தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ஷானவி பொன்னுச்சாமி முதல் தலைமுறை பட்டதாரி; பொறியியல் படித்தவர்; மாடலிங்கில் ஆர்வம் உடையவர்; நடிகர். ஏர் இந்தியா நிறுவனத்தில் அவர் வேலைக்காக விண்ணப்பித்தபோது, அவர் திருநங்கை என்பதைக் காரணம்காட்டி அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏர் இந்தியா நிறுவனத்திடம் உச்ச நீதிமன்றம் விளக்கமும் கேட்டது. ஆனால், இன்று வரை ஷானவியின் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை!

வழக்கு தொடுத்ததாலேயே மாடலிங், சினிமா என அத்தனை வாய்ப்புகளையும் இழந்தார் ஷானவி. பாலின அடையாள அடிப்படையில் அரசு நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுவது குற்றம். படித்து நல்ல நிலையில் இருந்த ஷானவிக்கே இந்த நிலை எனும்போது, எந்தப் பிடிப்பும் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் திருநர்களின் வாழ்க்கை இந்தச் சமூகத்தில் கேள்விக்குறிதான். இப்படிப்பட்ட கேள்விக்குறியான வாழ்க்கையை மொத்தமாகவே ஒழித்துக்கட்டும் வகையில், சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது திருநர் உரிமைப் பாதுகாப்பு மசோதா.

பிறப்பால் ஆண் அல்லது பெண்ணாகப் பிறந்தவர்கள் தங்களுக்குள் நிகழும் பாலின மாற்றத்தை உணர்வது, ஏதோ ஒரே நாளில் நிகழ்வதல்ல. பெரும்போராட்டக் காலம் அது. ஒருகட்டத்தில் அந்த மாற்றம் வெளிப்படத் தொடங்கும்போது குடும்பமும் சமூகமும் அவர்களை ஏற்பதில்லை. சமூக அறுபடல் இங்கேதான் நிகழ்கிறது.

இவ்வளவு போராட்டங்கள் நிறைந்த திருநர்கள் சமூகத்தில்தான் திருநர் உரிமைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளதாகக் கொந்தளிக்கிறார் கிரேஸ் பானு. திருநங்கை செயற்பாட்டாளரான இவர், இந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெறுவதற்கு முன்பிருந்தே அதற்கு எதிராகக் குரல்கொடுத்தவர்.

“நால்சா வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி, திருநர்கள் தங்களை ஆணாகவோ பெண்ணாகவோ அல்லது மூன்றாம் பாலினமாகவோ அடையாளப் படுத்திக்கொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் திருநர் உரிமைப் பாதுகாப்பு மசோதாவோ, அரசுதான் அவர்களுடைய அடையாளத்தை முடிவுசெய்யும் என்று குறிப்பிடுகிறது. ‘அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். சிகிச்சை செய்த மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்தச் சான்றிதழுடன் எங்களது உடலை மாவட்ட மேஜிஸ்திரேட் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். மேஜிஸ்திரேட், நாங்கள் திருநர் என முடிவுசெய்தால் மட்டுமே எங்களது பாலின அடையாளம் அங்கீகரிக்கப்படும்’ என்கிறது இந்த மசோதா. நாங்கள் எங்கள் பாலினத்தை உணர அறுவைசிகிச்சை செய்யத் தேவையில்லை. மேலும், பரிசோதனை செய்யும் அந்த மேஜிஸ்திரேட் பெரும்பாலும் ஆணாகவே இருப்பார். ஒரு ஆண் முன்பு நாங்கள் நிர்வாணப்பட்டே எங்கள் உரிமையைப் பெற வேண்டுமென்றால், எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புதான் என்ன? உடல் பரிசோதனையை நால்சா வழக்கு தீர்ப்பு எதிர்க்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசுகளே இன்றும் உடல் பரிசோதனைதான் செய்கின்றன. இதுபோதாது என இப்போது மத்திய அரசு இந்தக் கொடுமையை மசோதாவாக்குகிறது. அதிலும்

18 வயதுக்குக்கீழ் இருப்பவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள்தான் அடையாளத்துக்கு விண்ணப்பிக்க வேண்டுமாம். இது எப்படிச் சாத்தியப்படும்? குடும்பத்தினரால் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுவதால்தானே நாங்கள் இவ்வளவு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி நெருக்கடி கொடுத்தால் எத்தனை பிள்ளைகள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த முன்வருவார்கள்?” என்றவர், அடுத்து சொன்னதுதான் இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம்.

“எங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குபவர்களுக்கு இரண்டு வருடம் தண்டனை என்கிறது இந்த மசோதா. பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்தால் வன்கொடுமை சட்டம் பாய்கிறது; ஏழு ஆண்டுகள் வரை தண்டனை தருகிறார்கள். எங்களுக்கென்றால் இரண்டு ஆண்டுகள் மட்டும்தானாம். இதென்ன அநியாயம்? இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த், ‘வன்புணர்வு வேறு, அவர்களைச் சீண்டுவது என்பது வேறு’ என இரண்டு ஆண்டு தண்டனையை நியாயப்படுத்துகிறார்.

அதேசமயம் முதன்முறையாக அ.தி.மு.க உறுப்பினர் விஜிலா, ‘பணி இடம் மற்றும் கல்வியில் எங்களுக்கான இடஒதுக்கீடு’ தொடர்பாகப் பேசினார். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை. ‘இந்த மசோதா, தேர்வுக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்’ என்று திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் மசோதாவும் பின்னடைவைச் சந்தித்து, திருநர் உரிமைப் பாதுகாப்பு மசோதா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், நாங்கள் ஓய்ந்துவிட மாட்டோம். நீதிமன்றத்தை நாடுவோம். எங்கள் வாழ்வுரிமையை, போராடிப் பெறுவோம்” என்றார் உறுதியுடன்.