Published:Updated:

தமிழகத்தில் 67% மழை பொழிவு குறைவு

Vikatan Correspondent
தமிழகத்தில் 67% மழை பொழிவு குறைவு
தமிழகத்தில் 67% மழை பொழிவு குறைவு
தமிழகத்தில் 67% மழை பொழிவு குறைவு

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கியது. பொதுவாக இந்த காலக்கட்டத்தில் (இன்று வரை) தமிழகத்தில் 400 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தற்போது வரை 132 மி.மீதான் பெய்துள்ளது. இது சராசரியை விட  67% குறைவு என்கிறது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் தற்போது வரை 721 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தற்போதுவரை 186 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் சராசரி அளவுகூட மழை பெய்யவில்லை.  இந்த சூழலை மாற்றி மழை பொழிவை கொடுக்குமா வர்தா?