Published:Updated:

நேபாளம்: அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கத்தில் 6 பேர் பலி - ரிக்டர் அளவில் 6.3-ஆகப் பதிவு!

நிலநடுக்கம்!

நேபாளத்தில் தொடர்ந்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.

நேபாள நாட்டின் டோனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது பற்றி அறிவியல் மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நேபாள நாட்டின் மேற்கே டோனி மாவட்டத்தில் நேற்றிரவு 9:07 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9:56 மணியளவில் 4.1 என்ற ரிட்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும், இன்று அதிகாலை 2:12 மணியளவில் 6.3 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்கின்றன.

நேபாளம்: அச்சத்தில் சாலையில் வந்து நிறுகும் மக்கள்
நேபாளம்: அச்சத்தில் சாலையில் வந்து நிறுகும் மக்கள்
ட்விட்டர்

இந்த நிலநடுக்கத்தால் டோனி மாவட்டத்திலுள்ள வீடு இடிந்து ஆறு பேர் உயிரிழந்தனர். நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தின் தென்கிழக்கில் 90 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி, குருகிராம், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் அச்சத்தில் சாலையில் குவிந்தனர்.