Published:Updated:

இமாசலப் பிரதேசத்தில் கனமழை: கட்டடம் இடிந்து விழுந்ததில் ராணுவ வீரர் உட்பட இருவர் பலி

ராம் பிரசாத்

இமாசலப் பிரதேசத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கட்டடம் இடிந்து விபத்து
கட்டடம் இடிந்து விபத்து

இமாசலப் பிரதேசம் சோலான் மாவட்டத்தில், நேற்று மதியம் கனமழை பெய்தது. மழையின் காரணமாகக் குமர்ஹாட்டி - நஹன் சாலையில் இருந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், ராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மதிய உணவு உண்பதற்காக ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அங்குள்ள தாபாவில் இருந்துள்ளனர். மழையின் காரணமாகவே அவர்கள் தாபாவுக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் கட்டடம் இடிந்துவிழுந்துள்ளது.

விபத்து
விபத்து

இந்த விபத்து தொடர்பாக, உடனடியாகப் பேரிடர் மேலாண்மைக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்தவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 23 ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை உயிருடன் மீட்டுள்ளனர். அதில், ராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.