Published:Updated:

காதலித்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்! - கடிதம், புகைப்படங்களுடன் ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்

காதல் தோல்வியால் ஒட்டிய போஸ்டர்

காதலித்த பெண் வேறொருவரை மணக்கவிருப்பதை அறிந்து காதலன் ஆத்திரமடைந்தார். அதனால் காதலியுடன் எடுத்த புகைப்படம், அவர் கொடுத்த காதல் கடிதம் ஆகியவற்றை போஸ்டர் அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியதால் பரபரப்பு.

காதலித்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்! - கடிதம், புகைப்படங்களுடன் ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்

காதலித்த பெண் வேறொருவரை மணக்கவிருப்பதை அறிந்து காதலன் ஆத்திரமடைந்தார். அதனால் காதலியுடன் எடுத்த புகைப்படம், அவர் கொடுத்த காதல் கடிதம் ஆகியவற்றை போஸ்டர் அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியதால் பரபரப்பு.

Published:Updated:
காதல் தோல்வியால் ஒட்டிய போஸ்டர்

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் 'லவ் பேர்ட்ஸ்' பறவைகளை விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். நாம் தமிழர் கட்சியிலும் ஆர்வமாகச் செயல்பட்டுவரும் அவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

விஜய்ரூபன் தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவரைக் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்திருக்கிறார். அவர்களது காதல் வெளியே தெரிந்ததும் குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதால் பெண்ணின் தந்தையை நேரில் சந்தித்த விஜய்ரூபன், அவரின் மகளைத் திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர், விஜய்ரூபனுக்கு நிரந்தர வருமானத்துக்குரிய தொழில் இல்லாததால் அவருக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஜயரூபன் தொடர்ந்து தன் மகளின் பின்னால் சுற்றுவதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்து, திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். காதல் மற்றும் தேர்தல் தோல்வி ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்வியால் விஜய்ரூபன் ஆத்திரம் அடைந்துள்ளார்.

களக்காடு நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்
களக்காடு நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்

காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நடக்கவிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், தாங்கள் காதலித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் அந்தப் பெண் கொடுத்த கவிதை நடையிலான கடிதத்தின் நகல் ஆகியவற்றை போஸ்டராக அச்சடித்து களக்காடு நகரம் முழுவதும் ஒட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காதலித்த பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் வீட்டைச் சுற்றிலும் அதிகமான எண்ணிக்கையில் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார். அதைப் பார்த்த மணமகன் வீட்டினர் அதிர்ச்சியடைந்து பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய்ரூபனைத் தேடிவருகிறோம்.
களக்காடு போலீஸார்

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் களக்காடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விஜய்ரூபனைத் தேடியிருக்கிறார்கள். அதை அறிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். காதல் விவகாரத்தால் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism