Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்!- ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள்! #NowAtVikatan

09-12-2019 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம் ( Photo: Ashok Kumar / vikatan )
09 Dec 2019 2 PM

குடியுரிமை சட்டதிருத்த மசோதா!

உள்ளாட்சித் தேர்தல்!-  ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள்! #NowAtVikatan

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் அமித் ஷா. இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்குக்கு பாதிப்பு என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அதற்கு அமித் ஷா விளக்கம் அளித்து பேசினார். அப்போது 0.01 சதவிகிதம்கூட இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்குக்கு பாதிப்பில்லை என அவர் கூறினார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

ஆனால் அ.தி.மு.க மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. 293 எம்.பிக்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிய நவநீதகிருஷ்ணன், ``சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை என உள்துறை அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து மசோதாவுக்கு ஆதரவு அளித்தோம்" எனக் கூறினார்.

09 Dec 2019 10 PM

ஒரே நாளில்  3,217 வேட்புமனுக்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

09 Dec 2019 10 PM

வெங்காயம் - மேலும் கட்டுபாடு!

வெங்காயம் விலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க சில்லறை விற்பனையாளர்கள் 5 மெட்ரிக் டன் வரை மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அந்த அளவு 2 மெட்ரிக் டன்னாக குறைக்கப்படுவதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

09 Dec 2019 5 PM

ரஷ்யாவுக்கு தடை!

2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்யா சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

09 Dec 2019 3 PM

சித்தராமையா ராஜினாமா!

கர்நாடகாவில் இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்தார். அதேபோன்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

09 Dec 2019 3 PM

தற்போதைய நிலவரப்படி இன்று மதுரை மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் 150-க்கும், சின்ன வெங்காயம் 110-க்கும் விற்பனை. | #OnionPrice #Madurai

09 Dec 2019 12 PM

ஆட்சியை தக்கவைத்தார் எடியூரப்பா!

எடியூரப்பா காலில் விழுந்து ஆசி வாங்கும் மகன் விஜயேந்திரா
எடியூரப்பா காலில் விழுந்து ஆசி வாங்கும் மகன் விஜயேந்திரா
ani

கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. பெரும்பான்மைக்கு 6 இடங்கள் தேவை என்ற நிலையில் நடந்த முடிந்த இடைத்தேர்தலில் தற்போதுவரை 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. மேலும், நான்கு தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. 15 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க வென்றுள்ள 8 தொகுதிகளில் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திராவும் அடக்கம்.

09 Dec 2019 11 AM

தூக்கிடும் பணிக்கு தயாராகும் திகார் சிறை!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

நிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா அளித்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து பணிகள் துவங்கியுள்ளது. திகார் சிறையில் ஆட்கள் இல்லாததை அடுத்து தற்போது வேறு சிறை நிர்வாகத்தில் இருந்து தூக்கிட ஆட்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

09 Dec 2019 10 AM

தி.மு.க மனுத் தாக்கல்!

தி.மு.க
தி.மு.க

இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி உள்ளாட்சித் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி முறையீட்டை ஏற்று நாளை மறுநாள் விசாரணை நடத்துகிறது உச்ச நீதிமன்றம்!

09 Dec 2019 9 AM

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்கா அழகி!

சோசிபினி துன்சி
சோசிபினி துன்சி

தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி 2019-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அட்லாண்டாவில் நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 2019 மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டுள்ளார்.

புவேர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் ரன்னர்-அப் ஆகவும், மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாவது இடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 26 வயதான வர்திகா சிங் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். ஆனால் அவரால் முதல் 10 இடங்களுக்குள் தகுதி பெற முடியவில்லை.

09 Dec 2019 8 AM

டெல்லி தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து!

உள்ளாட்சித் தேர்தல்!-  ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள்! #NowAtVikatan

வடக்கு டெல்லி, ராணி ஜான்சி சாலையில் உள்ள ஆனஜ் மண்டி பகுதியில் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக தீ பற்றவே அதில் சிக்கி 43 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். இன்றும் இதே தொழிற்சாலை கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. நான்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

`மயங்கிய தொழிலாளர்கள்; அஞ்சிய வீரர்கள்'- டெல்லி தீ விபத்தில் 11 பேரை காப்பாற்றிய `நிஜ ஹீரோ'!
09 Dec 2019 8 AM

கர்நாடக இடைத்தேர்தல் அப்டேட்!

எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா
எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா

கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சிக்காக பதவி விலகிய 15 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. எடியூரப்பா ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. 15 தொகுதிகளில் 12 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. அதில் 9 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை வகித்துவருகிறது. இரண்டு தொகுதிகளில் காங்கிரஸும் ஒரு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் முன்னிலை வகித்து வருகிறது. எடியூரப்பா ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றால் 6 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.