Published:Updated:

`மூணு வேளையும் முருங்கைக்கீரைதான் சாப்பாடு!’ - துயரத்தில் தவிக்கும் 70 வயது மாரியப்பன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடிசை வீட்டின் முன்பு மாரியப்பன்
குடிசை வீட்டின் முன்பு மாரியப்பன் ( படம்: நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம்பாளைத்தைச் சேர்ந்தவர், மாரியப்பன். ஓர் சிறிய ஓலைக்குடிசையில் வாழ்ந்துவருகிறார். சொந்தம் என்று யாரும் இல்லாத நிலையில், அவர் படும் துயரங்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

``மனுஷன் நிம்மதியா வாழணும்னா, ஒண்ணு காசுபணம் நிறைய இருக்கணும். இல்லைன்னா, அண்டிப் பொழைக்க உறவுகளோட ஆதரவு இருக்கணும். ரெண்டும் இல்லைன்னா, தினமும் ஒருவேளை சோத்துக்கே வழியில்லாம அனாதையாகி, என்னைமாதிரி அல்லாட வேண்டியதுதான். நான் மாற்றுத்திறனாளி. என் உடம்பு நான் சொன்ன பேச்சைக் கேட்டு பல வருஷம் ஆயிருச்சு. இந்த ரணபொழப்பு, என்னோட எதிரிக்கும் வரக்கூடாது தம்பி..." - கண்கலங்க ஆதங்கப்படுகிறார், மாரியப்பன்.

குடிசை வீட்டின் முன்பு மாரியப்பன்
குடிசை வீட்டின் முன்பு மாரியப்பன்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம்பாளைத்தைச் சேர்ந்தவர், மாரியப்பன். ஓர் சிறிய ஓலைக்குடிசையில் வாழ்ந்துவருகிறார். சொந்தம் என்று யாரும் இல்லாத நிலையில், அவர் படும் துயரங்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

``நான் பொறந்து வளர்ந்து, ஆண்டு அனுபவிச்சது எல்லாம் இதே ஊர்தான். என் மனைவி இருந்த வரைக்கும் ராஜா போல வாழ்ந்தேன். அவ பேரு மகேஸ்வரி. ஏழு வருஷத்துக்கு முன்னாடி என்னைத் தனியா தவிக்கவிட்டுட்டு போய் சேர்ந்துட்டா. அன்னையில் இருந்து நான் தனிமரமாயிட்டேன்" - மாரியப்பனின் குரல் உடைகிறது.

மாரியப்பன்
மாரியப்பன்
நா.ராஜமுருகன்
`உறவுகள் உதாசீனப்படுத்துறதுதான் வாழணுங்கிற ஆசையைத் தூண்டுது’ - தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்!

சிறிதுநேரம் அமைதிகாத்தவர், தன்னைத்தானே ஆசுவாசப்படுத்துக் கொண்டு பேச்சைத் தொடர்கிறார்.

``பெரிய நிலபுலமோ, வசதி வாய்ப்போ இல்லை. ஆனா, இருக்கிறத வச்சு நிம்மதியா வாழ்ந்தோம். எனக்கு சின்ன வயதில் இருந்தே கால் முடியாது. இருந்தாலும் அதை ஒரு குறையா நினைச்சதில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே ஆடு, மாடு மேய்க்கிறது, கறி விக்கிறதுனு கிடைக்கிற பொழப்பை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

கையில் நல்ல சில்லறை தேறும். அதை சேர்த்து வச்சுக்காம, நல்லா செலவு பண்ணுவேன். 45 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு மகேஸ்வரியை திருமணம் பண்ணி வச்சாங்க. என்னை மவராசனா தாங்கினா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்மேல ஒரு கடுஞ்சொல் வீசமாட்டா. அவ வந்தபிறகு, சம்பாதிக்கிறதை அவகிட்ட அப்படியே கொடுத்திருவேன். தங்கமா தாங்கினா. எங்களுக்கு அடுத்தடுத்து நாலு பிள்ளைங்க பொறந்தாங்க. ஆனால், 15 வருடங்களுக்குள்ளேயே எல்லா பிள்ளைகளும் நோய்வந்து இறந்துபோயிட்டாங்க. எங்க ரெண்டு பேருக்கும் அது பேரிடியா இருந்துச்சு. வம்சம் தழைக்காம எல்லா பிள்ளைகளும் இறந்து, வாழ்க்கையே பதரா போயிருச்சேன்னு கலங்கிப்போனோம். துக்கப்பட்டு நின்னா, எல்லாம் சரியாயிடுமா... `எனக்கு நீயும், உனக்கு நானும் குழந்தைங்க'னு இரண்டு பேரும் பேதலிச்சுப்போன புத்தியை மாத்திக்கிட்டோம்.

மாரியப்பன்
மாரியப்பன்
நா.ராஜமுருகன்

குழந்தைகள் இல்லையேங்கிற குறையைத் தவிர, வேற துன்பம் இல்லை. கிடைக்கிறதை வச்சு, ரெண்டு பேரும் காலத்தைப் பழுதில்லாம ஓட்டிக்கிட்டு வந்தோம். எனக்கு கால்கள்ல பிரச்னை அதிகம் வர, முன்னமாதிரி ஓடியாடி வேல வெட்டிக்குப் போகமுடியாம போச்சு. அதனால், எங்க ஊர்லேயே ஒரு பொட்டிக்கடையைப் போட்டுக்கிட்டு உட்கார்ந்தேன். அதுல வந்த சொற்ப வருமானம், ரேஷன் அரிசினு கிடைக்கிறத வச்சு கஞ்சி குடிச்சுக்கிட்டு வந்தோம்.

ஆனா, ஏழு வருஷத்துக்கு முன்னாடி என் மனைவி திடீர்னு இறந்துபோயிட்டா. நிர்கதியா நின்னேன். என் மனைவியோட அருமை அவ இல்லாதப்பதான் தெரிஞ்சுச்சு. அவ இல்லாம என் நிலைமை ரொம்ப மோசமாயிருச்சு. பெட்டிக்கடையைத் தொடர்ந்து நடத்த முடியலை. வந்த விலைக்கு வித்துட்டேன். ரேஷன் அரிசியை வாங்கி பொங்கித் தின்னுட்டு, வாழ்ந்தேன்.

மாரியப்பன்
மாரியப்பன்
நா.ராஜமுருகன்

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரு ரேஷன் கடையில் வேலைபார்க்கிற ஆளுக, `உடனே கொண்டாந்து தாறோம்'னு ரேஷன் கார்டை வாங்கிட்டுப் போனாங்க. ஆனா கொண்டாந்து தரலை. போய் கேட்டதுக்கு, `உன்கிட்ட எப்போ ரேஷன் கார்டை வாங்கினோம்'னு சொல்லி மழுப்பினாங்க. இதனால், ரேஷன் கடையில் அரசி, பருப்பு, மண்ணெண்ணெய்னு எந்தப் பொருளையும் வாங்க முடியலை. வெறும் பச்சைத் தண்ணியைக் குடிச்சுட்டுகூட பலவேளைகளை ஓட்டியிருக்கிறேன்.

வெளியில் சொன்னா வெட்கக்கேடு... வெறும் முருங்கைக்கீரையை சுண்டி சாப்பிட்டு பசியைப் போக்கியிருக்கேன். என் நிலைமையைப் பார்த்துட்டு, அக்கம்பக்கத்துல உள்ள சிலபேரு அரிசி, பருப்பு, காய்கறினு எப்போவாச்சும் தருவாங்க. அதை வச்சு ஒருவாரம் ஓட்டுவேன். `இந்தப் பொழப்பு தேவையா?'னு பலநேரம் உடைஞ்சுபோயிருக்கிறேன். இருந்தாலும், சாகுற எண்ணத்துக்கு போகமாட்டேன். இப்போ கொரோனா வந்து மூணு மாசமா என் நிலைமையை இன்னும் மோசமாக்கிருச்சு. இங்க உள்ளவங்க அவங்கவங்க சாப்பாட்டுக்கே திண்டாடிப்போனாங்க. இதுல எனக்கு எங்கே உதவுறது..?

குடிசை வீட்டின் முன்பு மாரியப்பன்
குடிசை வீட்டின் முன்பு மாரியப்பன்
நா.ராஜமுருகன்

ரேஷன் கார்டு இல்லாததால், அந்த அரிசியும் கிடைக்கலை. அரசாங்கம் கொடுத்த 1,000 ரூபாயும் கிடைக்கலை. `ரேஷன் கார்டை கொடுங்க'னு கேட்டு, நானும் நடையா நடந்து பார்த்தேன். `உன்கிட்ட வாங்கவே இல்லை'னு சாதிச்சுட்டாங்க. பழையபடி, முருங்கைக்கீரைதான் பசியாத்துது. உடம்பும் முன்னமாதிரி ஒத்துழைக்கலை. தலைவலி, காய்ச்சல்னு படுத்தால்கூட ஏன்னு கேட்க நாதியில்லை. `என் மனைவி போன இடத்துக்கே சீக்கிரம் கொண்டுபோய் சேர்த்துடுப்பா'னு ஊர்பட்ட சாமிகளை வேண்டிக்கிட்டு கிடக்கேன். எந்த சாமியையும் என்னோட கோரிக்கை எட்டலை. கலங்குகிறார் மாரியப்பன்.

ரேஷன் கடை
ரேஷன் கடை
நா.ராஜமுருகன்

தெற்கு அய்யம்பாளையம் ரேஷன் கடை விற்பனையாளர் தனபாக்கியத்திடம் பேசினோம்.

``மாரியப்பனின் ரேஷன் கார்டை நாங்க வாங்கலை. அங்குள்ள யாரோ ஒரு பெண் மாரியப்பனை ஏமாற்றி, அவரது ரேஷன் கார்டை வாங்கிட்டதாக சொல்றாங்க. அவர் யார்னுகூட எனக்குத் தெரியாது. அவரை நேரா பார்த்ததுகூட கிடையாது" என்றார்.

மாரியப்பனின் துயரம் நல்லிதயங்களைக் கரையச் செய்யும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு