Published:Updated:

சில விஷயங்களை ஜாடை மாடையாகத்தான் சொல்ல முடியும்! - என்னமோ சொல்கிறார் கஸ்தூரி...

கஸ்தூரி
பிரீமியம் ஸ்டோரி
கஸ்தூரி

“சட்டமன்றத்தில் விருதுநகர் வழக்கு தொடர்பாக முதல்வர் சொன்ன அதே விஷயங்களைக் குறிப்பிட்டுத்தான் நானும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன்

சில விஷயங்களை ஜாடை மாடையாகத்தான் சொல்ல முடியும்! - என்னமோ சொல்கிறார் கஸ்தூரி...

“சட்டமன்றத்தில் விருதுநகர் வழக்கு தொடர்பாக முதல்வர் சொன்ன அதே விஷயங்களைக் குறிப்பிட்டுத்தான் நானும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன்

Published:Updated:
கஸ்தூரி
பிரீமியம் ஸ்டோரி
கஸ்தூரி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சிக்குக் கொஞ்சமும் குறைவில்லாத அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது விருதுநகர் பாலியல் வன்கொடுமைச் சம்பவம்!  இந்தக் குற்றச் செயலில், தி.மு.க-வினரும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது அரசியல் அரங்கில் அனலைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில், ‘விருதுநகர் விஷயத்தில், உடன்பிறப்புகள் மௌனம் காப்பது ஏன்?’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, பரபரப்பு தீயைப் பற்றவைத்திருக்கும் நடிகை கஸ்தூரியிடம் பேசினோம்...

“விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல்வர் ஸ்டாலின் `கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சட்டசபையிலேயே சொல்லியிருக்கிறார். அதன் பிறகும், ‘தி.மு.க மௌனமாக இருப்பது ஏன்?’ என்று எதன் அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள்?’’

“முதல்வர் ஸ்டாலின் ‘விரைவில் விசாரணையை முடித்து தண்டனை வழங்குவதில் இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும்’ என்றெல்லாம் சட்டசபையிலேயே சவால்விட்டிருக்கிறார். இது பாராட்டுக்குரியதுதான். ஆனாலும் பிற விஷயங்களிலெல்லாம் பொங்கும் தி.மு.க உடன்பிறப்புகள் பலரும் இதில் மெளனம் சாதிக்கிறார்கள். பொள்ளாச்சிப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடைபெற்றபோது, ஒட்டுமொத்தமாக ‘அ.தி.மு.க-வினர் அனைவருமே மோசமானவர்கள்’ என்கிறரீதியில் விமர்சித்த தி.மு.க-வினர் இப்போது மட்டும் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே என் கேள்வியின் அடிப்படை!”

“குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்து, வழக்கையும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றிவிட்ட சூழலில், தி.மு.க-வினர் என்ன மாதிரியான விமர்சனம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’

“தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால், குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் தவறு செய்துவிட்டால், ‘அந்தக் கட்சியில் எல்லோருமே அப்படித்தான். பாலியல் ஜல்சா கட்சியில் அப்படிச் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்’ என்றெல்லாம் வாய் பேசியவர்கள், சாதியைச் சொல்லி விமர்சித்தவர்கள், இப்போது விருதுநகர் விவகாரத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன்?”

“ஆனால், உங்கள் கேள்விக்கு பொள்ளாச்சி, காஷ்மீர் சம்பவங்களை உதாரணம் சொல்லி, ‘பேசத் தெரிந்தால் பேசுங்கள்’ என பதிலடி கொடுத்திருக்கிறாரே கவிஞர் சல்மா?’’

“மறுபடியும் சொல்கிறேன்.... தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் கேட்கவில்லை. அண்மையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி.ராகவன் குறித்து சர்ச்சை எழுந்தபோது பா.ஜ.க-வையும், குறிப்பிட்ட சாதியையும் மட்டுமே திரும்பத் திரும்ப திட்டித் தீர்த்தார்கள். இதையெல்லாம் சல்மா ஏன் அப்படியே தாண்டிப் போய்விட்டார்? கே.டி.ராகவன் விஷயத்தில், தனிப்பட்ட ஒரு சமூகத்தை இழுத்து அசிங்கப்படுத்தியவர்கள், இந்தச் சம்பவத்தில் மட்டும் மௌனமாகிவிட்டார்களே... ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு... பாதிக்கப்பட்டிருப்பது தலித் பெண் என்ற நிலையில், வி.சி.க-வும்கூட இது குறித்துப் பேசவில்லையே?’’

“ `கட்சி பார்த்துத்தான் குரல் கொடுப்பீர்களா?’ என்று கேள்வி கேட்கும் நீங்களேகூட, தி.மு.க-வுக்கு எதிரான விஷயங்களில் மட்டும்தானே கேள்வி கேட்கிறீர்கள்?’’

“அப்படிச் சொல்ல முடியாது. பொள்ளாச்சி சம்பவம், ஆசிபா வழக்கு, நிர்பயா வழக்கு என்று நாட்டில் நிகழ்ந்த அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் நான் பேசிவருகிறேன். அந்த வகையில், அயனாவரத்தில் மாற்றுத்திறனாளிக் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் ஆரம்பித்து ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமை வரை அனைவருக்காகவும் நான் குரல் எழுப்பிவருகிறேன்!’’

சில விஷயங்களை ஜாடை மாடையாகத்தான் சொல்ல முடியும்! - என்னமோ சொல்கிறார் கஸ்தூரி...


“ ‘தி.மு.க என்றாலே தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது’ என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பதிவிட்டிருக்கிறீர்கள்?’’

“அது பொதுவான மக்களின் குரல்! எனது தனிப்பட்ட கருத்து இல்லை. அதாவது, ‘அ.தி.மு.க ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு மிகச்சரியாக இருக்கும். அதுவே தி.மு.க ஆட்சியில் நாட்டின் உள்கட்டமைப்புகள் பக்காவாக இருக்கும்’ என்பது பொதுவாக எல்லோரும் சொல்லக்கூடிய கூற்று. மற்றபடி இதை நான் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சொல்லவில்லை. அதனால்தான், ‘இப்படியொரு கருத்து நிலவுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறேன். தவிர, வழக்கறிஞராக நிறைய பெண்களுக்கு நான் கவுன்சலிங் கொடுத்துவருகிறேன். அந்தவகையில் அனைத்து தரப்புப் பெண்களிடமும் நான் பேசிய அனுபவத்திலிருந்துதான் எனக்கு இந்தக் கருத்து தெரியவருகிறது. மற்றபடி இந்தக் கருத்து சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் நான் போக விரும்பவில்லை. எனவே, மக்களின் இந்தக் கருத்து மாற வேண்டுமானால், நீங்கள் மக்களைக் கேளுங்கள்; என்னை மட்டும் கேட்காதீர்கள்.’’

“அதே பதிவில், ‘கட்சி, குடும்பம், பணம், பதவி போன்ற கட்டாயங்களைக் கடந்து, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு இவற்றை இந்த அரசு சாதிக்குமா?’ என்றும் தி.மு.க அரசைக் குறிவைத்துக் கேள்வி எழுப்பியிருக்கிறீர்களே?’’

“சட்டமன்றத்தில் விருதுநகர் வழக்கு தொடர்பாக முதல்வர் சொன்ன அதே விஷயங்களைக் குறிப்பிட்டுத்தான் நானும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன். இதற்கும்கூட, புள்ளிவிவரம், உதாரணமெல்லாம் கேட்காதீர்கள்... அப்படியெல்லாம் சொல்கிற அளவுக்கு நான் தைரியசாலி இல்லை! ஆனால், நான் கேட்ட கேள்வியில் உண்மையிருக்கிறது.’’

“விருதுநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவான குரல் என்பதைவிட, ‘தி.மு.க அரசை விமர்சிக்க வேண்டும்’ என்பதாகத்தானே உங்கள் பதிவு இருக்கிறது?’’

“தமிழக அரசின் பட்ஜெட்டைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறேன். தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து அனுமதிகளையும் ஒற்றைச் சாளர முறையில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்திருப்பதை வரவேற்றிருக்கிறேன். யாரையும் தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டும் என்கிற நோக்கம் எனக்கில்லை.”

“அந்தப் பதிவில் ‘காவல் தெய்வங்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும்’ என்றும் சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்களே... என்கவுன்ட்டரை ஆதரிக்கிறீர்களா?’’

“ `காவல் தெய்வமே பார்த்து, ஒரு தண்டனை கொடுக்கட்டும்’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் சட்டம் படித்தவள்... சில விஷயங்களை இப்படி ஜாடை மாடையாகத்தான் சொல்ல முடியும்!’’