Published:Updated:

பல் துலக்க எலி மருந்தைப் பயன்படுத்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

மும்பை தாராவியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதிகாலையில் தூக்கக் கலக்கத்தில் எலி மருந்து பேஸ்ட்டை, பற்பசை என்று நினைத்து பல் தேய்த்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை தாராவி பகுதியில் வசிப்பவர் அப்சனா கான் (18). இவர் அதிகாலையில் எழுந்ததும் உறக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் பல் தேய்க்கத் தொடங்கினார். ஆனால் பல் தேய்க்க ஆரம்பித்த சில நொடிகளில் பற்பசை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த கான், உடனே துப்பிவிட்டார். பார்த்தபோது அது எலி மருந்து பேஸ்ட் என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கான், நன்றாக வாயைக் கொப்பளித்தார். அந்த நேரத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்பதால் வழக்கமான வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதோடு வயிற்றுவலியும் சேர்ந்துகொண்டது. தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக மட்டும் தெரிவித்தார். ஆனால் எலி மருந்தைக் கொண்டு பல் தேய்த்ததைச் சொல்லவில்லை. சொன்னால், திட்டுவார்கள் என்று பயந்துகொண்டு சொல்லவில்லை. கானை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

புதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள்! -காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள்
சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

ஆனால் டாக்டர் கொடுத்த மருந்து வயிற்றுவலியைக் குறைக்கவில்லை. அதன் பிறகே எலி மருந்தால் பல் தேய்த்த விவரத்தைத் தன் தாயாரிடம் கான் தெரிவித்தார். உடனே அவரை சயானிலுள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சோனோகிராபி உட்பட அனைத்துச் சோதனைகளும் செய்து பார்த்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை என்று வந்தது. ஆனாலும் வலி குறையவில்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் அதிக செலவாகும் என்று கருதி மீண்டும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு கான் உயிரிழந்துவிட்டார். இது குறித்து அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த டாக்டர், `எலி மருந்தைக் கொண்டு பல் தேய்த்ததால் விஷம் உடல் முழுவதுமாக வேகமாகப் பரவிவிட்டது' என்றார். இது குறித்து துணை கமிஷனர் பிரனயா அசோக் , "தற்கொலை மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். விசாரணையில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து விசாரிக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு