Published:Updated:

அவளை கொன்னுட்டேன் சார்... கஞ்சாவால் நடந்த உச்சிமலை கொலை!

மதன், தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
மதன், தமிழ்ச்செல்வி

அவளை எங்கே வைத்துக் கொன்றாய்?” என்று கேட்ட போலீஸாரிடம், ஒரு மலை உச்சியைக் காண்பித் தான் மதன். கோனே அருவிக்கும் மேலே, ஆள் நடமாட்டமில்லாத ஆபத்தான மலை உச்சி அது.

அவளை கொன்னுட்டேன் சார்... கஞ்சாவால் நடந்த உச்சிமலை கொலை!

அவளை எங்கே வைத்துக் கொன்றாய்?” என்று கேட்ட போலீஸாரிடம், ஒரு மலை உச்சியைக் காண்பித் தான் மதன். கோனே அருவிக்கும் மேலே, ஆள் நடமாட்டமில்லாத ஆபத்தான மலை உச்சி அது.

Published:Updated:
மதன், தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
மதன், தமிழ்ச்செல்வி

‘மகளைக் காண வில்லை’ என்ற புகாருடன் செங்குன்றம் காவல் நிலையத் துக்கு, கடந்த 29.6.2022-ம் தேதி வந்தார் புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த பால்கிஸ் என்ற பெண்.

“என் மகள் தமிழ்ச்செல்வி, நான்கு மாதங்களுக்கு முன்பு தான், புழல் பாடியநல்லூரைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் மதனைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டாள். அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தனர். சில நாள்களாக என் மகளின் செல்போனைத் தொடர்புகொண்டால், மதன்தான் எடுத்துப் பேசுகிறான். சந்தேகப்பட்டு 26.6.2022-ம் தேதி வீட்டுக்கே போனேன். வீடு பூட்டியிருந்தது. ஜன்னல் வழி யாகப் பார்த்தால் பொருள்கள் சிதறிக்கிடக்கின்றன. எப்படியாவது, என் மகளைக் கண்டு பிடித்துக் கொடுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் கண்ணீர்மல்கக் கூறினார் அவர். உடனே விசாரணையில் இறங்கியது போலீஸ்.

அவளை கொன்னுட்டேன் சார்... கஞ்சாவால் நடந்த உச்சிமலை கொலை!

“கொன்னுட்டேன் சார்...”

மதன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் செல்போன்களைத் தொடர்புகொண்டபோது ‘சுவிட்ச் ஆஃப்’ என்றது. அவர்கள் வசித்த பகுதியில் விசாரித்தபோது, கடந்த 26.6.2022-ம் தேதி மதனும் தமிழ்ச்செல்வியும் ஆந்திர மாநிலம் கோனே அருவிக்குச் சென்ற தகவல் கிடைத்தது. செல்போன் சிக்னலை ஆய்வு செய்து, அவர்கள் கோனே அருவிக்குச் சென்றதை உறுதிசெய்த போலீஸார், சென்னையில் மதன் பதுங்கியிருக்கும் இடத்தையும் கண்டுபிடித்தனர்.

அவனைப் பிடித்து தமிழ்ச் செல்வி குறித்து விசாரித்தபோது, “அவ ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருக்கா சார்” என்றிருக்கிறான். “எந்த ஃப்ரெண்ட்... பெயர்... ஏரியா?” போன்ற கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதும் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. ‘போலீஸ் பாணி’யில் விசாரித்தபோது, “சார்... கோனே அருவிக்குப் போனப்ப, மலை உச்சியிலவெச்சு அவளைக் கொன்னுட்டேன் சார்” என்று கூறியிருக்கிறான். அதிர்ந்த போலீஸார், மேலதிகாரிகளின் அனுமதியுடன் விசாரணைக்காக மதனை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அவளை கொன்னுட்டேன் சார்... கஞ்சாவால் நடந்த உச்சிமலை கொலை!

ஆபத்தான மலை உச்சி!

இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ அசோக் தலைமையிலான டீம், வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தது. அதில், தமிழ்ச்செல்வியும் மதனும் பைக்கில் கோனே அருவிக்குச் செல்லும் காட்சியும், மாலையில் மதன் மட்டும் தனியாகத் திரும்பிய காட்சியும் பதிவாகியிருந்தன. “அவளை எங்கே வைத்துக் கொன்றாய்?” என்று கேட்ட போலீஸாரிடம், ஒரு மலை உச்சியைக் காண்பித் தான் மதன். கோனே அருவிக்கும் மேலே, ஆள் நடமாட்டமில்லாத ஆபத்தான மலை உச்சி அது. சிரமப்பட்டு அந்த மலை உச்சிக்கு ஏறிச் சென்றால், அங்கே தமிழ்ச்செல்வியின் சடலம் இல்லை. வனவிலங்கு ஏதாவது இழுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதிய போலீஸார் அங்கேயே முகாமிட்டுத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த தமிழ்ச்செல்வியை யாரேனும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், சுற்றுவட்டாரத்திலுள்ள மருத்துவமனைகளில் தமிழ்ச்செல்வியின் போட்டோவைக் காட்டி போலீஸார் விசாரித்தனர். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அவளை கொன்னுட்டேன் சார்... கஞ்சாவால் நடந்த உச்சிமலை கொலை!

கோர்ட் தலையீட்டால் தீவிரமான தேடுதல் வேட்டை!

போலீஸார் மீது அதிருப்தியடைந்த தமிழ்ச் செல்வியின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டனர். அதை விசாரித்த நீதிமன்றம், தமிழ்ச்செல்வியைக் கண்டுபிடித்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, மலை ஏறுவதில் திறமையான 25 பேரை போலீஸார் ஏற்பாடு செய்தனர். அவர்களுடன் போலீஸார் 20 பேர் சேர்ந்துகொண்டு, 45 பேரும் ஐந்து குழுக்களாகப் பிரிந்து தமிழ்ச்செல்வியின் சடலத்தைத் தேடினர். ஆந்திர போலீஸாரும் தேடுதல் வேட்டைக்கு உதவினர். கடைசியில் ஜூலை 31-ம் தேதி, புதர்ப் பகுதியிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து, அங்கே தேடினர். அங்கு பெண்ணின் சடலம் ஒன்று ‘டீகம்போஸ்டு’ ஆகிக் கிடந்தது. வெள்ளை நிற டாப்ஸ், கறுப்பு நிற பேன்ட் அணிந்த எலும்புக்கூடாக அது இருந்தது. கால் முழுமையாக அழுகிவிட்டதால், அதனருகே ஒரு விரலில் மெட்டியும், மண்டை ஓட்டுக்கருகே கம்மலும் கிடந்தன. சற்றுத் தள்ளி அவரது செருப்பும் கிடந்தது. இதையடுத்து ஆந்திர மாநில போலீஸார் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். அது தமிழ்ச்செல்விதான் என்று மதனும், பெற்றோரும் அடையாளம் காட்டினாலும் சடலமாக மீட்கப்பட்டது தமிழ்ச்செல்விதானா என்பதை உறுதிசெய்ய டி.என்.ஏ பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

ஆபத்தில் முடிந்த கஞ்சா பழக்கம்

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட செங்குன்றம் போலீஸாரிடம் பேசினோம். ``மதனுக்கு 9 வயதாக இருக்கும்போது அவனுடைய அப்பாவும் அம்மாவும் ஒரே நாளில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். அந்த மன பாதிப்பு மதனுக்கு இருக்கிறது. அவனின் பெரியப்பாதான் அவனைப் படிக்க வைத்திருக்கிறார். அன்புக்காக ஏங்கிய மதன், தமிழ்ச்செல்வியைக் கரம் பிடித்த பிறகு அவள்மீது அதீத பாசத்தைக் காட்டியிருக்கிறான். அதற்குத் தடையாக அவனது கஞ்சா போதை இருந்திருக்கிறது. கஞ்சா பழக்கத்தை விட்டுவிடும்படி தமிழ்ச்செல்வி அன்பாகவும் அதிகாரமாகவும் வலியுறுத்திவந்திருக்கிறார். ஆனால் மதனால் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை.

அவர்கள் தங்கியிருந்த வீட்டருகே விசாரித்தபோது தமிழ்ச்செல்விக்கு உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்திருப்பது தெரியவந்தது. ஆனால், கஞ்சாவுக்கு அடிமையானதால் மதனுக்கு செக்ஸிலோ, குழந்தை பெற்றுக்கொள்வதிலோ நாட்டம் இருக்கவில்லை.

அவளை கொன்னுட்டேன் சார்... கஞ்சாவால் நடந்த உச்சிமலை கொலை!

கீ் செயின் கத்தி!

இந்தச் சமயத்தில்தான் இருவரும் பைக்கில் கோனே அருவிக்குச் சென்றுள்ளனர். அங்கே ஆள் நடமாட்டமில்லாத மலை உச்சியில் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே குழந்தை பெற்றுக்கொள்வது, கஞ்சா போதை தொடர்பாகச் சண்டை வந்திருக்கிறது. அப்போது, “மேரேஜ் ஆகி இத்தனை நாளாகியும் ஒரு விசேஷமும் இல்லை. இங்கே வந்து மட்டும் என்ன பண்ணப்போறே?” என்று மதனின் இயலாமையைக் குத்திக்காட்டிப் பேசியிருக்கிறார் தமிழ்ச்செல்வி. ஆத்திரமடைந்த மதன், “இப்படியெல்லாம் பேசினா நான் இங்கேயே கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வேன்” என்றிருக்கிறான். தமிழ்ச்செல்வி அதைக் கண்டுகொள்ளாமல் திரும்பி நடந்திருக்கிறார்.

ஆத்திரமடைந்த மதன், கீ செயின் கத்தியால் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் குத்தியிருக்கிறான். ரத்தம் வழிந்த நிலையில், “என்னடா இப்படிப் பண்ணிட்டே?” என்று அதிர்ச்சியாகி மயங்கி விழுந்திருக்கிறார் தமிழ்ச்செல்வி. பயந்துபோன மதன், தமிழ்ச்செல்வி இறந்துவிட்டதாகக் கருதி அவள் மேல் செடி கொடிகளைப் போட்டுவிட்டு கீழே இறங்கி தலைமறைவாகிவிட்டான். சரியான இடத்தை மதன் காட்டாததாலும், ஆபத்தான மலையாக இருந்ததாலும் தேடுதல் வேட்டை ஒரு மாதம் நீடித்தது. ஆந்திர போலீஸார் டி.என்.ஏ ரிசல்ட் மற்றும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறார்கள். முடிவுகள் வந்ததும் மதனை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம்” என்றனர்.

கஞ்சா பழக்கத்தால் தன்னையும் கெடுத்து, தன்னை நம்பி வந்த காதலியின் வாழ்க்கையையும் முடித்த மதனின் கதை, போதையை நாடும் இளைஞர்களுக்கு ஒரு பாடம்!