Published:Updated:

75-வது சுதந்திரதின விழாவும், சுதாவின் கடிதமும்!

75-வது சுதந்திர தினம்,
பிரீமியம் ஸ்டோரி
75-வது சுதந்திர தினம்,

#Avaludan

75-வது சுதந்திரதின விழாவும், சுதாவின் கடிதமும்!

#Avaludan

Published:Updated:
75-வது சுதந்திர தினம்,
பிரீமியம் ஸ்டோரி
75-வது சுதந்திர தினம்,

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜ், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பிக்கு, ‘பட்டியலின வகுப்பைச் சேர்ந்த என்னை, கடந்த குடியரசு தின விழாவின்போது தேசியக்கொடியை ஏற்றவிடாமல் தடுத்துவிட்டனர். வரும் 75-வது சுதந்திர தினத்தில் எனக்குக் கொடியேற்ற வாய்ப்பும், அதற்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும்’ என்று சமீபத்தில் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

‘இப்போலாம் யாரு சாதி பார்க்குறாங்க?’ குரல்கள் பற்றியும், இந்தச் சம்பவம் பற்றியும் உங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்...

75-வது சுதந்திரதின விழாவும், சுதாவின் கடிதமும்!

Anbu Bala

இந்த சாதி வெறியைப் பற்றி புலம்புவதைவிட, அதற்கு எதிராக காவல்துறை, சட்ட நடவடிக்கை எடுக்கவைப்பது தான் முக்கியம். அந்த வகையில், சம்பந்தப்பட்ட பெண் எடுத்திருக்கும் நடவடிக்கை மிகச் சரி. 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில், சாதிய அவலம் எந்தளவுக்கு இன்னும் வேரூன்றியிருக்கிறது என்பதைத் தான் இது உணர்த்துகிறது.

Vaira Bala

சமூகத்தில் இருக்கும் சாதி வெறி களையெடுக்கப்பட வேண்டும். அப்படியிருக்க அரசு விழாவில் சாதி வெறி காட்டப்படுவது, இந்த அரசு இயந்திரத்தில் புரையோடியுள்ள சாதிய முகத்தைக் காட்டுகிறது. இது மிகவும் கண்டனத் துக்குரியது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.

Vikash Ram

வெள்ளைக்காரன் எப்போதோ இந்தியாவுக்கு சுதந்திரம் தந்துவிட்டான். இந்தியர்களிடமிருந்துதான் இந்தியர்களுக்கு இன்னும் சுதந்திரம், விடுதலை, உரிமை கிடைக்கவில்லை. காலம் காலமாகச் சொல்லப்படும் பழைய புலம்பல்தான். ஆனால், இப்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில் அதைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது சாதி வெறி.

Babu Ganesh

யார் பார்ப்பதில்லை சாதி? பள்ளிக்கூடங்களில் ஆரம்பித்து சுடுகாடுகள் வரை இன்றும் சாதி பார்க்கப்படுகிறது என்பது தான் உண்மை. இன்றும் பெரியார் தேவைப்படுகிறார் சாதியை எதிர்க்க, சமூகநீதியை நிலைநாட்ட.

Saraswathy Padmanaban

என் தினசரி வாழ்க்கையில் சந்திக்கவில்லை என்றாலும், இது மாதிரியான அவலங்கள் எங்கோ, யாருக்கோ நடப்பதை தெரிந்துகொள்ளும்போது, சாதியின் அருவருப் பான இருப்பை உணர முடிகிறது. நகர்ப்புறத்தில் சாதி முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்றாலும், கிராமங்கள் அளவுக்கு இல்லை என்று தோணுகிறது. அரசாங்கம்

சாதி வெறிக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரமாக்க வேண்டும்.

Vijayan

ஒழிக்க முடியாதபடி மனித மனங்களின் வேர்களில் வைக்கப்பட்டுள்ளது சாதி. அதன் டிசைன் அப்படி. விழிப்புணர்வு, கல்வி, சட்டம், தண்டனை, அரசு, சமூகம் என அனைத்தும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி சாதிக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்... அதைவிட வீரியமாக.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு, சுதா மருத்துவமனைக்கு அரசு சீல் வைத்ததை எதிர்த்து,

250 தனியார் மருத்துவமனைகள் ஈரோடில் ஆகஸ்ட் 6-ம் தேதியன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனைகளின் இந்தக் கூட்டு முடிவு செயல்பாடு பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள் ளுங்கள்...

Karthikabuvaneshwari

ஒரு குற்றம் நடந்ததற்கு எதிராக அரசு சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு எதிராக மருத்துவர்கள் போராடினால், அதுவும் குற்றமே.

Meyyer Na

மருத்துவம் போன்ற மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட அடிப்படை சேவையில் வேலை நிறுத்தம் என்பதே ஏற்புடையதல்ல. அதிலும், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவ மனைக்கு ஆதரவாக மருத்துவர்கள் போராடுகிறார்கள் என்பதில் எந்த அறமும் இல்லை.

Alamu Vadevel

தங்கள் பணி உயிர் காக்கும் பணி என்று அறிந்த மருத்துவர்களின், மருத்துவமனைகளின் இந்த வேலை நிறுத்த போராட்டம், அவர்களையும் குற்றவாளிகள் ஆக்குகிறது.

Senthilkumar Kalyanasundaram

அரசு இதுபோன்ற நியாயமற்ற போராட்டங்களில் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.