Published:Updated:

"நல்ல காதல், நாடகக் காதல்... இப்படி பிரிப்பதே அரசியல்தான்!" - தீனா பேட்டி

தீனா
தீனா

வரலாற்றைப் படித்தறியாமல், சாதிவெறி பிடித்துத் திரிகிற சாதிய மனநோயாளிகளாக இருப்பவர்களிடமிருந்து என் போன்றோருக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். ஆனால், அதற்காக அவர்கள்மீது நான் கோபம் கொள்ள மாட்டேன்.

'வடசென்னை', 'தெறி', 'பிகில்' என்று பல படங்களில் வில்லனாக வந்து, தமிழ் சினிமா ரசிகர்களைத் தெறிக்க வைத்துக்கொண்டிருப்பவர் 'பாக்ஸர்' தீனா. தற்போது, சாதிக்கு எதிராக அவர் தெறிக்கவிடும் கருத்துகள், இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கின்றன. அவரிடம் பேசப் பேச... 'தீனாவுக்குள்ளும் இத்தனை நெருப்பா' என்று நாம் அதிசயித்துப் போனோம்.

"பொதுமேடைகளில் சாதிக்கு எதிரான கருத்துகளைப் பேசிவருகிறீர்கள். ஏதேனும் எதிர்ப்புகள் வருகின்றனவா?"

"நான் இதுவரை எந்தவொரு சாதி குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசியது கிடையாது. அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார், கக்கன், காமராஜர், முத்துராமலிங்கனார் என அனைத்து தலைவர்களையும் எனக்குப் பிடிக்கும். அண்ணன் திருமாவளவன் மீட்டிங் என்றாலும், அய்யா ராமதாஸ் மீட்டிங் என்றாலும் பாகுபாடு பார்க்காமல் முன்னால் அமர்ந்து கேட்பேன். அதனால், எனக்கு சாதிய உணர்வோ அடையாளமோ கிடையாது.

பாணன், பறையன், துடியன், கடம்பன் என்று தொழில்முறைப் பிரிவுகளுடன் சாதியற்றக் குடிகளாக வாழ்ந்துவந்த மரபைக்கொண்டது நம் தமிழ்ச் சமூகம். 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சாதி எனும் தீண்டாமையின் பிடி இங்கே இறுக ஆரம்பித்திருக்கிறது.

காதல் என்றால் காதல்தான். அதில் நல்ல காதல், கள்ளக்காதல், நாடகக் காதல் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் அது அரசியல்."

வரலாற்றைப் படித்தறியாமல், சாதிவெறி பிடித்துத் திரிகிற சாதிய மனநோயாளிகளாக இருப்பவர்களிடமிருந்து என் போன்றோருக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். ஆனால், அதற்காக அவர்கள்மீது நான் கோபம் கொள்ள மாட்டேன். ஏனெனில், அவர்களும் என் சகோதரர்கள்தான். வரலாற்றைப் படித்ததாலும் கேட்டுத் தெரிந்து கொண்டதாலும்தான் நான் இப்படிப் பேசுகிறேன். அப்படி வரலாற்றைப் படிப்பதற்கும் கேட்பதற்குமான வாய்ப்பு எனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்கும் கிடைக்கும்போது, அவர்களுக்கும் தெளிவு கிடைக்கும். அது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்." விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2tBF8Ia

" 'காதல், சாதியை ஒழிக்கும்' என்று மேடைகளில் நீங்கள் பேசுகிறீர்கள். எதிர்தரப்பு சொல்லும் நாடகக் காதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"எல்லா சமூகங்களிலும் நல்லவர், கெட்டவர் உண்டு. யாரோ ஓரிருவர் செய்யும் கெட்ட விஷயங்களுக்காக அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது ஏற்புடையதல்ல.

"நல்ல காதல், நாடகக் காதல்... இப்படி பிரிப்பதே அரசியல்தான்!" - தீனா பேட்டி

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் யோக்கியர்களா, சாதியின் பெயரால் பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருக்கும் சைக்கோக்களை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்? காதல் என்றால் காதல்தான். அதில் நல்ல காதல், கள்ளக்காதல், நாடகக் காதல் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் அது அரசியல்."

> "சாதியத்துக்கு எதிரான உங்களது கொந்தளிப்பின் பின்னணி என்ன?"

> " 'பாரதியாரை முன்னிலைப்படுத்திய அளவுக்கு பாரதிதாசனை எவரும் முன்னிலைப்படுத்தவில்லை' என்று பேசியிருக்கிறீர்கள்... பாரதியாரை அடித்தட்டு மக்கள் வரையிலும் கொண்டுசேர்த்தவர்கள் பொதுவுடைமைத் தோழர்கள்தான். அவர்கள்மீதுதான் விமர்சனம் வைக்கிறீர்களா?"

> "நீங்கள் இதுபோன்ற கருத்துகளைப் பேசுவதால், சினிமா வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் வராதா?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் 'பாக்ஸர்' தீனாவின் பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சாதிய எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம்!" - தெறிக்கவிடும் தீனா http://bit.ly/2tBF8Ia

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு