Published:Updated:

‘கவுகாத்தியில் கொட்டித் தீர்த்த மழை!’ - கைவிடப்பட்ட முதல் டி-20 போட்டி #INDvSL #NowAtVikatan

கவுகாத்தி
கவுகாத்தி

05.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Jan 2020 10 PM

முதல் டி-20 போட்டி கைவிடப்பட்டது!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

05 Jan 2020 6 PM

ஃபீல்டிங் தேர்வு செய்த இந்திய அணி #INDvSL

இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.

விராட் கோலி
விராட் கோலி
BCCI

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் ஜடேஜா, மணீஷ் பாண்டே, சஹால் மற்றும் சாம்சன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதேபோல், ஓய்வில் இருந்த பும்ரா, இந்தத் தொடரில் களமிறங்குகிறார்.

05 Jan 2020 4 PM

குரூப் - 4 தேர்வு சர்ச்சை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,491 பணிகளுக்கான குரூப் - 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை, 5,575 மையங்களில் 16,29,865 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்களே தரவரிசைப் பட்டியலில் அதிகம் இடம்பிடித்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. அதேநேரம், தரவரிசைப் பட்டியல் குறித்த ஆவணங்களை சரிபார்த்தபின்னர் விளக்கம் அளிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 Jan 2020 11 AM

முன்பைவிட கடுமையாகத் தாக்கப்படுவீர்கள்!

இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவப்படை மீது இரான் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``இரான் ராணுவத்தினர் எங்களைத் தாக்கியுள்ளனர், அதற்கு நாங்களும் பதில் தாக்குதல் நடத்துவோம். நான் அவர்களுக்குச் சிறந்த ஆலோசனை வழங்குகிறேன், மீண்டும் தாக்குதல் நடத்தாதீர்கள். ஒருவேளை அப்படி மட்டும் நடந்தால் அவர்கள் மீது இதற்கு முன்பு தாக்கப்பட்டதைவிட மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

`ஒருவருக்கு ஈடாக 52 இடங்கள் குறிவைக்கப்படும்!’- இரானைக் கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்
05 Jan 2020 9 AM

புத்தாண்டின் முதல் ஆட்டம்!

இந்தியா இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியானது இன்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. புதிய ஆண்டில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முயற்சி செய்யும் என்பதால் இந்தப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். டி20 உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இந்திய அணி தற்போது அதிகப்படியான டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணிக்குத் திரும்புகிறார். அதே நேரத்தில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அணிக்கு திரும்பியுள்ள தவான் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார். அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இலங்கை அணி சமீப காலங்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த திணறினாலும் டி20 போட்டியைப் பொறுத்தவரை எதுவும் சாத்தியம்.

கோலி
கோலி

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி, ``டெஸ்ட் போட்டிகளை 4 நாள்களாக குறைப்பதற்கான ஆலோசனையில் ஐசிசி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. என்னைப் பொறுத்தவரை அது சரியாக வராது. இதற்கு நான் ஆதரவும் அளிக்கவில்லை. இன்று 4 நாள்களாக குறைத்தால் அடுத்து 3 நாள்களாக குறைக்க கோரிக்கை எழும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு