Published:Updated:

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை பொய்த்த போதும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதல் சென்னையில் ஆங்காங்கே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்று சென்னையில் குறிப்பிடும் வகையில் நல்ல மழை பெய்ததால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல குறைந்தபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 1.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து வெப்பச்சலனம் நிலவுவதால், சென்னை பெருநகரம் முழுவதும் மேகமூட்டமாகவே காட்சியளிக்கிறது. இதனால், இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு