Published:Updated:

'ஒரு காகிதம், இரு சாட்சியம்..!' - நாமினி நியமனம் முதல் 'உயில்' நடைமுறைகள் வரை!

உயில்
உயில்

உயில் எழுதுபவர்களைவிட சாட்சிகள் வயது குறைந்தவர்களாகவும் ஏதேனும் சட்டச் சிக்கல் எழும்போது நீதிமன்றம் வந்து, உயிலின் உண்மைத்தன்மை குறித்த சாட்சி சொல்பவர்களாகவும் இருக்க வேண்டும்

வரலாறு காணாத கொரோனாவின் கோரத்தாண்டவம், நமக்குள் பல சிந்தனைகளை எழுப்பியிருக்கிறது. சொல்லப்போனால், சம்பாதிப்பவர்களைவிட சம்பாதிப்போரைச் சார்ந்து வாழும் குடும்பத்தாரிடையே கொரோனாவின் தாக்கம் கவலையை விதைத்திருக்கிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் எடுக்க வேண்டிய நடவடிக்கை ஒன்று உண்டு. அது, 'வாரிசு நியமனம்' என்று சொல்லப்படும் நாமினி நியமனம். முக்கியமான இந்த விஷயத்தை நாம் செய்தே ஆக வேண்டும், அப்படிச் செய்ய முற்படும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

பொதுவாக, சொத்து, சேமிப்பு, முதலீடு, காப்பீடு, அன்யூட்டி, பென்ஷன், குடும்ப பென்ஷன், கிராஜுவிட்டி எனப் பல வகையான நிதி ஆதாரங்களைக் குடும்பத் தலைவருக்கு அடுத்து அவருடைய வாரிசுகள் பெறுவதில் பலவிதமான விதிமுறைகள் உள்ளன.

இந்த நிலையில் சிந்தும் வியர்வையைச் சிறிதும் பொருட்படுத்தாமல் உழைத்துச் சம்பாதிப்பவருக்கு, எதிர்பாராதவிதமாக இயற்கை நியதியான மரணம் சம்பவிக்கும்பட்சத்தில், அவர் கஷ்டப்பட்டுச் சேர்த்த நிதியும் சொத்தும் அவருடைய வாரிசுகளுக்கு அவரின் விருப்பப்படியே போய்ச் சேர, அவர் தனது ஆயுள் காலத்திலேயே 'இன்னாருக்கு இன்ன நிதியத்தில், இவ்வளவு பங்கு' என்று வாரிசு நியமனம் செய்துவைக்க வேண்டியது அவசியம். இதை அனைவரும் உணர வேண்டிய காலகட்டம் இது.

உயில்
உயில்

எனவே, வாரிசு நியமனம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளிலுள்ள நிதியும் சொத்துகளும், தனக்குப் பிறகு தனது சந்ததியினருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதில் குறைபாடு மற்றும் முறைகேட்டைத் தவிர்க்க வாரிசு நியமனம் செய்வதற்கு, இன்றைய தேதி வரை திருத்தம் செய்யப்பட்டுள்ள விதிகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

வங்கி டெபாசிட், காப்பீட்டுத் திட்டங்கள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் நியமன முறை வேறுபட்டதாக இருப்பதால் சற்றே கூடுதல் கவனத்துடன் நியமனம் செய்வதும், உயில் எழுதிவைப்பதும்கூட அவசியமாகிவிடுகிறது.

கஷ்டப்பட்டுச் சேர்த்துவைத்த சொத்தைச் சந்ததியினர் சண்டை சச்சரவின்றி நிம்மதியாக அனுபவிக்க வேண்டுமெனில், வாரிசுதாரர்களைத் தெளிவாக, எந்தக் குழப்பமும் இன்றி, நியமிப்பது அவசியம். கோவிட் 19-க்குப் பிறகு திடீர் மரணங்கள் ஏற்படும் நிலையில், வாரிசு நியமனம் குறித்து தெளிவாக அறிந்து செயல்படுவது நல்லது!

- குடும்ப பென்ஷன், கிராஜுவிட்டி, கம்யூடேஷன், விடுப்புச் சம்பளம், வங்கி டெபாசிட்டுகள், காப்பீட்டுத் திட்டங்கள், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகிய அனைத்திலும் வாரிசு நியமனம் குறித்து தெளிவாக அறிந்து செயல்பட உதவும் முழுமையான கைடன்ஸ் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2BfXmmp > சொத்து, நிதி... நாமினி நியமனம் ஏன் அவசியம்? - விரிவான விளக்கம் https://bit.ly/2BfXmmp

உயில்... 'ஒரு காகிதம், இரு சாட்சியம்..!'

"உயில் எழுதுவது அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது என்பதைவிட உயில் எழுத வேண்டியது குறித்த சிந்தனை பலருக்கும் தோன்றியிருக்கிறது. குறிப்பாக, இளைஞர்களும் நடுவயதுக்காரர்களும் இது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கிறார்கள். கொரோனா காலத்தில் நிகழும் மரணங்கள் அந்த முடிவுக்கு அவர்களைத் தள்ளுகின்றன.

பொதுவாக, நம் நாட்டில் பொது சிவில் சட்டம் இல்லை. எனவே, அவரவர் சார்ந்த மதத்தின் அடிப்படையிலுள்ள சொத்துரிமைச் சட்டங்களே பேணப்பட்டு வருகின்றன...

'ஒருவர் உயில் எழுதத் தேவை, ஒரு காகிதமும் இரண்டு சாட்சியங்களும் மட்டுமே. முத்திரைத் தாள்கள்கூடத் தேவையில்லை' என்கிறது சட்டம். வெறும் வெள்ளைப் பேப்பரில் தன் விருப்பத்தை எழுதி, அதில் எழுதியவர் கையெழுத்திட வேண்டும். அவரின் நம்பிக்கைக்குரிய இருவரின் சாட்சிக் கையொப்பங்களையும் பெற வேண்டும்.

உண்மையில், உயிலிலிருக்கும் செய்திகளை சாட்சிகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், உயில் எழுதுகிறபோது எழுதியவர் நல்ல மனநிலையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்துவதே சாட்சியங்களின் பணி.

உயில்
உயில்

பொதுவாக, உயில் எழுதுபவர்களைவிட சாட்சிகள் வயது குறைந்தவர்களாகவும் ஏதேனும் சட்டச் சிக்கல் எழும்போது நீதிமன்றம் வந்து, உயிலின் உண்மைத்தன்மை குறித்த சாட்சி சொல்பவர்களாகவும் இருக்க வேண்டும். நம் சட்டப்படி இதைப் பதிவு செய்ய வேண்டும் என்றுகூட அவசியமில்லை. ஆனால், சட்டப்படி முற்றிலும் பாதுகாப்பான ஓர் ஆவணத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

- உயில் என்பது என்ன, யாரெல்லாம் உயில் எழுதலாம், அதற்கான நடைமுறைகள் என்னென்ன ஆகியவை குறித்து வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி அளித்த விரிவான விளக்கத்தை வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3eR5kAo > சிக்கலைத் தவிர்க்கும் உயில்..! - எழுதும் நடைமுறைகள்! https://bit.ly/3eR5kAo

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு