Published:Updated:

வழக்கறிஞர்கள் VS போலீஸ் மோதல்! - இரணியலில் நடப்பது என்ன?

இரணியல் நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
இரணியல் நீதிமன்றம்

இரணியல் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் தனிப்பட்ட வகையில் எந்த பந்தமும் இல்லை. வேண்டுமென்றே சிலர் பொய்யாகக் கிளப்பிவிடுகின்றனர்

வழக்கறிஞர்கள் VS போலீஸ் மோதல்! - இரணியலில் நடப்பது என்ன?

இரணியல் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் தனிப்பட்ட வகையில் எந்த பந்தமும் இல்லை. வேண்டுமென்றே சிலர் பொய்யாகக் கிளப்பிவிடுகின்றனர்

Published:Updated:
இரணியல் நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
இரணியல் நீதிமன்றம்

இதுநாள் வரையிலும் ‘வக்கீல்கள்மீது போலீஸ் வழக்கு பதிவு செய்வதும், போலீஸுக்கு எதிராக வக்கீல்கள் பாய்காட் செய்வதுமாக’ முட்டி மோதிக்கொண்டிருந்த விவகாரம், இரணியலில் இப்போது உச்சம் தொட்டிருக்கிறது!

கன்னியாகுமரி மாவட்டம், ‘இரணியல் வழக்கறிஞர் சங்க’த்தில் பொருளாளராகவும், பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவின் மாவட்டத் துணைத் தலைவருமாக இருந்தவர் வழக்கறிஞர் ஜெயராம். சில மாதங்களுக்கு முன்பு, ‘கட்சிக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டார்’ எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து இவர் நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஒரு வழக்கு சம்பந்தமாக ஜெயராமை அவரது வீட்டுக்கே சென்று கைதுசெய்ய முயன்றது போலீஸ். இதைக் கண்டித்து, கடந்த ஜூலை 4-ம் தேதி மாநிலம் முழுவதும் வக்கீல்கள் ‘கோர்ட் புறக்கணிப்புப் போராட்டம்’ நடத்தினர். இதற்கிடையே வழக்கறிஞர் ஜெயராம் மீது அதிரடியாக ‘ரௌடி ஷீட் ஓப்பன்’ (போக்கிரிப் பதிவேடு) செய்தது இரணியல் போலீஸ். குண்டர் சட்டத்தில் ஒருவரைக் கைதுசெய்வதற்கு முன்னோட்டமாக, ‘ரௌடி ஷீட் ஓப்பன்’ செய்யப்படுவது காவல்துறையின் வழக்கம் என்கின்றனர்.

வழக்கறிஞர்கள் VS போலீஸ் மோதல்! - இரணியலில் நடப்பது என்ன?

இது தவிர, ஜெயராமுடன் தொடர்பிலுள்ள சில வழக்கறிஞர்கள் வேறு வழக்குகளில் குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு வழக்கில், குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயராம் மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்ய போலீஸார் முயற்சி செய்ய... கொதித்தெழுந்த இரணியல் வழக்கறிஞர்கள், கடந்த ஜூலை 27-ம் தேதி கோர்ட் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். இப்படியாக இரணியலில் ‘போலீஸ் - வக்கீல் உரசல்’ தொடர்கதையாக நீடித்துவருகிறது.

இது குறித்துப் பேசும் விவரமறிந்தவர்கள், “சில வழக்கறிஞர்கள் போலீஸ் துணையுடன் கட்டப் பஞ்சாயத்து செய்வதையே பிரதான தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். இரணியல் காவல் நிலைய அதிகாரி ஒருவரும், குளச்சலில் இருக்கும் உயரதிகாரி ஒருவரும் இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகளில் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். மற்ற சில அதிகாரிகள் தனித்துச் செயல்படுகின்றனர். இவர்கள் தனித் தனியாகச் சில வக்கீல்களைக் கையில் வைத்துக்கொண்டு சின்ன லெவலில் பஞ்சாயத்து செய்து வருகின்ற னர். போலீஸ் ஆதரவு இருக்கிறது எனச் சில வக்கீல்களும் வரம்பு மீறிச் செயல்படுவதால், போட்டி மோதலில் வழக்குகளில் சிக்குகின்றனர்” என்றார்கள்.

இதற்கிடையே ‘இரணியல் கோர்ட் டில் ஆஜராக போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும்’ என நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரினிவாசபிரசாத் மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பெற்ற சம்பவம், இந்த விவகாரத்தில் கூடுதல் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி நம்மிடம் பேசிய வக்கீல் கிரினிவாச பிரசாத், “வழக்கு ஒன்றில் ஆஜராவதற் காகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரணியல் கோர்ட்டுக்குச் சென்றிருந் தேன். அங்கே எதிர் மனுதாரருக்கு ஆதரவான சில வழக்கறிஞர்கள் என்மீது தாக்குதல் நடத்தினர். இதை யடுத்தே ‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும்’ என வழக்கு தொடுத்து, உத்தரவும் பெற்றேன். ஆனாலும்கூட, குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களுக்கு பயந்துகொண்டு போலீஸ் இன்னமும் எனக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. நானும் இரணியல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்கிறேன்” என்றார்.

‘ரௌடி ஷீட் ஓப்பன்’ குறித்து வழக் கறிஞர் ஜெயராமிடம் பேசியபோது, “நான் பா.ஜ.க-வில் இருக்கும்போது நடத்திய அரசியல் போராட்டங்களால் என்மீது பதிவான வழக்குகள்தான் அதிகம். இதற்கிடையே ‘உண்மைத் தன்மை இல்லை’ என ஏற்கெனவே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த (Mistake of Fact) சில வழக்குகளைக்கூட எனக்கெதிராகக் காட்டி ‘ரௌடி ஷீட் ஓப்பன்’ பண்ணியிருக்கிறார்கள். இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரபாண்டியன், குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் இருவரும் சேர்ந்துகொண்டு எனக்குக் குடைச்சல் கொடுக்கிறார்கள். இது, எனக்கும் அவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னை. எனவே, இன்ஸ்பெக்டர் மீது பிரைவேட் வழக்கு தாக்கல் செய்வது சம்பந்தமாக நானும் எஸ்.பி-க்கு மனு அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

ஜெயராம், கிரினிவாசபிரசாத், அமல்ராஜ்
ஜெயராம், கிரினிவாசபிரசாத், அமல்ராஜ்

டி.எஸ்.பி தங்கராமனிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டபோது, ‘‘இரணியல் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் தனிப்பட்ட வகையில் எந்த பந்தமும் இல்லை. வேண்டுமென்றே சிலர் பொய்யாகக் கிளப்பிவிடுகின்றனர்’’ எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். டி.எஸ்.பி தரப்பில் நம்மிடம் பேசிய போலீஸார், “வக்கீல் ஜெயராம் ஒன்றும் உத்தமர் அல்ல. அவர்மீது பதியப்பட்ட 14 வழக்குகளில் ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் ‘ரௌடி ஷீட் ஓப்பன்’ பண்ணியிருக்கிறோம். இது பற்றி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் புகார் அனுப்பியிருக் கிறோம். வழக்கறிஞர் கிரினிவாசபிரசாத் தாக்கப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பது பற்றி எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை” என்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜிடம் பேசியபோது, “ஜெயராம் மீதான புகாரை மாநில ஒருங்கிணைப்புக்குழு பார்வைக்கு அனுப்பியிருக்கிறோம். ஜெயராம் உள்ளிட்டவர்கள்மீது எஸ்.பி-யும் புகார் கொடுத்திருக்கிறார். அதையும் கவுன்சில் மீட்டிங்கில் வைக்கவிருக்கிறோம். கிரினிவாச பிரசாத், தன்னைத் தாக்கியதாக நான்கு வக்கீல்கள்மீது புகார் அனுப்பியிருக் கிறார். அதில் மூன்று பேர் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கேரளா வைச் சேர்ந்தவர். எனவே இது குறித்துத் தெளிவுபடுத்தக் கோரி கிரினிவாச பிரசாத்துக்கும் கடிதம் அனுப்பி யிருக்கிறோம். அதற்கு பதில் வந்தால், இவை எல்லாவற்றையும் கவுன்சிலில் ஒருசேரவைத்து முடிவெடுத்து விடுவோம்” என்றார்.

பிரச்னைகளை, குற்றங்களை விசாரணை செய்யும் ஒரு துறையும், அதை நீதிமன்றத்தில் வாதித்து தண்டனையோ விடுதலையோ பெற்றுத் தரும் ஒரு துறையும் குற்றங்களில் ஈடுபட்டால்... அதில் போட்டி போட்டு மோதிக்கொண்டால்... சட்டம் ஒழுங்கு என்னாவது?!