ஆரா, மனிதவள நிபுணர்

ஒன்பது மணி நேர வேலை, உணவு உட்கொள்ளும் கலோரி அளவு உள்ளிட்ட ஆறு அளவுகோல்களைக்கொண்டு குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மத்திய அரசு பரிந்துரைக்கும் வரைவு விதிகள் புதிதாக இயற்றப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கான பணிகள் மத்திய அரசால் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் தற்போது ஒரு வரைவு சட்டம் அமலுக்கு வரப்போகிறது. பல தொழிலாளர் சட்டங்கள் 50 வருடங்களுக்கு முற்பட்டவை.

44-க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி, நான்கு பிரிவுகளுக்குள் கொண்டுவர நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. தற்போது அதற்கான நடவடிக்கைகளில் இறங்க தொழிலாளர் அமைச்சகம் முடிவுசெய்திருக்கிறது. இந்தச் சட்டங்கள் 50 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை குறித்த பல்வேறு அம்சங்களை நிர்ணயிப்பதாக அமையும்.

நான்கு சட்டங்கள்

ஏற்கெனவே இருக்கும் பல சட்டங்கள் நான்குவிதமான சட்டங்களாக மாற்றப்படவிருக்கின்றன. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, ஊதியக் கொடுப்பனவு சட்டம் 1936, போனஸ் செலுத்தும் சட்டம் 1965, சம ஊதியச் சட்டம் 1976 ஆகியவை அந்த நான்கு சட்டங்கள். ஊதியங்கள் குறித்த குறியீட்டின்கீழ் தொடர்புடைய இந்தச் சட்டங்களை இணைப்பதன் மூலம் ஊதியங்களின் வரையறையைச் சீராக்கத் திட்டமிட்டிருக்கிறது தொழிலாளர் அமைச்சகம்.

தற்போது இந்த அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் மத்திய ஊதிய விதிகளின் முதன்மை வரைவு ஒன்பது மணி நேர வேலையையும், 2,700 கலோரிகள் நிகர உட்கொள்ளலையும் முன்வைத்திருக்கிறது. இருந்தாலும், அது தள ஊதியத்தை முன்மொழியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொழிலாளர் அமைச்சகம் கருத்துகளைக் கோரியிருக்கிறது. அவை டிசம்பர் 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆறு அளவுகோல்கள்

குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதற்கான ஆறு அளவுகோல்களைப் பரிந்துரைக்கின்றன வரைவு விதிகள். அவை, சம்பாதிக்கும் தொழிலாளியைத் தவிர ஒரு துணை மற்றும் இரண்டு குழந்தைகளைக்கொண்ட மூன்று பேரை உள்ளடக்கிய தொழிலாளர் வர்க்கக் குடும்பம்; ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2,700 கலோரிகள் நிகர உட்கொள்ளல்; குடும்பத்துக்கு ஆண்டுக்கு 66 மீட்டர் துணி; வீட்டு வாடகைச் செலவு, உணவு, ஆடை செலவினங்களில் 10%; எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர செலவினங் களுக்கு 20%; குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள், அவசரச் செலவு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு 25%. இவை அனைத்தையும் கணக்கில்கொண்டு குறைந்தபட்ச ஊதியம் உருவாக்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஊதியம்

மத்திய அரசு, ஊதியத்தின் அடிப்படை விகிதத்தை நிர்ணயிப்பதற்கான ஒரு வாரியத்தை அமைக்கும். அந்த வாரியம் பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச வாழ்க்கைத்தரத்தைப் பரிந்துரைக்கும். மத்தியக்குழுவில் ஐந்து மாநிலங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. அதன் பரிந்துரைகள், மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும். இந்த அடிப்படை விகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்படலாம். ஒரு நாளுக்கான ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டவுடன், ஒரு மணி நேர ஊதியத்தைக் கணக்கிட அந்தத் தொகை எட்டால் வகுக்கப்படும்.

பஞ்சப்படி (DA)

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளுக்கு முன்னர் அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலவரப்படி, மதிப்பீடு செய்யப்பட்டு பஞ்சப்படி அறிவிக்கப்படுகிறது. புதிய வரைவு அறிக்கை பெருநகரம், நகரம் மற்றும் கிராமப்புறங்கள் என வகைப்படுத்தப்படுகிறது. தொழில்நுட்பக்குழு, தொழிலாளர்களின் வகைப்பாட்டை திறன் தேவையை வைத்து நான்கு வகைகளாகப் பிரிக்கிறது. அவை,

1) திறன் தேவைப்படாத வேலைகள் 2) குறைந்த திறன் தேவைப்படும் வேலைகள் 3) திறன் தேவைப்படும் வேலைகள் 4) அதிக திறன் தேவைப்படும் வேலைகள்.

இந்த நான்கு பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டிய தொழில்களின் பட்டியலையும் முன்வரைவில் வழங்கியிருக்கிறது. இந்த முன்வரைவு, `ஒன்பது மணி நேரத்தை ஒரு சாதாரண வேலை நாளாக வரையறுக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்துள்ளது. ‘ ‘நைட் ஷிஃப்ட்’ என்பது ஒரு ஷிஃப்டில் பணிபுரியும் ஓர் ஊழியரை நள்ளிரவுக்கு அப்பால் நீட்டிப்பது’ என்றும், `ஒரு வாரம் இரவு ஷிஃப்ட் தொடர்ந்து செய்தால், ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகே பகல் ஷிப்ட்டுக்கு மாற்ற வேண்டும்’ என்றும் பரிந்துரைக்கிறது.

ஊதியத்தை நிர்ணயிக்கும் சட்டங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் யார் என்பதை சரியாக வரையறை செய்யாதது; ஊதியச் சட்டத்தில் ரூ.24 ஆயிரம் அதிகபட்ச அளவாக இருந்ததை ரத்துசெய்து எல்லா ஊதியம் பெறுவோரையும் கொண்டுவந்தது; சம்பளம் என்பதை வரையறுக்கும்போது இரண்டு பிரிவுகளாகக் கொண்டுவந்து தொழில்முனைவோரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது போன்ற குளறுபடிகளுடன் நடைமுறைக்கு வரப்போகின்றன.