Published:Updated:

விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஆண்; பாதிக்கப்பட்டவர் ஏர் இந்தியாவுக்குக் கடிதம்!

விமானம்
News
விமானம் ( மாதிரிப்படம் )

விமானப் பயணத்தின்போது ஆண் பயணி ஒருவர், குடிபோதையில் மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், வயதான மூதாட்டி டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஆண்; பாதிக்கப்பட்டவர் ஏர் இந்தியாவுக்குக் கடிதம்!

விமானப் பயணத்தின்போது ஆண் பயணி ஒருவர், குடிபோதையில் மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், வயதான மூதாட்டி டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Published:Updated:
விமானம்
News
விமானம் ( மாதிரிப்படம் )

டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானம் ஒன்றில், ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் வயதான பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 26-ம் தேதி, ஏர் இந்தியாவின் நியூயார்க் - டெல்லி விமானத்தில், 70 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர், முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், வயதான மூதாட்டி டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Representational Image
Representational Image

அக்கடிதத்தில், ``விமானத்தில் உணவு கொடுத்த பின்னர் லைட் அணைக்கப்பட்டது. அப்போது, குடிபோதையில் ஆண் ஒருவர் சுயநினைவு இல்லாமல் வந்து நின்று என் மீது சிறுநீர் கழித்தார். என் உடை, ஷூ, பை எல்லாம் நனைந்துவிட்டது. நான் அதிர்ச்சியாகி புகார் செய்தபோது, பணிப்பெண் வந்து பார்த்துவிட்டு, என் உடைமைகளில் கிருமி நாசினியை தெளித்தார். ஆரம்பத்தில், அவர் என் பையை தொட மறுத்தார். மேலும், `நீங்களே உங்கள் ஷூக்களை எடுத்துச் சென்று பாத்ரூமில் சுத்தம் செய்யுங்கள்’ என்றார். நானே என் பையை எடுத்து உள்ளிருந்த பொருள்களை செக் செய்ய ஆரம்பித்ததும்தான் உதவிக்கு வந்தார்.

எனக்கு மாற்று உடையும், செருப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த இருக்கையில் அமர விருப்பமில்லாமல், 20 நிமிடங்கள் கழிவறை பக்கத்தில் நின்றுகொண்டு இருந்தேன். எனக்கு இருக்கை கொடுக்குமாறு கேட்டேன். இருக்கை இல்லை என்று கூறினர். அதன் பிறகு ஒரு மணி நேரம் விமானப் பணியாளர் இடத்தில் அமர்ந்தேன். மீண்டும் இரண்டு மணி நேரம் என் இருக்கையில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் வேறு இடம் கொடுக்கப்பட்டது. ஐந்து மணி நேரம் அங்கே அமர்ந்தே பயணித்தேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விமானம்
விமானம்

டெல்லியைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி பேசுகையில், ``எங்களுக்கு டிசம்பர் 28-ம் தேதிதான் புகார் வந்தது. அதுவும் புகாரை முழுமையாக ஏர் இந்தியா கொடுக்கவில்லை. அந்த மூதாட்டியைத் தொடர்புகொண்டு புகாரை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் அவர் ஊரில் இல்லை. மூதாட்டி கொடுத்த முழுமையான புகாரை, ஏர் இந்தியாவிடமே பெற்றுக்கொண்டோம். தவறு செய்த நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ``சிறுநீர் கழித்த ஆண் 30 நாள், அல்லது விசாரணைக் குழுவின் இறுதி முடிவு வெளிவரும் வரை விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதி இல்லை. சிறுநீர் கழித்த நபர் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.