சமீப காலமாக, தண்ணீர்ப் பஞ்சத்தால் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தண்ணீர் சிக்கனம் என்ற பெரும் சேமிப்பை கண்டிப்பாக உணரவேண்டிய நேரம் இது. தினமும் நம் வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு குழாய்கள் மூலம்தான் நீரைப் பயன்படுத்துகிறோம். உண்மையில் குழாயிலிருந்து வரும் மொத்த நீரையும் நாம் பயன்படுத்துவதில்லை. அதில் 50 சதவிகிதம் வீணாகிறது. எனவே, குழாயில் வரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தினால், நிச்சயமாகக் கணிசமான அளவில் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

இதற்கு, குழாய்களில் ஏரேட்டர்களைப் பயன் படுத்துவது நல்ல பலன் தரும். குழாயிலிருந்து வரும் தண்ணீரைக் காற்றுடன் சேர்த்து நுண்துளைகளின் வழியே இது வெளியே அனுப்பும். இதனால் தேவையான அழுத்தத்தில் தண்ணீரைப் பெற முடியும். அதோடு, ஏரேட்டர்களைப் பயன்படுத்துவதன்மூலம் 30 சதவிகித அளவுக்கு தண்ணீர் வீணாவது குறையும். நிமிடத்துக்கு எட்டு லிட்டர் அளவில் தண்ணீர் வெளியேறும். குழாய்களில் ஏரேட்டர்களைப் பயன்படுத்துவதன்மூலம் அதை நிமிடத்துக்கு ஐந்து லிட்டராகக் குறைக்க முடியும். அதிக அழுத்தத்தில் தண்ணீர் வரும்போது அது வெளியே தெளிக்கும்தானே... ஏரேட்டர்கள் அதையும் குறைக்கிறது.

இணையத்திலும் கடைகளிலும் பலவித மாடல்களில் ஏரேட்டர்கள் கிடைக்கின்றன. 250 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை. ஹேண்டு ஷவர், டேப்ஸ், ஷவர் என அனைத்துவித நீர்க்குழாய்களுக்கும் ஏரேட்டர்களைப் பயன்படுத்தலாம்.அனைத்துவிதமான குழாய்களுக்கும் ஏற்ற ஏரேட்டர்கள் சந்தையில் கிடைக் கின்றன. பொருத்தமானதைப் பார்த்து வாங்கி, நாமே பொருத்திக்கொள்ளலாம்.

ஏரேட்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிமிடத்துக்கு மூன்று லிட்டர் எனில், ஒரு மணி நேரம் ஒரு குழாயை நாம் பயன்படுத்துவதிலிருந்து 180 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். தண்ணீர் சிக்கத்தின் அருமையை உணர்ந்த நாம், இனி இயன்ற அளவு தண்ணீரைச் சேமிப்போம். அதற்கு ஏரேட்டர் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம்!