Published:Updated:

'பெய்தது வரலாறு காணாத மழைதான் ... ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை... !' - சொல்வது மேயர் துரைசாமி

'பெய்தது வரலாறு காணாத மழைதான் ... ஆனால் பெரிய அளவில்  பாதிப்பில்லை... !' - சொல்வது மேயர் துரைசாமி
'பெய்தது வரலாறு காணாத மழைதான் ... ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை... !' - சொல்வது மேயர் துரைசாமி

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் வரலாறு காணாத மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
 

'பெய்தது வரலாறு காணாத மழைதான் ... ஆனால் பெரிய அளவில்  பாதிப்பில்லை... !' - சொல்வது மேயர் துரைசாமி

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், ரிப்பன் கட்டடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசுகையில், "  'மழைநீர் கால்வாய் கட்டமைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்யவில்லை, பராமரிக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு பலரால் சொல்லப்படுகிறது. இதற்கு யார் காரணம்? இதற்கு முழு முதற் காரணம் உள்ளாட்சியை தன்னாட்சியாக வைத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின்தான்.

மக்களால் நான், மக்களுக்காக நான் என்று முழக்கமிட்டு மாநகராட்சி பணிகளை செய்ய கோடிக்கணக்கில் தாய் உள்ளத்துடன் வாரி வழங்கி, 4 ஆண்டு காலத்தில் 38 ஆயிரத்து 400 பணிகள் நடைபெற காரணமாக அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி புதிய வளர்ச்சிகளை வடிவமைத்து இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதைப்போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களை, ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் செய்திருந்தால் சென்னை ஒரு முன்மாதிரியான நகரமாக அமைத்திருக்கும். அந்த பணியையும் இப்போது முதல்வர் ஜெயலலிதா தானே செய்து வருகிறார்.
 

'பெய்தது வரலாறு காணாத மழைதான் ... ஆனால் பெரிய அளவில்  பாதிப்பில்லை... !' - சொல்வது மேயர் துரைசாமி

சென்னை மாநகராட்சியில் அனைத்து பணியாளர்களும் வெள்ள நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை 898 மரங்கள் வேருடன் சாய்ந்து, அவை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டது. சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் நிரம்பியதால், அவற்றில் டீசல் பம்புகள் உபயோகப்படுத்தப்பட்டு உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு பணியாற்றப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிபடியாக குறைந்து கொண்டே வருகிறது. மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள்-2012-ல் 6,780, 2013-ல் 5,166, 2014-ல் 2,988 2015(கடந்த 25-ந்தேதி வரை) 1,287 ஆக இந்த 4 ஆண்டுகளிலும் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,217 பேர் மட்டுமே. இதே போல டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்கள் 2012-ல் 553, 2013-ல் 133, 2014-ல் 137, 2015(கடந்த 25-ம் தேதி வரை) 108 ஆக மொத்தம் 4 ஆண்டுகளில் 931 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு உள்ளானவர்கள் 2012-ல் 2,954, 2013-ல் 2,314, 2014-ல் 1,952, 2015(கடந்த 25-ம் தேதி வரை) 1,923 ஆக 4 ஆண்டுகளில் பாதிப்புக்குள்ளானவர் கள் எண்ணிக்கை 8,743 பேர் மட்டுமே. இந்த புள்ளி விவரமே முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் மீது எவ்வளவு பந்தபாசம் கொண்டு தன்னார்வத்துடன் நடவடிக்கை எடுத்தார் என்பதாகும்.

முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் இந்த பருவமழையின்போது வரலாறு காணாத கனமழை பெய்த போதும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.