Published:Updated:

“என் முகத்தை விற்க விரும்பவில்லை!”

 ஏகாதசி
பிரீமியம் ஸ்டோரி
ஏகாதசி

“ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்தப் போல...தொட்டில் கட்டித் தூங்க, தூளி கட்டி ஆடஆத்துல மீன் புடிக்க அப்பனுக்குத் தல தொவட்ட...”

“என் முகத்தை விற்க விரும்பவில்லை!”

“ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்தப் போல...தொட்டில் கட்டித் தூங்க, தூளி கட்டி ஆடஆத்துல மீன் புடிக்க அப்பனுக்குத் தல தொவட்ட...”

Published:Updated:
 ஏகாதசி
பிரீமியம் ஸ்டோரி
ஏகாதசி

சின்ன கிராமத்தில் நடந்த கலை இரவில் நள்ளிரவைக் கடந்த நேரம். இந்தப் பாடலை, பாடகர் ஜீவனுணர்ந்து பாடுகிறார். நடுத்தர வயதுடைய ஒருவர், அவ்வளவு கூட்டத்தின் மத்தியிலும் விம்மி விம்மி அழுகிறார். அந்தளவு இந்தப் பாடல் ஏராளமானவரை உணர்ச்சிவசப்படச் செய்துவிடும். இந்தப் பாடலை எழுதியவர் ஏகாதசி. இதுபோன்ற தனிப்பாடல்களோடு சினிமாப் பாடல்களையும் எழுதி வருபவர். ஒத்த சொல்லால (ஆடுகளம்), கோணக்கொண்டைக்காரி (மதயானைக் கூட்டம்), கம்பத்துப் பொண்ணு (சண்டைக்கோழி-2), கத்தரிப் பூவழகி (அசுரன்) உள்ளிட்டவை இவரின் ஹிட் லிஸ்ட். இரண்டு வகைகளிலும் எளிய மக்களின் மகிழ்ச்சியை, இழப்பைப் பதிவு செய்பவர். மழைக்கான அறிகுறி யோடிருந்த மாலை நேரத்தில் அவரோடு பேசினேன்.

“மதுரைக்குப் பக்கத்தில் உள்ள பணியான் என்ற குக்கிராமம்தான் என் ஊர். கூலித்தொழிலாளியின் பிள்ளை. அம்மா பேரு பூவாயி. ரொம்பக் கஷ்டப்பட்டுதான் வளர்த்தாங்க. சின்ன வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம். ப்ளஸ் டூ முடித்ததுமே, தமுஎகச-வில் சேர்ந்துட்டேன். அங்கேதான் பல எழுத்தாளர்களைச் சந்திக்கவும் என்ன மாதிரியான புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன். மனைவி சலோமி. ஜாதி, மதம், இனம், மொழி கடந்த காதல் திருமணம். மகன் கவிராஜன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 “என் முகத்தை விற்க விரும்பவில்லை!”

`` ‘ஆத்தா உன் சேல’ பாடல் உருவான கதை?’’

“சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் ராஜுமுருகன் கட்டுரையில் கிராமத்துத் தாய் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும், என் அம்மாவின் ஞாபகம் அதிகமாகிவிட்டது. நிமிர்ந்து சோம்பல் முறிக்கக்கூட முடியாத குடிசைதான் என் வீடு. அம்மாவின் பழைய சேலைகளை வைத்துத் தைத்தது என் தலையணை. போர்த்திக்கொள்ளவும் அம்மாவின் சேலைதான். அதை வைத்தே எழுதின பாட்டுதான் அது. கரிசல் கருணாநிதிதான் உடனே அதுக்கு மெட்டு அமைத்தார். திருவுடையான் பல மேடைகளில் பாடியது எனக்குப் பெருமை. அதைக் கேட்டு மக்கள் அழுவதும், பாடகருக்கு அன்பளிப்பாகப் பரிசுகள் தருவதும் இப்பவும் நடக்கிறது.”

“டிவியில் இசை நிகழ்ச்சிகளில்கூடப் பாடினார்கள் இல்லையா?”

“ஆமாம், செந்தில் கணேஷ் முதலில் பாடும்போது என் பெயரைச் சொல்லவில்லை. பலரும் அதற்கு வருத்தப்பட்டு எதிர்வினையாற்றினார்கள். அடுத்த முறை ராஜலட்சுமி, ‘அப்பா கையப் புடிச்சு நடந்தா தெரு அழகாக மாறும்’ பாட்டைப் பாடும்போது பெயரைச் சொன்னார். இந்தப் பாட்டைக் கேட்டு, முப்பது வயது பெண் ஒருவர், ‘உங்களை அப்பான்னு கூப்பிடவா?’ என்று கேட்டார். நான் சந்தோஷமாக ‘சரி’ என்றேன்.’’

“சினிமாவுக்குள் வந்தது பற்றி...”

`` இயக்குநராக வேண்டும் என்பதுதான் இலக்காக இருந்தது. ஏனோ சினிமா உலகம் பாட்டு எழுதுபவர்களுக்கு கமர்ஷியல் படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறது. அதனாலேயே சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்ததும் பாடலாசிரியர் முகத்தை மறைத்துவிட்டேன். ‘வெயில்’ படத்தில் சின்னப் பாட்டு ஒன்றுஎழுதும்போதே ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் கிடைத்தது. அது அசுரன் வரை தொடர்கிறது. அவள் பேர் தமிழரசி, ஆடுகளம், ஈட்டி எனப் பல படங்களில் பாடல்களை எழுதினேன். `ஒத்த சொல்லால' பாடல் எனக்குப் பெரிய வெளிச்சம் கொடுத்தது.''

“பல ஹிட் பாடல்கள் எழுதியும் உங்கள் மீது வெளிச்சம் விழாததற்கு என்ன காரணம்?”

“ஒரு பாடலை எழுதுகிறேன். அதற்குப் பணம் வாங்கிக்கொள்கிறேன். அதைத்தாண்டி வேறெந்த விளம்பரத்தையும் நான் செய்துகொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், என் முகத்தை விற்க விரும்பவில்லை. இதுதான் என் ப்ளஸ்ஸும் மைனஸ்ஸும். ஆனால், இதில் ஒரு நேர்மை இருக்கு என நம்புகிறேன்.”

“படம் இயக்கிய அனுபவம்...”

“ `கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ எனும் படத்தை இயக்கினேன். இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன் எனப் பலரின் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. தற்போது ‘அருவா’ என்ற படத்தை இயக்கிவருகிறேன்.