Published:Updated:

''அரியக்குடி மணிச்சத்தம் கேட்டாலே காளைகள் துள்ளி குதிக்கும்'' - கழுத்துமணிக்கு தனி கிராமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜல்லிக்கட்டுக் காளைக் கழுத்துமணி
ஜல்லிக்கட்டுக் காளைக் கழுத்துமணி

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு கழுத்தில் கட்டப்படும் மணிகள் அடங்கிய பெல்ட்டில் உள்ள மணிகளை மட்டும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தில் பிரத்யேகமாக தயாரிக்கின்றனர்.

'ஹரி' என்ற நாமத்தில் இருந்து பிறந்ததாக சொல்லப்படும் அரியக்குடி என்ற கிராமம் சிவங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது. ’தென் திருப்பதி’ என்று புகழப்படும் திருவேங்கடமுடையான் கோயில் கொண்டுள்ள இந்த கிராமம் ஆன்மீக ஆர்வலர்களுக்கு மத்தியில் பிரபலம். இக்கிராமத்தில் பூஜை பொருட்களான விளக்கு முதல் மணி வரை செட்டிநாடு பித்தளைப் பொருட்கள் தயார் செய்யும் குடும்பத்தினர் ஏளாரளமானோர் உள்ளனர். அந்த வகையில், ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்து மணிப் பட்டையில் முக்கிய பொருளான உருண்டை வடிவிலான பித்தளை மணி, அரியக்குடியில் தான் தயார் செய்யப்படுகிறது. சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை கொட்டாம்பட்டி, திருச்சியின் சில பகுதிகளில், காளைகளுக்கான கழுத்து மணிப் பட்டைகள் தயார் செய்யப்படும். அதற்கான பித்தளை மணிகள், அரியக்குடியில் இருந்துதான் செல்கிறது.

ஜல்லிக்கட்டுக் காளைக் கழுத்துமணி
ஜல்லிக்கட்டுக் காளைக் கழுத்துமணி

இது குறித்து மேலும் விவரம் அறிய அரியக்குடி கிராமத்திற்குச் சென்றோம். அங்கே, உள்ள பித்தளைப் பொருள்கள் செய்யும் பட்டறையில், மணிகள் செய்துகொண்டிருந்த இளைஞர் ராசுவிடம் பேசினோம். “செட்டிநாட்டு பித்தளைச் சாமான்களுக்கு தாய் கிராமம் எங்க ஊர் தான். இங்கு செய்யப்படும் செட்டிநாட்டு குத்துவிளக்குகள், நகரத்தார் மக்களின் சீர்வரிசையில் முதல் இடம் பிடிக்கும். அதோடு பூஜை பொருள்களும் இங்கே தான் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு கொடுக்கிறோம்.

ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை செல்வராணி!
மணி செய்யும் பட்டறை
மணி செய்யும் பட்டறை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜல்லிக்கட்டுக் காளைகளின் கழுத்தில் கட்டப்படும் மணிகளையும் நாங்கள் தான் தயாரிக்கிறோம். அரியக்குடியில் 4 பட்டறைகளில் தான் ஜல்லிக்கட்டு மணி தயார் செய்யப்படுகிறது. அதில், எங்கள் பட்டறையும் ஒன்று. தென் மாவட்டம் முழுசும் எங்க ஊர்ல இருந்து தான் மணி போகும். இங்க இருந்து வாங்குற மணியை, தோல் பெல்ட்டில் வைத்து கட்டி, கலர் குஞ்சம் வச்சு அழகுபடுத்தி விற்பனை செய்வாங்க. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல ஆண்டுகளாக காளை வளர்ப்பவர்கள், அரியக்குடி மணியைப் பார்த்தாலே கண்டுபிடிச்சுருவாங்க.

ஜல்லிக்கட்டுக் காளைக் கழுத்துமணி
ஜல்லிக்கட்டுக் காளைக் கழுத்துமணி
ஜல்லிக்கட்டு காளைகளோடு விளையாடும் 4 வயது மதுரை சிறுமி... வியக்கும் ஊர்மக்கள்!

எங்க ஊர் மணியில 5 சைஸ் இருக்கு. மணி மேல 4 அருவ, 5 அருவனு ஆரம்பிச்சு, 8 அருவ வரைக்கும் கீரல்கள் போடுவோம். அந்த கீரல்களால மணிச் சத்தம் வித்தியாசப்படும். ஒரு நாளைக்கு 100 முதல் 110 மணிகள் செய்வோம். மண்ணுல அச்சு எடுத்து, பித்தளையை உருக்கி ஊத்தி எடுத்தா குழிப்பணியாரம் மாதிரி வரும். அதை எடுத்து பிசுருகளை வெட்டி, பாலீஷ் போட்டா, பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கும். ஜல்லிக்கட்டு மணி தயாரிக்கும் வேலை, புரட்டாசி மாசமே ஆரம்பிச்சுருவோம். தை மாத கடைசி வரை ஆர்டர்கள் வரும். அதுக்கப்புறம் குத்து விளக்கு, பிரதோஷ விளக்குனு அடுத்த வேலையில இறங்கிடுவோம்” என்றார்.

ரோகன்
ரோகன்
ஜல்லிக்கட்டு காளைகள்... வாடிவாசலில் கெத்து காட்ட எதெல்லாம் அவசியம்?

அரியக்குடி மணி குறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர் ரோகனிடம் பேசினோம். ”அரியக்குடி பக்கத்தில இருக்க வேதியங்குடி தான் எங்க கிராமம். எங்க ஊர்ல ஆடு, மாடுகள் வளர்ப்பு அதிகம். மாட்டு பொங்கல் அன்னைக்கு வீட்ல பொங்க வைக்க மாட்டோம். ஊரே சேர்ந்து ஒன்னா மந்தையில தான் பொங்க வைப்போம். அந்த அளவுக்கு கால்நடைகளை கொண்டாடுவோம். அதனால எனக்கு ஜல்லிக்கட்டு மாடுனா ரொம்ப பிடிக்கும். மூணு ஜல்லிக்கட்டு மாடு வளர்க்குறேன். ஜல்லிக்கட்டு சமயத்துல காளைக்கு அடையாளம் கட்ட சிங்கம்புணரி போவேம். அப்போ, அரியக்குடில இருந்து மணி வாங்கிட்டு போயிருவேன். அங்க கழுத்துமணிப் பட்டை செஞ்சு கொண்டாருவேன். அரியக்குடி மணி சத்தம் தினுசா இருக்கும். அந்த மணிச்சத்தம் கேட்டாலே காளைகளுக்கும் உற்சாகம் வந்துடும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு