Published:Updated:

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Vikatan Correspondent
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் 5 செமீட்டர் மழையும், லால்குடியில் 4 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.