Published:Updated:

இந்த ஊர்களில் எல்லாம் இன்று மழை பெய்யும்: வெதர்மேன் ரிப்போர்ட்!

கோடை காலம் முடிந்து, தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று வெப்பம் குறைந்து, மழைப் பொழிவு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக அவ்வபோது மழை பெய்தாலும், தொடர்ச்சியாக மழை இருப்பதில்லை.

குறிப்பாக, தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட 38 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான், தமிழகத்தில் அடுத்த 15 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர், "தென்மேற்கு பருவமழை தீவிரமடையாவிட்டாலும், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 10 நாள்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.  அதேபோல, சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.