Published:Updated:

15 வருடங்களுக்குப் பின் கிடைத்த பிள்ளை... கதையல்ல நிஜம்!

 அம்மா பிச்சம்மாள், அண்ணன்களுடன் துர்காதேவி...
பிரீமியம் ஸ்டோரி
அம்மா பிச்சம்மாள், அண்ணன்களுடன் துர்காதேவி...

பிரிவும் சந்திப்பும்

15 வருடங்களுக்குப் பின் கிடைத்த பிள்ளை... கதையல்ல நிஜம்!

பிரிவும் சந்திப்பும்

Published:Updated:
 அம்மா பிச்சம்மாள், அண்ணன்களுடன் துர்காதேவி...
பிரீமியம் ஸ்டோரி
அம்மா பிச்சம்மாள், அண்ணன்களுடன் துர்காதேவி...
திரைப்படம் போலிருக்கிறது துர்காதேவியின் கதை. துர்காதேவியின் அம்மா சில மாதங்களுக்கு முன் இறந்துவிட, தொடர்ந்து அவர் அப்பாவுக்கும் உடல்நிலை சரியில்லாமல்போனது. அந்த நிலையில், ‘நீ நாங்க பெத்த புள்ள இல்ல. பச்சப்புள்ளையா உன்னை தத்தெடுத்தோம்’ என்று சொல்லிவிட்டு இறந்துபோனார் அப்பா. 15 வயது துர்காதேவி, தற்போது தன் உண்மையான பெற்றோரைத் தேடிக் கண்டடைந்திருக்கும் நெகிழ்ச்சிக் கதை இது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துர்காதேவியிடம் பேசினோம். புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் - சரோஜா தம்பதியின் தத்து மகளாக இருந்து, தன் சொந்தப் பெற்றோரான பாட்னாப்பட்டியைச் சேர்ந்த குஞ்சன் - பிச்சம்மாளைச் சென்றடைந்ததுவரை பகிர்ந்து கொண்டார்.

 சரோஜா -   சுப்பிரமணியன்
சரோஜா - சுப்பிரமணியன்

“சுப்பிரமணியன் அப்பாவும் சரோஜா அம்மாவும் என்னை ரொம்ப அன்பா பார்த்துக்கிட்டாங்க. அப்பாவுக்கு புரோகிதம்தான் தொழில். அம்மா மூணு மாசத்துக்கு முன் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. அதிலிருந்தே அப்பாவுக்கும் முடியலை. திடீர்னு ஒருநாள் என் பர்த் சர்ட்டிபிகேட்டைக் கொடுத்து, பெற்றோர் என்கிற இடத்துல இருந்த பெயர்களைக் காட்டி, உண்மையைச் சொன்னார். ‘எங்களுக்கு அப்புறமும் நீ நல்லா இருக்கணும்மா, ஆனா, உன்னைப் பெத்தவங் களோடு சேர்த்து வைக்கிற நிலைமையில இப்போ நான் இல்லை’னு சொல்லிட்டுப் படுத்தவர், எழுந்திருக்கவே இல்லை. ஒரே வாரத்துல இறந்துட்டார்.

இத்தனை வருஷமா என்னை சீரும் சிறப்புமா வளர்த்த அப்பா, அம்மா இல்லாமப்போயிட்டதை நினைச்சு அழுறதா, என்னைப் பெத்த அப்பா, அம்மா யாருன்னு தெரியாததை நினைச்சு அழுறதானு நான் மருகிப்போயிருந்தப்போதான், கடவுள் மாதிரி லலிதா பிரியதர்ஷினி அம்மா உதவிக்கு வந்தாங்க. அவங்க உதவியோடு என் உண்மையான பெற்றோரைக் கண்டு பிடிச்சுட்டேன். என் அம்மா, அண்ணன்கள், அக்காக்கள், அண்ணின்னு எனக்குப் பெரிய குடும்பம் கிடைச்சிருக்கு. அண்ணன் இப்போ என்னைப் படிக்க வைக்கிறார். அண்ணி பாசமா என்னைப் பார்த்துக்கிறாங்க. சுப்பிரமணியன் அப்பாவுக்கு நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஆசை. நிச்சயம் படிப்பேன்” என்கிறார் துர்காதேவி நம்பிக்கையுடன்.

பிறந்த சில நாள்களிலேயே பிச்சம்மாள் கைகளிலிருந்து துர்காதேவி தத்துக்கொடுக்கப் பிரிக்கப்பட்ட கதை துயரம்.

சுப்பிரமணியன் - சரோஜா தம்பதிக்குத் திருமணமாகி 25 ஆண்டுகளுக்கும் மேல் குழந்தை இல்லை. தினம் தினம் சரோஜா அழுது புலம்ப, அந்த ஏக்கத்திலேயே தன் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுவிடுவாரோ என்று அஞ்சிய சுப்பிரமணியன், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தார். இந்த நிலையில், ஒரு வேலை விஷயமாக சுப்பிரமணியன் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அங்கு பிச்சம்மாளுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. அவரின் கணவர் குஞ்சனின் உறவினர்கள்,

‘ஏற்கெனவே நாலு புள்ளைங்க, இது அஞ்சாவது புள்ள, அதுவும் பொம்பளப் புள்ளையா பிறந்திருக்கு. இருக்கிற கஷ்டத்துல என்ன செய்யப் போறாங்களோ...’ என்று புலம்பியதை யதேச்சையாக சுப்பிரமணியன் கேட்டார்.

பின் அந்தத் தம்பதியிடம், தனக்குக் குழந்தை இல்லாததைக் கூறி, பிறந்த குழந்தையைத் தனக்குத் தத்துக்கொடுக்கச் சொல்லிக் கேட்டு மன்றாடினார்.

ஒரு கட்டத்தில் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று கூறி பெற்றோரை சம்மதிக்க வைத்தனர். அரசு முறைப்படி அல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் தத்துக்கொடுக்கப்பட்டது. பிறப்புச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு, பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் சுப்பிரமணியன்.

15 வருடங்கள் உருண்டோட, சுப்பிரமணியன், சரோஜாவின் மறைவுக்குப் பின், சரோஜாவின் தங்கையைத் தவிர துர்காதேவிக்கு யாரும் இல்லாத நிலை. சுப்பிரமணியன் வீட்டுக்கு அருகே வசித்த காவல்துறை உதவி ஆய்வாளர் லலிதா பிரியதர்ஷினி, இது பற்றி அறிந்து தாமாக முன்வந்து உதவிசெய்ய, பிறப்புச் சான்றிதழை வைத்து விராலிமலை போலீஸார் துர்காதேவியைப் பெற்றெடுத்த தாய் தந்தையைக் கண்டுபிடித்தனர். மகளை அழைத்துச்செல்ல தன் குடும்பத்துடன் விராலிமலைக்கு வந்தார் பிச்சம்மாள். ஆனந்தக் கண்ணீருடன் துர்காதேவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நிர்க்கதியாக நின்ற துர்காதேவி, இப்போது தன் பெரிய கூட்டுக்குடும்பத்துடன் இணைந்துள்ளார்

 அம்மா பிச்சம்மாள், அண்ணன்களுடன் துர்காதேவி...
அம்மா பிச்சம்மாள், அண்ணன்களுடன் துர்காதேவி...

பிச்சம்மாளிடம் பேசினோம். “மொதல்ல ரெண்டு பொம்பளப்புள்ளைங்க, அடுத்து ரெண்டு ஆம்பளப் புள்ளைங்க, அஞ்சாவதா துர்காதேவி பொறந்துச்சு. அந்த நேரத்துல குடும்பத்துல ரொம்பவே கஷ்டம். இப்போ, என் வீட்டுக்காரர் இறந்து ஏழு வருஷமாச்சு. மூணாவது பிள்ளை மாசிமலைதான் குடும்பத்தைப் பார்த்துக்கிறான். பொம்பளப் புள்ளைகளை ஒருவழியா கரைசேர்த்திட்டோம். குழந்தை பொறந்து அதைத் தத்துக்கொடுத்துட்டோம்னு புள்ளைங்க யார்கிட்டேயும் சொல்லலை. எனக்கு அப்பப்போ புள்ளை நெனப்பு வந்து, ஒரு தடவையாவது அது முகத்தைப் பார்க்கணும்னு தோணும்.

நானும் அவரும் எங்க சக்திக்கு முடிஞ்ச அளவுக்குத் தெரிஞ்ச இடங்கள்ல எல்லாம் தேடிப் பார்த்தோம். புள்ளையக் கண்டுபிடிக்க முடியலை. இன்னிக்கு அதுவே வரமா எங்க கையில வந்து சேர்ந்திருக்கு. ராணி மாதிரி புள்ளையை வளர்த்துக் கொடுத்திருக்காங்க. இனி நாங்க நல்லபடியா பார்த்துக்குவோம்” என்றார் கண்கள் கசிய!