Published:Updated:

வீட்டுச் சாப்பாடு, மருத்துவமனையில் ஓய்வு! - ‘நஞ்சு’ முருகேசன் அப்டேட்

நாஞ்சில் முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் முருகேசன்

நாஞ்சில் முருகேசனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ‘நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்திருக்கிறது.

வீட்டுச் சாப்பாடு, மருத்துவமனையில் ஓய்வு! - ‘நஞ்சு’ முருகேசன் அப்டேட்

நாஞ்சில் முருகேசனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ‘நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்திருக்கிறது.

Published:Updated:
நாஞ்சில் முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் முருகேசன்

15 வயது சிறுமியை தொடர்ந்து சிறார் வதை செய்த பகீர் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான நாஞ்சில் முருகேசன் மருத்துவமனையில் சொகுசாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, 20 வயது வாலிபர் கடத்தியதாக கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜூலை 17-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமியும் வாலிபரும் மீட்கப்பட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான நாஞ்சில் முருகேசன் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறார் வதை செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டபோது...
கைது செய்யப்பட்டபோது...

சிறுமியின் தாயின் உதவியுடன் அசோக்குமார், கார்த்திக், பால் ஆகியோரும் சிறுமியை சிறார் வதை செய்திருப்பதும் தெரியவந்தது. முருகேசன் ஆளுங்கட்சி புள்ளி என்பதால், பம்மிய போலீஸார் சுமார் பத்து நாள்களுக்கு மெளனம் காத்தனர். ஜூலை 27-ம் தேதி முருகேசன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகே அவர் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்.

சிறுமியின் தாய் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை ஜூலை 29-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைப்பதற்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகேசனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைநோய்ப் பிரச்னை இருந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக 5.8.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘பிஞ்சைச் சீரழித்த நஞ்சு முருகேசன்... எடப்பாடி அரசின் பத்து நாள் நாடகம்!’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்ரிநாராயணன்
பத்ரிநாராயணன்

இதற்கிடையில் நாஞ்சில் முருகேசனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ‘நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்திருக்கிறது. ஆனால், அவருக்கு சுகர் நார்மல் ஆகவில்லை. அதனால், போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் நாஞ்சில் முருகேசனுக்கு தினமும் அவரது வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பிவைக்கப்படுகிறது. அங்கு அவருக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் சொகுசாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்

இது பற்றி கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யான பத்ரிநாராயணனிடம் பேசினோம். “நாஞ்சில் முருகேசன் மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால் உணவு வழங்குவது உள்ளிட்ட பொறுப்புகள் மருத்துவர்களுடையது. அவரைக் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளோம். அவர் டிஸ்சார்ஜ் ஆனதும், சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்றார்.

ம்.... சொகுசானவர்களுக்குத்தானே காலம்!