Published:Updated:

உற்சாகச் சிரிப்பு... நேர்மையான உழைப்பு... மார்க்கெட்டிங்கில் புதுமை..! ஜீரோ டு ஹீரோவான வசந்தகுமார்!

வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகுமார்

வாடிக்கையாளர் பொருள்களை வாங்கிச் சென்றபின் ஏதாவது குறை ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரிசெய்து தந்தார்!

உற்சாகச் சிரிப்பு... நேர்மையான உழைப்பு... மார்க்கெட்டிங்கில் புதுமை..! ஜீரோ டு ஹீரோவான வசந்தகுமார்!

வாடிக்கையாளர் பொருள்களை வாங்கிச் சென்றபின் ஏதாவது குறை ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரிசெய்து தந்தார்!

Published:Updated:
வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகுமார்
ன் உற்சாகச் சிரிப்பையே தன் நிறுவனத்தின் பிராண்டாக்கி, பிசினஸில் பெரும் வெற்றி கண்டவர் சில நாள்களுக்கு முன் காலமான ஹெச்.வசந்தகுமார். வசந்த அண்ட் கோவின் தலைவரான அவர் 70 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். தனது கடுமையான உழைப்பு, நேர்மையான அணுகுமுறை, புதுமையான நோக்கிலான மார்க்கெட்டிங் அணுகுமுறையை வைத்து 1,000 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் கொண்டதாக வசந்த் & கோ நிறுவனத்தை வளர்த்தெடுத்தது எப்படி?
வசந்தகுமார்
வசந்தகுமார்

அகத்தீஸ்வரம் டு சென்னை..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம்தான் வசந்த குமாரின் சொந்த ஊர். விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம் படித்தார். 1978-ம் ஆண்டு ராயபுரம் தொகுதியில் தேர்தலில் தன் சகோதரர் குமரி அனந்தனுக்கு உதவி செய்வதற்காகச் சென்னை வந்தவர், சென்னையிலேயே தங்கிவிட்டார்.

முதல் வேலை வி.ஜி.பி-யில்..!

அப்போது சென்னையில் வேகமாக வளர்ந்துவந்த வி.ஜி.பி நிறுவனத்தில் அவருக்கு கணக்காளர் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் ரூ.70. வாடிக்கையாளர்கள் தவணையில் வாங்கிய பொருள்களுக்கான பணத்தை வசூல் செய்யும் வேலை அவருக்கு.

நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததால், அடுத்த ஏழு ஆண்டுகளில் கிளை மேலாளர் பொறுப்பு வகிக்கும் அளவுக்கு அவர் பதவி உயர்வு பெற்றார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் ரூ.300.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மும்பைக்கு மாற்றம்..!

அந்தக் காலத்தில் வி.ஜி.பி தனது கிளைகளைப் பல்வேறு நகரங்களில் ஆரம்பித்து, தன் பிசினஸை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மும்பையில் திறக்கப் படும் கிளையைப் பொறுப்பேற்று நடத்த சரியான நபர் வசந்தகுமார்தான் என்று முடிவு செய்தது வி.ஜி.பி நிர்வாகம்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

ஆனால், மும்பைக்குச் செல்ல வசந்த குமாருக்கு விருப்பமில்லை. எனவே, அந்த வேலையை விட்டுவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார். எட்டு ஆண்டுகள் வேலைபார்த் திருந்தாலும், சொந்தத் தொழிலில் முதலீடு செய்ய அவரிடம் பணம் எதுவும் இல்லை. வி.ஜி.பி-யில் வேலை பார்த்தபோது நன்கு பழகிய வாடிக்கையாளர் ஒருவர் தி.நகர் உஸ்மான் சாலையில் மளிகைக் கடை ஒன்றை நடத்திவந்தார். இந்தக் கடையைக் காலி செய்துவிட்டு, இன்னொருவருக்குத் தரும் ஏற்பாட்டில் இருந்த அவரிடம் பேசி, அந்தக் கடையை வாங்கினார். அந்தக் கடைக்காரர் அவருக்கு விதித்த ஒரே கண்டிஷன் ‘இன்னும் ஆறு மாதங்களுக்குள் ரூ.8,000 தர வேண்டும்’ என்பதுதான். கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு கடையை எடுத்தார். பொருள்களை வைத்து பார்சல் கட்ட பயன்படுத்தும் மரப்பலைகையில் தன் கடையின் பெயரை எழுதி மாட்டினார். அவ்வளவு சிக்கனம்!

முதல் வருமானம் ரூ.22

அப்போது அவரிடம் இருந்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டுமே. மடக்கக்கூடிய சேர்கள் அப்போது எல்லோரும் விரும்பி வாங்கக்கூடிய பொருளாக இருந்தது. சைக்கிள் கேரியரில் ஒன்றிரண்டு சேர்களைக் கட்டிக்கொண்டு, சென்னையின் எல்லாத் தெருக்களிலும் உள்ள வீடுகளின் படிகளில் ஏறத் தொடங்கினார். பாரி முனையில் பூ விற்கும் பட்டம்மாள் என்பவரும் தேனாம்பேட்டையில் இருந்த பக்தவச்சலம் என்பவரும் தந்த 22 ரூபாய்தான் அவரது முதல் வருமானம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரீடெயில் டு இன்ஸ்ட்டிட்யூஷனல் சேல்ஸ்..!

தனித்தனியாக பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் தன் வாடிக்கையாளர் களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. இந்த இன்ஸ்ட்டிட்யூஷனல் சேல்ஸுக்காக அவர் முதலில் நாடியது எண்ணூரில் இருந்த அசோக் லேலாண்ட் நிறுவனத்தை.தி.நகரிலிருந்து எண்ணூரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு சைக்கிளில் கஷ்டம் பார்க்காமல் பலமுறை சென்று ஆர்டர் கேட்டார். எதுவும் கிடைத்தபாடில்லை.

உற்சாகச் சிரிப்பு... நேர்மையான உழைப்பு... மார்க்கெட்டிங்கில் புதுமை..! ஜீரோ டு ஹீரோவான வசந்தகுமார்!

அப்போதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை மக்கள் டிவிகளில் பார்த்து ரசிக்கத் தொடங்கினர். அசோக் லேலாண்ட் ஊழியர்களும் இந்தப் போட்டியை டிவியில் பார்த்து ரசிக்க விரும்பியதைத் தெரிந்துகொண்டு, அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை அணுகினார். தவணை அடிப்படையில் இந்தப் பொருள்களை விற்கத் தேவையான கடனை சக்தி ஃபைனான்ஸ் நிறுவனம் தரத் தயார் என்பதை எடுத்துச் சொன்னவுடன், 960 கலர் டிவிகளுக்கான ஆர்டர் அவருக்குக் கிடைத்தது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அப்போது யாரும் செய்திராத சாதனை!

பல்கிப் பெருகிய பிசினஸ்..!

இதன்பிறகுதான் வசந்த் & கோவின் பிசினஸ் பல்கிப் பெருகத் தொடங்கியது. சென்னையிலும் தமிழகத்தின் பிற நகரங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டன. தவணை முறையில் பொருள்களை வாங்கவே நம் மக்கள் நிறைய விரும்பினார்கள். டிவி, வாஷிங்மெஷின், ஃப்ரிஜ் போன்ற பொருள்களை மக்கள் வாங்க ஆரம்பிக்கவே, வசந்த அண்ட் கோவின் விற்பனை கணிசமாக அதிகரித்தது. அது மட்டுமல்ல, பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாகப் பேசி அதிக எண்ணிக்கையில் ஆர்டர் செய்து வாங்கியதால், விலையைக் கணிசமாகக் குறைத்து வாங்கும் திறன் வசந்த் & கோவுக்கு இருந்ததால், நிறுவனத்தின் லாபம் நன்கு அதிகரித்தது.வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கிச் சென்றபின் அந்தப் பொருளில் ஏதாவது குறை ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரிசெய்து தந்தார். வாடிக்கையாளர்களின் குறைகளை அறிந்து உடனுக்குடன் சரிசெய்ய நூறு தொலைபேசி எண்களை வைத்திருந்தார்.

ரூ.1,000 கோடிக்குமேல் ஆண்டு விற்பனை..!

இன்றைக்கு தமிழகம், கர்நாடக மாநிலங்களில் 83 கிளைகள் உள்ளன. 1,000 கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு டேர்ன்ஓவர் இருக்கிறது. வீட்டுக்குத் தேவையான நுகர்பொருள்களை மக்களுக்கு அளிப்பதில் முன்னணி நிறுவனமாக வசந்த் & கோ இருக்கிறது. தென் இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனத்தை இந்தியா முழுக்க ஏன், உலகம் முழுக்கவும் அவருடைய வாரிசுகள் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!

மக்கள் சேவை முன்னேற்றம் தரும்!

வி.ஜி.சந்தோஷம், தலைவர், வி.ஜி.பி.

உற்சாகச் சிரிப்பு... நேர்மையான உழைப்பு... மார்க்கெட்டிங்கில் புதுமை..! ஜீரோ டு ஹீரோவான வசந்தகுமார்!

‘‘தனது கடுமையான உழைப்பால் மிகப்பெரிய அளவில் உயர்ந்தவர் வசந்த குமார். எவன் ஒருவன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ, அவன் வாழ்க்கையில் மிகச் சிறந்த உயரத்தை அடைவான் என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவர் வசந்தகுமார்.’’

தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்!

ரவி பிரகாஷ், எம்.டி, சாலிடெர் டிவி

உற்சாகச் சிரிப்பு... நேர்மையான உழைப்பு... மார்க்கெட்டிங்கில் புதுமை..! ஜீரோ டு ஹீரோவான வசந்தகுமார்!

‘‘அவர் செய்த சாதனை ஒன்றிரண்டல்ல. சாலிடெர் நிறுவனத்தின் பல விருதுகளை அவர் வாங்கியிருக்கிறார். இன்னும் பல சாதனை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவையெல்லாம் சாத்தியமா என்று நான் கேட்பேன். தனிமனிதன் ஒருவன் நினைத்துவிட்டால், நிச்சயம் ஜெயிக்க முடியும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படிச் சொன்னது மட்டுமல்ல, அவர் அதைச் செய்தும் காட்டினார்.’’

எனக்கு இன்ஸ்பிரேஷனே அண்ணாச்சிதான்!

ஜான்சன், எம்.டி, சத்யா

உற்சாகச் சிரிப்பு... நேர்மையான உழைப்பு... மார்க்கெட்டிங்கில் புதுமை..! ஜீரோ டு ஹீரோவான வசந்தகுமார்!

‘‘நான் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்கான இன்ஸ்பிரேஷனே வசந்த குமார் அண்ணாச்சிதான். அவர் மாதிரி வர வேண்டும் என்று நினைத்துத்தான் இந்தத் தொழிலைத் தொடங்கினேன். என்னை ஒரு போட்டியாளர் என்று நினைக்காமல் அருமையான பிசினஸ் ஐடியாக்களை சொல்வார். கொரோனா காலத்தில் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்காதே. சம்பளம் குறைத்தால் அவர்கள் எப்படி வேலை செய்வார்கள் என்றார். கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல் ஒரு ஏ4 சீட்டில் அத்தனை விஷயங்களையும் அவர் குறித்துத் தருவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். பிசினஸை வளர்க்க ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிக் கவனித்து செய்ய வேண்டும் என்று சொல்வார். வோல்டாஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு நான் அவருடன் சென்றேன். அங்கே தற்செயலாக நோயல் டாடாவை சந்தித்தார். ‘என் தொகுதி மக்களுக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்’ என்று மனு கொடுத்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism