Published:Updated:

கிருஷ்ணகிரி, ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

N.கண்பத்

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பியது. 

தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டியில் இரவு விடிய, விடிய கன மழை பெய்தது. அஞ்செட்டியின் அக்காதங்கை ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் சென்று வருவதற்காக அருகில் தற்காலிகமாக மண் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்செட்டி பகுதியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் தற்காலிக மண் தரைப்பாலம் உடைந்தது. இதன் காரணமாக அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரட்டி, தொட்டமஞ்சி, ஜேசுராஜபுரம், நாட்ராம்பாளையம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கிராம மக்கள் அஞ்செட்டிக்கோ மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை, சூளகிரி, தளி, அஞ்செட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், குட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வனப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் அங்கு மழைநீர் காட்டாற்று வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த மழையால் தளியில் ஜெயந்தி காலனியைச் சேர்ந்த ரேகா (40), கதிரம்மா (45), சாவித்ரி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கட்ராமப்பா ஆகியோரின் ஓட்டு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு: கிருஷ்ணகிரி - 63, நெடுங்கல் - 33,  ஓசூர் - 54, சூளகிரி - 43, அஞ்செட்டி - 10, தேன்கனிக்கோட்டை  - 60, ராயக்கோடடை -15, தளி - 60, பாரூர் - 19.60, பெனுகொண்டாபுரம் - 42.30, போச்சம்பள்ளி -15.40, ஊத்தங்கரை - 16, மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு மட்டும் 431.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி, ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!