Published:Updated:

பருத்திக்கொட்டை வந்துடுச்சு... புண்ணாக்கு கொடுங்க! - கலப்பட பொங்கல் பரிசால் கடுகடுக்கும் மக்கள்!

கலப்பட பொங்கல் பரிசு
பிரீமியம் ஸ்டோரி
கலப்பட பொங்கல் பரிசு

பொங்கல் பொருள்னு கொடுத்தாங்க. பொட்டலங்களைப் பிரிச்சுப் பார்த்தா, உள்ள என்னென்னமோ இருக்கு. மிளகுப் பொட்டலத்துல பருத்திக்கொட்டை கலந்திருக்காங்க

பருத்திக்கொட்டை வந்துடுச்சு... புண்ணாக்கு கொடுங்க! - கலப்பட பொங்கல் பரிசால் கடுகடுக்கும் மக்கள்!

பொங்கல் பொருள்னு கொடுத்தாங்க. பொட்டலங்களைப் பிரிச்சுப் பார்த்தா, உள்ள என்னென்னமோ இருக்கு. மிளகுப் பொட்டலத்துல பருத்திக்கொட்டை கலந்திருக்காங்க

Published:Updated:
கலப்பட பொங்கல் பரிசு
பிரீமியம் ஸ்டோரி
கலப்பட பொங்கல் பரிசு

‘‘மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை கொடுத்தீங்க. அப்படியே நசநசத்துப்போன வெல்லத்துக்கு பதிலா புண்ணாக்கையும் கொடுத்தா, ரெண்டையும் கலந்து மாட்டுக்காவது கொடுப்போம்!’’ - தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து இப்படித்தான் கடுகடுக்கிறார்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள்.

கடந்த 16.1.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘புளியில் பல்லி... உருகிய வெல்லம்... பை இல்லை... பொங்கல் பரிசா... ஏமாற்றமா?’ என்கிற தலைப்பில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுப்பொருள்களில் ஏற்பட்ட குளறுபடிகளை விவரித்திருந்தோம். பொங்கல் பரிசு விநியோகம் இம்மாதம் இறுதிவரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், குளறுபடிகள் தீர்ந்தபாடில்லை. பல இடங்களில் பொங்கல் தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை, இலவம்பஞ்சுக் கொட்டை, பப்பாளி விதை ஆகியவை கலப்படம் செய்யப்பட்டிருந்தன. மஞ்சள்தூள், சீரகத்தில் மரத்தூள் கலந்திருந்தன. இப்படி புகார்கள் வரிசைகட்டவே... ஜனவரி 17-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ரேஷன் கடைகளுக்கு விசிட் அடித்தது விகடன் டீம். சென்ற இடமெல்லாம், கலப்பட பொங்கல் பொருள்களைக் காட்டி மக்கள் தங்களது குமுறல்களைக் கொட்டினர்.

பருத்திக்கொட்டை வந்துடுச்சு... புண்ணாக்கு கொடுங்க! - கலப்பட பொங்கல் பரிசால் கடுகடுக்கும் மக்கள்!
பருத்திக்கொட்டை வந்துடுச்சு... புண்ணாக்கு கொடுங்க! - கலப்பட பொங்கல் பரிசால் கடுகடுக்கும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையும் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபாளையம் ரேஷன் கடைக்கு நாம் சென்றபோது அங்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருள்களை பொதுமக்கள் வீதியில் வீசியெறிந்தபடி கோபத்துடன் நம்மிடம் பேசினார்கள்... ‘‘பொங்கல் பொருள்னு கொடுத்தாங்க. பொட்டலங்களைப் பிரிச்சுப் பார்த்தா, உள்ள என்னென்னமோ இருக்கு. மிளகுப் பொட்டலத்துல பருத்திக்கொட்டை கலந்திருக்காங்க. கையோடு புண்ணாக்கைக் கொடுத்தாங்கன்னா, ரெண்டையும் கலந்து மாட்டுக்காவது கொடுக்கலாம். மிளகாய்ப்பொடியை முகர்ந்து பார்த்தாலும் வாசனை வரலை. நாக்குலவெச்சா காரமே இல்லை... அதுல மரத்தூள் கலந்திருக்காங்க. சீரகம், மல்லித்தூள்லயும் ஏதோ கலந்திருக்காங்க... மண்ணு மாதிரி இருக்கு. நியாயவிலைக் கடைனு பேர் வெச்சிக்கிட்டு அநியாயம் பண்றாங்க’’ என்றனர் கொதிப்புடன்.

மக்களின் இந்தக் கொதிப்பை நமது டீம் அப்படியே காணொலியாகப் பதிவுசெய்து வெளியிட்டது. விகடன் இணைய பக்கங்களில் வெளியான அந்தக் காணொலி வைரலாகி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் காணொலியைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு.

இந்தக் குளறுபடிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனிடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் குனிச்சி கிராமத்திலுள்ள குடோனில்தான் தரமில்லாத ஒரு லோடு பொருள்கள் கலந்துள்ளன. அதைச் சரியாக ஆய்வு செய்யாததால் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தரமில்லாத பொருள்களுக்கு பதிலாக மறுநாளே மாற்றுப் பொருள்கள் வழங்கப்படும்’’ என்றார். அவர் சொன்னதைப்போலவே ஜனவரி 19-ம் தேதி குனிச்சி குடோனுக்கு உட்பட்ட திருப்பத்தூர், நாட்றம்பள்ளி பகுதியிலிருக்கும் ரேஷன் கடைகளுக்கு மாற்றுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு விநியோகிக்கும் பணியும் நடைபெற்றது.

தரமான பொருள்கள்தான் வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய மீண்டும் நமது டீம் ராஜபாளையம் ரேஷன் கடைக்குச் சென்று விசாரித்தது. இதில் மிளகு, மிளகாய்ப்பொடி மட்டுமே மாற்றிக் கொடுக்கப்பட்டிருந்தன. முன்பு கொடுத்ததைவிட ஓரளவு பரவாயில்லை என்ற அளவுக்குத்தான் அதன் தரம் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். ஆனால் சீரகம், மல்லித்தூள் இரண்டையும் மாற்றித்தரவில்லை. கலப்பட புகார் சொல்லப்பட்ட அதே பொட்டலங்கள்தான் கொடுக்கப்பட்டன. இது குறித்து, ரேஷன் கடை பணியாளரிடம் கேள்வி எழுப்பியபோது, “லோடு வரலைங்க சார்” என்றார். பிறகு பொருள்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு குனிச்சியிலுள்ள நுகர் பொருள் வாணிபக்கழகக் கிடங்குக்குத் தகவல் தெரிவித்தார். அடுத்த அரை மணி நேரத்தில் தரமான சீரகம், மல்லித்தூள் பாக்கெட்டுகள் வந்து சேர்ந்தன. ராஜபாளையம் ரேஷன் கடை என்பது ஓர் உதாரணம்தான்... வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு ரேஷன் கடைகளில் இதே புகார்கள்தான் வரிசைகட்டின.

பருத்திக்கொட்டை வந்துடுச்சு... புண்ணாக்கு கொடுங்க! - கலப்பட பொங்கல் பரிசால் கடுகடுக்கும் மக்கள்!
பருத்திக்கொட்டை வந்துடுச்சு... புண்ணாக்கு கொடுங்க! - கலப்பட பொங்கல் பரிசால் கடுகடுக்கும் மக்கள்!

இந்தக் குளறுபடி குறித்து உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் பேசினோம். ‘‘சில இடங்களில், அதுவும் சில பொருள்களில் மட்டுமே தரம் குறித்துப் புகார்கள் வந்தன. உடனடியாக தரமான பொருள்களை மாற்றிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் மிளகாய்ப்பொடி, சீரகம், மிளகு ஆகிய பொருள்கள் தரமில்லை என்று புகார் வந்ததையடுத்து, அனைத்தையும் மாற்றித்தர உத்தரவிட்டேன். அதன்படி, பொது மக்களுக்குத் தரமான பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. 21 பொருள்களும் சரியாகவும் தரமாகவும் இருக்கின்றனவா என்று பொதுமக்கள் சரிபார்த்து, அதிகாரிகளிடம் தெரியப்படுத்தலாம். கவனக்குறைவாகச் செயல்படும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் 290 சிவில் சப்ளை குடோன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி இருக்கிறார். அவர்தான் அந்த குடோனுக்கு வரும் பொருள்களின் தரத்துக்குப் பொறுப்பு’’ என்றார்.

கொள்முதல் ஒப்பந்தங்களிலேயே குளறுபடிகள் இருந்தால், அதிகாரிகள் என்ன செய்வார்கள் அமைச்சரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism