அரசியல்
Published:Updated:

விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதால் ஏற்படும் பாதகங்கள்... சாதகங்கள்!

விமான நிலைய தனியார்மயம்
பிரீமியம் ஸ்டோரி
News
விமான நிலைய தனியார்மயம்

முக்கிய முடிவுகளை அரசுத் தலையீடு இன்றி சுதந்திரமாகவும் விரைவாகவும் எடுக்க முடியும்

பாதகங்கள்

* இந்திய விமான நிலையங்கள் ஆணையம், இந்தியாவிலுள்ள பல்வேறு விமான நிலையங்களைப் பல நூறு கோடி ரூபாய் செலவில் சர்வதேச அளவுக்கு தரமுயர்த்தியுள்ளது. இதற்குப் பின்னர் இவற்றை தனியார்மயப் படுத்துவது அரசுக்குப் பேரிழப்பு!

* ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிவரும் விமான நிலையங்களைத் தனியாருக்குக் கொடுப்பது தவறு.

* விமானக் கட்டணம் அதிகரிக்கும்.

* விமான நிலையங்களுக்குச் சொந்தமான இடங்கள், கருவிகள், சொத்துகள் என்று அதிக வருமானம் வரும் அனைத்தையும் தனியாருக்குக்கொடுப்பது அரசுக்குப் பெரிய நஷ்டம்!

* அரசு வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும். கான்ட்ராக்ட், அவுட்சோர்ஸிங் முறையில் பணிகள் ஒப்படைக்கப்படும்.

* ஒப்பந்த ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும்.

விமான நிலையத்தை  தனியார்மயமாக்குவதால் ஏற்படும் பாதகங்கள்... சாதகங்கள்!

சாதகங்கள்

* தனியார் விமான நிலையங்களில் ஓய்வறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சேவைகளும் சர்வதேசத் தரத்தில் இருக்கும்.

* டெண்டர், தணிக்கை, சி.ஏ.ஜி போன்ற நடைமுறைகள் இருக்காது. எனவே, அனைத்துப் பணிகளும் விரைவாக நடைபெறும்.

* கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அரசுத் தலையீடு இன்றி சுதந்திரமாகவும் விரைவாகவும் எடுக்க முடியும்.

* நவீன தொழில்நுட்பங்கள், நவீன தகவல் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* புதிய செயலிகள் அறிமுகப் படுத்தப்பட்டு பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கும்.

* வாடிக்கையாளர்களுக்கான சேவை, தரம் உயரும். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்கள் உரிய நேரத்தில் அவர்களைச் சென்றடையும்.