Published:Updated:

“ஜூ.வி-க்கு நன்றி!” - முடிவுக்கு வந்த 30 வருடப் போராட்டம்... நெகிழும் ஒட்டங்காடு மக்கள்!

ஒட்டங்காடு மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒட்டங்காடு மக்கள்

1993-க்குப் பிறகு அடங்கல் புத்தகத்தைக் காணவில்லை என்றார்கள். அதனால், அரசு நலத்திட்டங்கள் எதையும் பெற முடியாமல் திண்டாடினோம்

“ஜூ.வி-க்கு நன்றி!” - முடிவுக்கு வந்த 30 வருடப் போராட்டம்... நெகிழும் ஒட்டங்காடு மக்கள்!

1993-க்குப் பிறகு அடங்கல் புத்தகத்தைக் காணவில்லை என்றார்கள். அதனால், அரசு நலத்திட்டங்கள் எதையும் பெற முடியாமல் திண்டாடினோம்

Published:Updated:
ஒட்டங்காடு மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒட்டங்காடு மக்கள்

கிராம நிர்வாக அலுவலகத்திலுள்ள அடங்கல் பதிவேடு புத்தகம் காணாமல்போனதால், அரசு நலத்திட்ட உதவிகள் எதையும் பெற முடியாமல் பல துயரங்களைச் சந்தித்தனர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஒட்டங்காடு கிராம மக்கள். அவர்களின் நிலை குறித்து 2.2.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘அடங்கல் புத்தகத்தைக் காணோம்... அலையவிடும் அதிகாரிகள்... தவிக்கும் கிராம மக்கள்’ என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்!

கட்டுரை வெளியானவுடனேயே அடங்கல் புத்தகம் தயார் செய்து தரும்படி முதல்வர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளுக்கு உத்தரவு சென்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட நில அளவைப் பிரிவிலிருந்த மற்றோர் அடங்கல் புத்தகத்தின் மூலத்தை ஜெராக்ஸ் எடுத்து, புதிய புத்தகம் தயார்செய்து ஒட்டங்காடு வி.ஏ.ஓ-வான பெர்ஷியாவிடம் ஒப்படைத்துள்ளார்கள் அதிகாரிகள். அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ‘‘அடங்கல் புத்தகத்தை உடனே தயார்செய்து தரும்படி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடமிருந்து உத்தரவு வந்தது. பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகரன், தாசில்தார் கணேஷ்வரன், பட்டுக்கோட்டை வட்ட நில அளவைப் பிரிவு ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் அடங்கல் புத்தகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். மாவட்ட நில அளவைப் பிரிவு ரெக்கார்டிலுள்ள அடங்கல் புத்தகத்தின் மூலத்தை ஜெராக்ஸ் எடுத்து, புதிய புத்தகம் தயார் செய்தார்கள். அந்த அடங்கல் புத்தகத்தை ஒட்டங்காடு வி.ஏ.ஓ பெர்ஷியாவிடம் ஆர்.டி.ஓ பிரபாகரன் ஒப்படைத்திருக்கிறார்’’ என்றார்கள்.

“ஜூ.வி-க்கு நன்றி!” - முடிவுக்கு வந்த 30 வருடப் போராட்டம்... நெகிழும் ஒட்டங்காடு மக்கள்!

ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசிடம் பேசினோம்... ‘‘1993-க்குப் பிறகு அடங்கல் புத்தகத்தைக் காணவில்லை என்றார்கள். அதனால், அரசு நலத்திட்டங்கள் எதையும் பெற முடியாமல் திண்டாடினோம். வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இடத்தை வாங்கவோ, விற்கவோ முடியாமல் கஷ்டப்பட்டுவந்தோம். ஜூ.வி-யில் செய்தி வெளியான அடுத்த சில தினங்களில், புதிய அடங்கல் புத்தகத்தைத் தயார் செய்து ஒப்படைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30 வருடப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கும் ஜூ.வி-க்கும், உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும் கிராம மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று நெகிழ்ந்தார்.

“ஜூ.வி-க்கு நன்றி!” - முடிவுக்கு வந்த 30 வருடப் போராட்டம்... நெகிழும் ஒட்டங்காடு மக்கள்!

ஆர்.டி.ஓ பிரபாகரனிடம் பேசியபோது, “மாவட்ட நில அளவைப் பிரிவில் எப்போதும் ஓர் அடங்கல் புத்தகம் இருக்கும். அதைக் கண்டுபிடித்து ஜெராக்ஸ் எடுத்து, புதிதாக அடங்கல் புத்தகம் தயார்செய்து வி.ஏ.ஓ-விடம் ஒப்படைத்திருக்கிறோம். இனி மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது’’ என்றார். ‘‘புதிய அடங்கல் புத்தகம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது’’ என்றார் வி.ஏ.ஓ பெர்ஷியா.

இதே வேகத்தில், அரசு நிர்வாகம் அனைத்துத் துறைகளிலும் செயல்பட வேண்டும் என்பதே நம் விருப்பம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism