Published:Updated:

தமிழகத்தில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு!

ராகினி ஆத்ம வெண்டி மு.
தமிழகத்தில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தை வெயில் வாட்டிவந்தநிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோடை காலம் முடிந்து, தென் மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் சற்று வெப்பம் குறைந்து, மழைப்பொழிவு காணப்பட்ட போதிலும் வெப்பம் அதிக அளவிலேயே இருந்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ச்சியாக மழை இருப்பதில்லை. குறிப்பாக, தென்மேற்குப் பருவமழை சராசரி அளவைவிட 38 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது, மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று காலையிலிருந்தே மேக மூட்டமாகக் காணப்பட்ட வானிலையால், மதியம் மற்றும் மாலை நேரங்களில் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இன்றும் சென்னை நகர்ப் பகுதிகளில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.