Published:Updated:

'தமிழகத்துக்கு இன்று இடி மழை உண்டு': அடித்துச் சொல்லும் வெதர்மேன்!

'தமிழகத்துக்கு இன்று இடி மழை உண்டு': அடித்துச் சொல்லும் வெதர்மேன்!
'தமிழகத்துக்கு இன்று இடி மழை உண்டு': அடித்துச் சொல்லும் வெதர்மேன்!

'தமிழகத்துக்கு இன்று இடி மழை உண்டு': அடித்துச் சொல்லும் வெதர்மேன்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னையில் பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மெரினா, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 


இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த முறை சென்னை நகரப் பகுதிகளிலும் மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு. தமிழகத்தின் மேற்குப் பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். திருப்பூரில் மழை பெய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.


தமிழகத்தின் தென் மாவட்டங்களான திண்டுக்கல், கொடைக்கானல், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்யக்கூடும். டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி மாவட்டங்களிலும் மழை பொழிவு ஏற்படும். தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். கடலூரிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் நல்ல காற்று வீசிவருவதால், மழைப் பொழிவை உண்டாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. சென்னையில் இன்று மழை பெய்யும் வாய்ப்பை இழந்துவிடாது என்றே நினைக்கிறேன்.

கடந்த 10 நாள்களாகத் தமிழகத்தில் மழை பெய்து, விவசாயிகளின் கனவை நனவாக்கி வருகிறது. பற்றாக்குறை மழைப் பொழிவு என்ற நிலையில் இருந்து அபரிமிதம் என்ற நிலைக்கு மழை வர வேண்டும். ஆனால், அளவுக்கு அதிகம் வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு