வேறு எதில் போட்டி இருக்கிறதோ இல்லையோ... கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங் களுக்கு இடையே கடும் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. சாதித்த மாநிலங்களை முதலில் பார்ப்போம்...

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு, கேரளாவிலேயே கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்தே கேரள அரசு கொரோனா தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது. மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்னதாகவே, 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார நிவாரணங்களை அறிவித்தது. தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பைவிட, மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 15,000-க்கும் அதிகமான முகாம்களை கேரள அரசு நடத்தி வருகிறது. அதில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். கொரோனா பாதிப்புகளில் குறைவான இறப்பு விகிதமும் கேரளாவில்தான் பதிவாகியுள்ளது. கொரோனாவை கேரள அரசு எதிர்கொண்டவிதம் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

வெளிநாடு சென்று ஒடிசா திரும்பியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள சலுகை களை அறிவித்தது ஒடிசா அரசு. கொரோனா பணியில் உயிரிழக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பணியில் உயிர்விடும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஓய்வு பெறுகிற காலம் வரையில் முழு சம்பளம் வழங்கப்படும் என்பது உட்பட ஒடிசா அரசு அறிவித்துள்ள, செயல்படுத்துகிற பல திட்டங்கள், தேசத்துக்கே முன்மாதிரியாகவுள்ளன.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் ராஜஸ்தானின் பில்வாராவும் ஒன்று. பில்வாராவில் ராஜஸ்தான் அரசு செயல் படுத்திய நடைமுறையை தேசிய முன் மாதிரியாக எடுத்துச் செயல்படலாம் என மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. தேசிய ஊரடங்கு அறிவிப் பதற்கு முன்பாகவே, பில்வாரா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன.

சீனாவுக்கு அருகே இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில்தான் மிகவும் குறைவான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னரே கிட்டத்தட்ட அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தி, வெளிமாநிலங் களிலிருந்து வருபவர்கள் உள்ளே நுழைய தடை விதித்ததன் பலன் இது. வெளிப்பயணங்கள் மேற்கொண்டவர்கள் தங்களுடைய பயணம் தொடர்பான விவரங்களைப் பதிவுசெய்ய தனிச் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன. வடகிழக்கு துரிதமாக செயல்பட்டதால் தான் அங்கு கொரோனா பாதிப்புகள் குறைவாகவே பதிவாகியுள்ளன.

இவையெல்லாம் கொரோனா பாதிப்பில் சாதித்த மாநிலங்கள். இதில் தமிழகத்தையும் கடைசியாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த கமல்நாத் அரசு கவிழ்ந்து, பா.ஜ.க-வின் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராகப் பதவியேற்றார். அமைச்சரவை பதவியேற்கும் முன் ஊரடங்கு தொடங்கிவிட்டது. 25 நாள்களுக்கும்மேலாக சுகாதாரத் துறை, அமைச்சர் இல்லாமலே செயல் பட்டுவந்தது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகியது. சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டது தான் இதன் உச்சம். சுகாதாரத் துறை அமைச்சராக நரோட்டம் மிஸ்ரா சமீபத்தில்தான் நியமிக்கப் பட்டுள்ளார். தப்லீக் ஜமாஅத் நிகழ்வுக்குச் சென்று வந்தவர்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகியிருப்பதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து, இப்போதைக்கு தப்பியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் குஜராத்தான் மாடல் என்பார்கள். எப்படி இருக்கிறது குஜராத்? அங்கு மார்ச் மாத இறுதியில் நூற்றுக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது இரண்டா யிரத்தைத் தாண்டியுள்ளது. அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்களில் மட்டுமே 80 சதவிகிதத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி யுள்ளன. கொரோனா பாதிப்புகளில் அதிக இறப்பு விகிதமும் குஜராத்தில்தான்.

இந்தியாவில் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுள் டெல்லியும் ஒன்று. பிற மாநிலத் தொழிலாளர்களை அதிகம்கொண்ட மாநிலங் களில் டெல்லியில் இன்றளவும் பெரும்பாலான பிற மாநிலத் தொழிலாளர்கள் உரிய தங்குமிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் நிகழ்வின் மூலம் நிறைய கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நிகழ்வை முன்கூட்டியே தடுக்க டெல்லி அரசு தவறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பும் உயிர் பலியும் ஏற்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. மக்கள்தொகை நெருக்கடி அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றான மும்பையில் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே மகாராஷ் டிராவில்தான் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவே அதிகமான பாதிப்புகள் பதிவானதற்கு காரணமாகச் சொல்லப் படுகிறது. மக்கள் அடர்த்திமிகுந்த தாராவியில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

மாநில அரசுகள், கொரோனா விஷயத்தில் சாதுர்யமாகச் செயல்படாமல்போனால் பலியாகப்போவது மக்கள்தான்!