Published:Updated:

`அசத்தல் ஓப்பனிங்; `நாட் அவுட்' சிம்மன்ஸ்'- டி20யில் இந்தியா தோல்வி! #NowAtVikatan

வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ்

08-12-2019 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Dec 2019 7 AM

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!

சிம்மன்ஸ்
சிம்மன்ஸ்
twitter \ bcci

இரண்டாவது டி20 போட்டியில் 171 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய பந்துவீச்சை அசால்ட்டாக சமாளித்தனர். ஓப்பனிங் ஜோடியே 70 ரன்கள் வரை விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடியது. இதன்மூலம் 18.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி. தொடக்க வீரர் சிம்மன்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி தேடிதந்தார். அதிகபட்சமாக அவர் 67 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டி20 தொடர் 1-1 என்ற சமநிலையில் ஆனது.

08 Dec 2019 8 PM

171 ரன்கள் இலக்கு!

ஷிவம் துபே
ஷிவம் துபே

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் மூன்றாவது விக்கெட்டாக இறங்கிய ஷிவம் துபே அதிகபட்சமாக 54 ரன்கள் விளாசினார். குறிப்பாக பொல்லார்டு வீசிய 10வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார் ஷிவம். சர்வதேச டி20யில் ஷிவம் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். அதேபோல் ரிஷப் பான்ட் 33 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வில்லியம்ஸ், வால்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

08 Dec 2019 8 PM

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தீர்மானம்!

தி.மு.க
தி.மு.க

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் உடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், ``வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடுவோம்" என்ற ஸ்டாலின் கருத்தை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, ``தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக உள்ளது.

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் காலத்தில் சமவாய்ப்பு உருவாக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ``சட்டத்திற்கு புறம்பாக புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது'' என்று தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ``வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை சட்ட நெறிமுறைப்படி முழுமையாகச் செய்து முடித்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும்" என்று தீர்மானம் போட்டனர்.

08 Dec 2019 6 PM

இந்தியா முதலில் பேட்டிங்!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராம்தினுக்கு பதிலாக பூரான் களம்காண்கிறார். டாஸ் போட்ட பிறகு பேசிய விராட் கோலி, ``பனி இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச நினைத்தோம். ஆனால் டாஸ் கிடைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

08 Dec 2019 11 AM

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!

`அசத்தல் ஓப்பனிங்; `நாட் அவுட்' சிம்மன்ஸ்'- டி20யில் இந்தியா தோல்வி! #NowAtVikatan

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரசிகர் மன்ற கொடியோ, ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

08 Dec 2019 11 AM

தெளிவு படுத்திய உயர் நீதிமன்றம்!

திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் ஒரு தனியார் தங்கும் விடுதி ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்த தனியார் விடுதியில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டில்கள் இருந்ததாலும் இந்த விடுதிக்கு போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஹரியானாவை சேர்ந்த அந்த விடுதி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு விடுதி நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் கேட்காமல் சீல் வைத்தது இயற்கை நீதிக்கு எதிரானது என நீதிபதி கருத்து தெரிவித்தார். திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என சட்டம் ஒன்றும் இல்லாத நிலையில், திருமணமாகாத இருவரும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

அதேபோல திருமணமாகாத ஆணும் பெண்ணும் 'லிவிங் டூ கெதர்" முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என தெளிவு படுத்தினார். அத்துடன் இந்த விடுதியின் அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- 4.5 லிட்டர், வெளிநாட்டு மதுபானம்- 4.5 லிட்டர், பீர் -7.8 லிட்டர், 9 -லிட்டர் ஒயின்' என வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி விடுதியில் மதுபான பாட்டில்கள் இருந்தது குற்றமில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

08 Dec 2019 10 AM

உயரும் பலி எண்ணிக்கை!

`அசத்தல் ஓப்பனிங்; `நாட் அவுட்' சிம்மன்ஸ்'- டி20யில் இந்தியா தோல்வி! #NowAtVikatan

டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது பலரையும்கவலை கொள்ள செய்துள்ளது. முதலில் 32 பேர் பலி என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இந்தவிபத்து தொடர்பாக ட்வீட் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `இந்த கோர விபத்தில் விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டிக்கொள்கிறேன். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர உத்தரவு பிறப்பித்துள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

`அசத்தல் ஓப்பனிங்; `நாட் அவுட்' சிம்மன்ஸ்'- டி20யில் இந்தியா தோல்வி! #NowAtVikatan

பிரதமர் மோடி, ``இந்த விபத்து மிக கொடூரமானது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். தற்போது விபத்து ஏற்பட்ட பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனர்.

08 Dec 2019 9 AM

தீ விபத்து: 32 பேர் பலி?

`அசத்தல் ஓப்பனிங்; `நாட் அவுட்' சிம்மன்ஸ்'- டி20யில் இந்தியா தோல்வி! #NowAtVikatan

டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 50 -க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 30 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

08 Dec 2019 9 AM

ரோஹித்தை முந்துவாரா கோலி...!

இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 ஆட்டம் இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் எடுக்கும் ரன்களை விட கோலி 3 ரன்கள் அதிகமாக எடுக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கோலி படைக்கும் வாய்ப்பு உள்ளது. ரோஹித் தற்போது 2547 ரன்களுடனும் கோலி 2544 ரன்களுடன் உள்ளனர்.

08 Dec 2019 8 AM

விருதுநகரில் முதுமக்கள் தாழி!

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய கண்மாயின் கரையோரம் மரக்கன்று நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் குழிதோண்டிய போது, முதுமக்கள் தாழிகள் போன்ற பெரிய மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு