Published:Updated:

கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய அலி.. எமனாக வந்த ஈமான்.. இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்த வங்கதேசம்! #NowAtVikatan

வங்கதேசம்
வங்கதேசம்

9.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

09 Feb 2020 9 PM

கோப்பை கனவை தகர்த்த வங்கதேசம்!

19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து இறுதி போட்டிக்கு தகுதியானது இந்திய அணி. வங்கதேசத்தின் பந்துவீச்சில் திணறிய இந்திய அணியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜெய்ஸ்வால் மறுபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு சிறிது ரன்களை சேர்த்தார். இந்திய அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது.

வங்கதேச அணி 178 என்ற எளிமையான இலக்கினை நோக்கி களமிறங்கியது. சிறப்பான தொடக்கத்தை கொடுத்த அணியின் வீரர்களின் விக்கெட்டுகளை ரவி பிஷ்ணாய் வரிசையாக வீழ்த்தி வங்கதேச அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். அவர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன்பிறகும் சில விக்கெட்டுகள் வீழ்ந்தது. ஆனால் அந்த அணியின் ஓப்பனிங் வீரர் ஈமான் கேப்டன் அக்ஃபர் அலியுடன் சேர்ந்து இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிகொண்டார். இதன்பயனாக அந்த அணியின் ஸ்கோர் சீரான இடைவெளியில் அதிகரித்தது. இடையில் மழை குறுக்கிட 46 ஓவர்களில் 170 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 42.1 ஓவர்களிலேயே அந்த இலக்கை வங்கதேச அணி எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

09 Feb 2020 5 PM

வங்கதேச அணிக்கு 178 ரன்கள் இலக்கு!

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வாலைத் தவிர மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 47.2வது ஓவரிலேயே 177 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் மட்டும் 88 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி தரப்பில் அவிஷேக் தாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

09 Feb 2020 1 PM

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது”என்றார்.

09 Feb 2020 1 PM

ஜூனியர் உலகக்கோப்பையை வெல்லுமா இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கெனவே நான்கு முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்றுள்ள இந்திய அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற ஆவலில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

09 Feb 2020 11 AM

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்திய அணி
இந்திய அணி
Twitter

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா, வங்கதேச அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. போட்செஃப்ஸ்ட்ரோம் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. பிரியம் கர்க் தலைமையிலான இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி, முதல் அணியாக இந்தியா, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜூனியர் உலகக் கோப்பையை இதுவரை 4 முறை வென்றிருக்கிறது.

இந்தநிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகல்கர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அவர், `இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நாட்டுக்காக அந்தக் கோப்பையை வென்று வருவீர்கள் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

09 Feb 2020 10 AM

டிராவிட் பந்துவீச முதல்வர் பேட்டிங் செய்தார்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன், ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி, டிராவிட்
எடப்பாடி பழனிசாமி, டிராவிட்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர். ``புதிய கிரிக்கெட் மைதானத்தை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி; அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்றார். இந்த நிகழ்வின்போது இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்வித்தார்.

பின் செல்ல