Published:Updated:

மகன் ஆர்யன் கான் பாதுகாப்புக்காக ஷாருக் கான் - கௌரி கான் எடுத்த முடிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான்
மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான்

மீடியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வீட்டுக்கு வெளியில் காத்திருப்பதால், தற்காலிகமாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆர்யனை வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை என்று ஷாருக் கான் தரப்பு முடிவு செய்திருக்கிறது.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக, கடந்த மாத தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டார். கடந்த வாரம் அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்யன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஷாருக் கான் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. ஷாருக் கான் தன் மகனின் பாதுகாப்பில் மிகவும் கவலை அடைந்திருக்கிறார் என்கிறார்கள். தொடர்ந்து தனது மகனை வீட்டில் அடைத்துவைத்திருக்க முடியாது என்று ஷாருக் கான் உணர்ந்திருக்கிறார். மீடியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வீட்டுக்கு வெளியில் காத்திருப்பதால் தற்காலிகமாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆர்யனை வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை என்று ஷாருக் கான் தரப்பு முடிவு செய்திருக்கிறது. ஆர்யனின் எதிர்கால வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ஆர்யனின் நடவடிக்கைகள், நண்பர்களையும் கண்காணிக்க ஷாருக் கான் முடிவு செய்திருக்கிறார்

ஆர்யன் கான், ஷாருக் கான்
ஆர்யன் கான், ஷாருக் கான்
``ஆர்யன் கான் ஷாருக் கானிடம் பணம் வாங்கித்தரச் சொன்னார்" டிவியில் பேட்டிகொடுத்த திருடன் கைதானது ஏன்?

மேலும், வெளியில் செல்லும்போது தன்னுடைய மகன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய ஷாருக் கான் முடிவு செய்திருக்கிறார். இதற்காக தனியார் செக்யூரிட்டி கார்டு ஒருவரைத் தனது மகனுக்காக நியமிக்க முடிவெடுத்திருக்கிறார். ஆர்யனைத் தொடர்ந்து சில நாள்கள் தங்களது கண்காணிப்பில் வைத்திருந்து, நடவடிக்கையைத் தீவிரமாக கவனிக்க ஷாருக் கான் - கெளரி கான் தம்பதி முடிவு செய்திருக்கின்றனர். தற்போது ஷாருக் கானுக்கு ரவி என்பவர் தனியார் செக்யூரிட்டி கார்டாகப் பணியாற்றிவருகிறார். ரவியைப் போன்று மிகவும் நம்பிக்கையான பாதுகாவலர் ஒருவரைத் தன் மகனுக்காகத் தேட ஷாருக் கான் ஆரம்பித்திருக்கிறார் என்கின்றனர். தனியார் பாதுகாவலரை நியமிக்கும்போது பார்ட்டிகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஷாருக் கான் கருதுவதாகச் சொல்கிறார்கள். கைது நடவடிக்கையால் ஆர்யன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலிருந்து தங்களுடைய மகனை வெளிக்கொண்டு வர ஆர்யனுக்கு கவுன்சலிங் கொடுக்கவும் ஷாருக் கானும், கௌரி கானும் முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு