Published:Updated:

‘ஜருகண்டி... ஜருகண்டி’

சிவகுமார்
பிரீமியம் ஸ்டோரி
சிவகுமார்

சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்

‘ஜருகண்டி... ஜருகண்டி’

சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்

Published:Updated:
சிவகுமார்
பிரீமியம் ஸ்டோரி
சிவகுமார்

‘‘திருப்பதி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் பாகுபாடு காட்டப்படுகிறது’’ என்று ‘ஜருகண்டி’ கதையைச் சொன்ன நடிகர் சிவகுமார்மீது ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்தக் கதையை அவர் ஓராண்டுக்கு முன்னர் ஒரு கருத்தரங்கில் கூறினார். அது தொடர்பான வீடியோ இந்த நேரத்தில் வைரல் ஆனதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சிவகுமார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படி என்னதான் பேசினார் சிவகுமார்? ‘‘கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. 48 நாள்கள் விரதமிருந்த ஒரு ஏழை பக்தன் காட்பாடியிலிருந்து திருப்பதி கோயிலுக்கு நடந்து போகிறான். நீண்ட வரிசையில் நான்கு நாள்கள் காத்திருந்த பிறகே அவனால் சாமியை தரிசனம் செய்ய முடிகிறது. ‘ஜருகண்டி... ஜருகண்டி...’ என்று அவனை விரட்டுகிறார்கள். அதுவே, ஒரு கோடீஸ்வரன் மனைவிக்குத் தெரியாமல் கொஞ்சும் குமரியை திருப்பதிக்குக் கூட்டிச் சென்று விடுதி அறையில் தங்குகிறான். அன்றிரவு மது போதையில் இருந்துவிட்டு, காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் செல்கிறான். அவனுக்கு ‘கும்ப’ மரியாதை செய்கிறார்கள்’’ என்று அந்த வீடியோவில் ஆறு நிமிடங்கள் பேசியிருக்கிறார் சிவகுமார்.

சிவகுமார்
சிவகுமார்

இந்த வீடியோ காட்சியின் ‘யூடியூப்’ லிங்க்கை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி சுப்பிரமணிய ரெட்டிக்கு ஏப்ரல் 26-ம் தேதி, ‘தமிழ்மாயன்’ என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து இந்து மக்கள் கட்சியினர் புகாராக அனுப்பியிருக்கிறார்கள். வீடியோவை ஆய்வு செய்த அந்த விஜிலென்ஸ் அதிகாரி, ‘‘நடிகர் சிவகுமார் திருப்பதி கோயில் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். தேவஸ்தானம் குறித்தும் தவறான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவருடைய பேச்சு ஏழுமலையான் கோயிலின் பெருமைக்கும், தேவஸ்தானத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார்’’ என்று திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இதையடுத்தே சிவகுமார்மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொக்கி குமார்
கொக்கி குமார்

இதை முன்வைத்து, ‘‘சிவகுமாரின் குடும்பத்தினரைச் சில அமைப்புகள் குறிவைத்துச் செயல்படுகின்றன’’ என்ற குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது. சிவகுமார்மீது புகார் அளிக்கக் காரணமான, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் `கொக்கி குமார்’ என்கிற பிரதீப் குமாரிடம் பேசினோம். ‘‘நான் காரைக்குடியைச் சேர்ந்தவன். எங்களுக்கு சிவகுமாரின் வீடியோ இப்போதுதான் கிடைத்தது. உண்மையில், திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்பவர்களுக்குத்தான் தேவஸ்தானம் அதிக முன்னுரிமை கொடுக்கிறது. சிவகுமாரின் குடும்பத்தினர் வேறு மதத்திலுள்ள பிரச்னைகளைப் பற்றி வாய் திறப்பதில்லை. எப்போதுமே இந்து மதத்தையும், இந்து கடவுள்களை மட்டுமே விமர்சனம் செய்கிறார்கள். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்’’ என்றார் காட்டமாக.

இது குறித்து விளக்கமறிய சிவகுமாரைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் தரப்பில் விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism