உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-லிருந்து 34-ஆக உயர்த்தப்பட்டு அரசமைப்புச் சட்டமும் திருத்தப்பட்டுவிட்டது. ஆனால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இடங்களில் நியமனம் செய்வதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பெயர்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு, தற்போது இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதியாக இருக்கும் ராமசுப்பிரமணியம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு தற்போது ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரவீந்திரபட் ஆகிய இருவரும் அகில இந்திய நீதிபதிகள் முதுநிலைப் பட்டியலில் இளையவர்கள். மேலும், அவர்கள் நியமனம் செய்யப்பட்ட உயர் நீதிமன்றத்திலேயே அவர்களைவிட மூத்த நீதிபதிகள் இருக்கிறார்கள். இப்படியான சூழலில் இவர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருக்கக் கூடாது’ என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி, இதுதொடர்பான தனது ஆட்சேபனைக் கடிதத்தில், ‘நீதிபதி ராமசுப்பிர மணியத்தைவிட மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகர் (சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமனம் பெற்றவர்) மூத்தவர். அதனால் அவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என எழுதியிருப்பதாக பத்திரிகைக் குறிப்புகள் கூறுகின்றன. அதேபோல், நீதிபதி ரவீந்திரபட் நியமனத்திலும் சர்ச்சை எழுந்துள்ளது. ‘உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் டெல்லியில் நியமனம் பெற்ற இரு நீதிபதிகள் அவரைவிட மூத்தவர்கள். எனவே, அவர்களை முதலில் பரிந்துரைக்க வேண்டும்’ என அதே செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.

உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நியமிக்கப்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட நியமனங்களைச் செய்ய கொலிஜியம் தவிர்த்த ஒரு நியமன அமைப்பை உருவாக்க வேண்டும்.

நியமனம் எப்படி நடக்கிறது?

கேட்பதற்கு இந்தக் கூற்று நியாயமாகத் தோன்றினாலும், உண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எப்படி நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில், ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதுநிலைப் பட்டியல்படிதான் நியமிக்கப்பட வேண்டும்’ என்று எங்கும் கூறப்படவில்லை. ‘பிரிவு 124(2)-ன் கீழ், குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், அதன் தலைமை நீதிபதியையும் கலந்தாலோசித்து நியமனம் செய்யலாம்’ என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பிரிவு 74-ல் ‘குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் செயல்பட முடியும்’ என்றும் கூறுகிறது. இதனால் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர மத்திய அரசின் ஆலோசனையையும் கேட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இப்படி அரசு மற்றும் நீதிமன்றம் ஆகிய இரு அதிகார நிலைகளின்கீழ் நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததை நீதிபதிகள் நான்கு தீர்ப்புகள் மூலம் மாற்றிவிட்டனர். முதல் மூன்று நீதிபதிகள் இந்த நியமனம் சார்ந்த தீர்ப்புகளில், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைத்த பெயர்களை அரசு கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்கள். ஆனால், தலைமை நீதிபதி சுயேச்சையாகச் செயல்பட்டால் அது ஏதேச்சதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்பதால் மூத்த நீதிபதிகள் குழுவின் (கொலிஜியம்) பரிந்துரைப்படி நியமன முறையை நீதிமன்றமே உருவாக்கியது.

இதன்மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர முதல் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியமும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், தலைமை நீதிபதி தவிர முதல் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய ஐவர் குழுவும் பரிந்துரைக்கும் என்றும் நீதிமன்றம் வரையறுத்தது. இப்படிப்பட்ட நியமன முறை எந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. தவிர, நீதிமன்றமே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் முறையை அரசியல் சட்டம் வகுக்கப்பட்டபோது ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ரத்தான சட்டத்திருத்தம்!

இப்படிப்பட்ட புதிய நடைமுறையால் பல சிக்கல்கள் தோன்றின. தகுதியில்லாத பலரையும் நியமிக்கும் சூழல் ஏற்பட்டது. கொலிஜிய நியமன நடைமுறையில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் ஏற்கெனவே பதவியிலுள்ள நீதிபதிகளின் உறவினர்களாகவும், மூத்த வக்கீல்களின் சொந்தக்காரர்களாகவும், சாதிக்காரர்களாகவும் நியமிக்கப்பட்டது விமர்சனங்களை உருவாக்கியது. இதற்காக அரசமைப்புச் சட்டம் 99-வது திருத்தத்தின்படி (2015) தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்கப்பட்டது.

இதன்படி ஒரு நிரந்தர நியமன ஆணையம் செயல்படுவதுடன் கலந்தாலோசிக்கும் குழுவும், பெயர்களைப் பரிந்துரைக்கும் குழுவும் தனித்தனியாக அமைக்கப்பட்டன. ஒரு பரந்துபட்ட ஆலோசனை பெறுவதற்கும், நியமனம் விரும்புபவர்கள் நேரடியாக தங்கள் பெயர்களை ஆணையத்துக்கு அனுப்புவதற்கும் வழி செய்யப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தச் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் தனது நான்காவது தீர்ப்பின்படி ரத்துசெய்துவிட்டது (2015). மறுபடியும் கொலிஜிய நியமன நடைமுறையைக் கொண்டுவந்ததுடன், ‘இது நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடு’ என்று கூறப்பட்டது.

ஆனால், இன்று உயர்மட்ட நீதிமன்றங்கள் எந்தளவுக்கு சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பது கேள்விக்குறியே. காஷ்மீரில் இருக்கும் தன் தாயைச் சந்திப்பதற்கு மகள் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுச் செல்வது கேலிக்கூத்து. அதைவிட அபத்தம் மகள் தனது சொந்த மாநிலத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது ‘ஸ்ரீநகர் மிகவும் குளிராக இருப்பதால் போக வேண்டாம்’ என்று தாயுள்ளத்துடன் தலைமை நீதிபதி அறிவுரை வழங்கியது. இது எப்படியிருக்கிறது என்றால், 1975-ல் நெருக்கடி நிலைமையின்போது ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றி மிசா சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப் பட்டார்கள். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி, ‘அரசை குறை கூற வேண்டாம். சிறைக்கைதிகள் தாயின் பரிவுடன் பார்த்துக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார். தற்போது மீண்டும் ஒரு நெருக்கடிநிலை உருவாக்கப் பட்டுள்ளதுடன், அதை கேள்வி கேட்கும் நீதிமன்றங்கள் தங்களது அரசியல் சட்ட கடமையைச் செய்ய மறுக்கிறார்களோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.

என்றைக்குமே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் எந்த வரையறைக்கும் உட்பட்டு நடந்த தில்லை. அகில இந்திய நீதிபதிகள் முதுநிலைப் பட்டியல் மற்றும் மாநிலப் பிரதிநிதித்துவமும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. இன்றைக்கு பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங் களுக்கு அங்கு பிரதிநிதித்துவம் இல்லாதபோது பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து மட்டும் பதவி உயர்வு செய்யப்பட்ட ஐந்து நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள். பலமுறை மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் முதுநிலைப் பட்டியலில் நான்காவது நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டு அவரின் சீனியர்களான மூன்று நீதிபதிகள் ஓரங்கட்டப்பட்டனர். அதைவிட கேலிக்கூத்து, அவரது நியமனத்தால் ஓரங்கட்டப்பட்ட நீதிபதி ரவீந்திரபட் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சென்னை உதாரணங்கள்!

சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நியமிக்கப் பட்ட நீதிபதிகளிலும் இதுபோன்ற உதாரணங்கள் உண்டு. நீதிபதி கற்பக விநாயகம் புறக்கணிக்கப்பட்டு நீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற நீதிபதியானதுடன், தலைமை நீதிபதி பொறுப்பையும் வகித்தார். நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா நியமனத்தால், நீதிபதி முருகேசன் ஓரங்கட்டப்பட்டார். இன்றைக்கு முதுநிலைப் பட்டியல்படி தான் நியமனம் செய்ய வேண்டும் என்று கூறக்கூடிய சிலர் முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் அப்படிப் பட்ட நடைமுறை வகுக்கப்படாதது டன், மரபுரீதியான வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டதில்லை.

அப்படி ஆட்சேபிப்பவர்களிடம் எனது கேள்வி ஒன்று உண்டு. உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்ட நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், கேரள உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியலில் சீனியர் அல்ல. ஏழு ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றி கேரள உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர், மத்திய சட்ட ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பிறகு ஓராண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தின்போது கண்டனம் எழுப்பிய சொலி சொராப்ஜி உள்ளிட்ட மூத்த வக்கீல்கள், பிறகு கிருஷ்ணய்யரைப் பாராட்டினார்கள்.

உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நியமிக்கப்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட நியமனங்களைச் செய்ய கொலிஜியம் தவிர்த்த ஒரு நியமன அமைப்பை உருவாக்க வேண்டும். மாறாக, அரசு அதிகாரிகள் நியமனம்போல் முதுநிலைப் பட்டியலின்படி நியமனம் செய்யப் பட்டால் உச்ச நீதிமன்றத்தின் உண்மையான நோக்கமே தோற்கடிக்கப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் என்பது, நீதிபதிகளின் பதவி உயர்வுக்கானது அல்ல. அது, குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் அமைப் பாக விளங்க வேண்டும். அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசித்து ஒரு புதிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்கினால் மட்டுமே சச்சரவுகள் நீங்கும்.