Published:Updated:

பாலிடிக்ஸ் பச்சையா, சிவப்பா?

ட்விட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ட்விட்டர்

“எங்கள் தளத்தில் அனைவருக்குமான குரல் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் பொய் பேசுகிறார்கள் என்றால் அதையும் மக்கள் தெரிந்துகொள்ளத்தானே வேண்டும்.

பாலிடிக்ஸ் பச்சையா, சிவப்பா?

“எங்கள் தளத்தில் அனைவருக்குமான குரல் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் பொய் பேசுகிறார்கள் என்றால் அதையும் மக்கள் தெரிந்துகொள்ளத்தானே வேண்டும்.

Published:Updated:
ட்விட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ட்விட்டர்

“டெக் நிறுவனங்கள், 100 சதவிகிதம் உண்மை என்று கணிக்கும் விஷயத்தை மட்டும்தான் பதிவுசெய்யவேண்டும் என்று சொன்னால், கருத்துச்சுதந்திரமற்ற உலகில் வாழ பெரும்பாலான மக்கள் விரும்ப மாட்டார்கள்” - சமீபத்தில் ஃபேஸ்புக் எடுத்திருக்கும் ஒரு முக்கிய முடிவு சரிதான் என்பதை எடுத்துரைக்க மார்க் சக்கர்பெர்க் கூறியது இது. என்ன முடிவு அது? `தங்கள் தளத்தில் கொடுக்கப்படும் அரசியல் விளம்பரங்களின் உண்மைத்தன்மை என்னவென்று ஃபேஸ்புக் இனிமேல் சோதிக்காது’ என்பதுதான் அது.

ட்விட்டர், ஃபேஸ்புக்
ட்விட்டர், ஃபேஸ்புக்

வரும் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த தேர்தலில் ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ என்னும் நிறுவனம் அமெரிக்க வாக்காளர்களின் தகவல்களைச் சேகரித்தது. அதன் மூலம் மக்களைத் தரம் பிரித்து எதிர்த்தரப்புமீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் குறிவைத்துப் பொய்ப் பிரசாரங்கள் ஃபேஸ்புக்கில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஃபேஸ்புக் பிரசாரங்களுக்குத் தேர்தலின் முடிவுகளையே மாற்றும் அளவுக்குத் தாக்கம் இருந்தது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையறிந்தும்கூட இந்த முறையும் அரசியல் விளம்பரங்களில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று திடமாக நிற்கிறது ஃபேஸ்புக். இதனால் ‘தவறுகளிலிருந்து பாடம் கற்க மறுக்கிறது ஃபேஸ்புக்’ என இப்போதே வறுத்தெடுக்கத் தொடங்கியிருக்கிறது அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஜோ பைடன், அவரின் மகன் நிறுவனத்தின் மேல் தொடரப்பட்டிருக்கும் வழக்கைச் சரிசெய்ய உக்ரைன் அதிகாரிகளுக்கு ஒரு பில்லியன் டாலர் கொடுப்பதாகக் கூறி மோசடி செய்யப்பார்த்தார்’ என்று 30 விநாடி வீடியோவை ஃபேஸ்புக்கில் பரப்பிவந்திருக்கிறது டிரம்ப்பின் டிஜிட்டல் பிரசாரக்குழு. இது முற்றிலும் உண்மைத்தன்மை அற்றது, இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று ஊடகங்களும், மூன்றாம் தரப்பு fact-checkers-ம் உறுதிப்படுத்தினார்கள். இதை நீக்கக்கோரி ஜோ பைடன் தரப்பு ஃபேஸ்புக்கை வலியுறுத்தியது. ஆனால், ‘எங்கள் விதிமுறைகளை (policies) இது மீறவில்லை’ என்று கைவிரித்தது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு பிரதமர் வேட்பாளரான எலிசபெத் வாரென் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ததே ஃபேஸ்புக்தான்’ என ஃபேஸ்புக்கிலேயே விளம்பரமும் செய்தார். ஃபேஸ்புக் அதையும் நீக்கவில்லை. `ஃபேஸ்புக் போன்ற பெரும் டெக் நிறுவனங்கள் உடைக்கப்பட வேண்டும். அவர்களிடம் அளவுக்கு மீறிய சக்தி இருக்கிறது. அவர்களுக்கான கட்டுப்பாடுகள் வலுப்பெற வேண்டும்’ என்கிறார் வாரென். இவருக்கும் மார்க் சக்கர்பெர்க்குக்குமான போர்தான் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எங்கள் தளத்தில் அனைவருக்குமான குரல் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் பொய் பேசுகிறார்கள் என்றால் அதையும் மக்கள் தெரிந்துகொள்ளத்தானே வேண்டும். எது உண்மை எது பொய் என்பதை மக்களே முடிவுசெய்ய வேண்டும். இதில் டெக் நிறுவனமான நாங்கள் குறுக்கிடுவது சரியாக இருக்காது” என்கிறார் மார்க். இப்படி அரசியல் பிரசாரங்களில் உண்மை எது, பொய் எது என்று சோதித்து நீக்க ஆரம்பித்துவிட்டாலே ஃபேஸ்புக் பக்கச்சார்புடையதாக மாறிவிடும். எதுவும் செய்யாமல் இருப்பதன் மூலம் நடுநிலைமை காக்கப்படும் என்று நம்புகிறது ஃபேஸ்புக்.

ட்விட்டர்
ட்விட்டர்

இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்று டிரெண்டிங் சோசியல் மீடியாவான டிக் டாக் தரப்பிடம் சமீபத்தில் பேசியிருந்தோம். அதற்கு “அரசியல் விளம்பரங்களே எங்கள் தளத்தில் கிடையாது, அதனால் பிரச்னையே இல்லை” என்று சிம்பிள் தீர்வைச் சொன்னது அந்த நிறுவனம். இப்படி ஃபேஸ்புக்கும் அறிவிக்கலாமே, பொய்ப் பரப்புரைகளைப் பரப்பித்தான் சம்பாதிக்க வேண்டுமா என்ற கேள்வியையும் பலரும் எழுப்பிவருகின்றனர். இதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். “அப்படிச் செய்வது ஆளும் தரப்பிற்கே சாதகமாக முடியும். கருத்துச் சுதந்திரம் மிக்க சமூக வலைதளங்கள்தான் அதிகார சக்தியைப் பரவலாக்கியிருக்கிறது, டிவி போன்ற பெரிய ஊடகங்களில் பணம் செலவு செய்யமுடியாதவர்களுக்கும் அதிகம் பேரைச் சென்றுசேரும் வாய்ப்பை ஃபேஸ்புக் தருகிறது. இப்படியான அரசியல் விளம்பரங்களிலிருந்து எங்களுக்கு வரும் வருமானம் என்பது ஐந்து சதவிகிதம்கூடக் கிடையாது” என்கிறது ஃபேஸ்புக்.

இது உண்மைதான் என்றாலும், கருத்துச் சுதந்திரத்திற்கும், ஆபத்தான போலிச் செய்திகளுக்கும் இடையே சரியான கோடு போட்டுப் பிரிக்கமுடியாமலேயே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது ஃபேஸ்புக்.

மற்றுமொரு பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. தனது தளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு இடமில்லை என்பதே அது. அத்துடன் நிற்கவில்லை. ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜாக் டார்சி, “ஒருவரின் அரசியல் கருத்துகள் தானாக மக்களைச் சென்று சேர வேண்டும். அதைப் பணம் கொடுத்து வாங்குவது சரி ஆகாது” என்ற அவர், “எங்கள் தளத்தைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்கக் கடுமையாக உழைத்துவருகிறோம். பணம் கொடுத்தால் எந்த அரசியல் விளம்பரங்களை வேண்டுமானாலும் அனுமதிப்போம், யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டோம் என்று எங்களால் இருக்கமுடியாது” என்று மறைமுகமாக ஃபேஸ்புக்கைச் சாடினார்.

அரசியல் விளம்பரங்களையும் அரசியல் தொடர்பான செய்திகளையும் அனுமதிப்பதில் இரண்டு சமூகவலைதளங்களும் இரண்டு வெவ்வேறான நிலைப்பாடுகளை எடுத்திருப்பது அமெரிக்கத் தேர்தலை மட்டுமல்ல, நம்மூர் அரசியல் கட்சிகளையும் பாதிக்கவே செய்யும்.

பொதுக்கூட்டங்கள், ஆட்டோ அறிவிப்புகள், தெருமுனைக்கூட்டங்கள், பிட் நோட்டீஸ்கள் எல்லாவற்றையும் தாண்டி இப்போது ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும்தானே நம்பியிருக்கின்றன நம்மூர் அரசியல் கட்சிகளும்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism