எஸ் நிர்வாகப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார். தென்சென்னை அடிஷனல் கமிஷனர் தினகரன், கோவையை ஹெட் குவார்ட்டர்ஸாகக்கொண்ட மேற்கு மண்டலத்துக்கு மாற்றப்படுகிறார்; வடக்கு மண்டலத்துக்கு சங்கர் நியமிக்கப்படுகிறார்; நெல்லை கமிஷனரை மாற்றி அந்த இடத்துக்கு அன்பு ஐ.பி.எஸ் வருகிறார்...’ என்றெல்லாம் காவல் வட்டாரச் செய்திகள் பரவுகின்றன.

இந்த 50+ மாற்றங்களும், தேர்தலில் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதன் அடிப்படையில்தான் நடக்கவிருக்கின்றன என்பது ஆளும்கட்சித் தொண்டர்களே பேசிக்கொள்ளும் ஓப்பன் டாக்!

அடுத்த கட்டுரைக்கு