Published:Updated:

ஆதார் - பான் எண் இணைப்புக்கான அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு! #NowAtVikatan

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

6.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 Jul 2020 8 PM

மன்னர்மன்னன் காலமானார்

ஆதார் - பான் எண் இணைப்புக்கான அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு!  #NowAtVikatan

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், தமிழறிஞருமான மன்னர்மன்னன் முதுமை காரணமாக தற்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 92. பல ஆண்டுகள் புதுச்சேரி தமிழ்சங்கத்தின் தலைவராக பதவி வகித்த இவர் தமிழக அரசின் கலைமாமனி, புதுச்சேரி அரசின் கலைமாமனி மற்றும் தமிழ்மாமனி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

06 Jul 2020 4 PM

ஆதார் - பான் எண் இணைப்புக்கான அவகாசம் நீட்டிப்பு!

ஆதார், பான் என் இணைப்புக்கான அவகாசத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

06 Jul 2020 4 PM

நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி!

நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லாமல் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் சூழலில் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வரும் நவம்பர் மாதம் வரை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

மேலும், நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜூலை 1 முதல் 3-ம் தேதி வரை பணம் செலுத்தி ரேஷன் பொருள் பெற்றவர்களுக்கு, அடுத்த மாதம் பொருள் வழங்கும்போது, அது ஈடு செய்யப்படும் எனவும் இதுகுறித்து குறுஞ்செய்தி அவர்களுக்கு அனுப்பப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார்.

Modi: `மழைக்கால எச்சரிக்கை; நவம்பர் வரை இலவச ரேஷன்’  -மோடி உரையின் ஹைலைட்ஸ்
06 Jul 2020 4 PM

`திருக்கோயில்’ - கோயில் தரிசனத்துக்கு புதிய டிவி சேனல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாகக் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், திருக்கோயில்களில் நடைபெறும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, `திருக்கோயில்' என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு