Published:Updated:

ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு... என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?

என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?
பிரீமியம் ஸ்டோரி
என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் (பி.எஸ்.என்.எல்) அகில இந்திய துணைத்தலைவர் சி.கே.மதிவாணனிடம் இது தொடர்பாகப் பேசினோம்.

ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு... என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் (பி.எஸ்.என்.எல்) அகில இந்திய துணைத்தலைவர் சி.கே.மதிவாணனிடம் இது தொடர்பாகப் பேசினோம்.

Published:Updated:
என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?
பிரீமியம் ஸ்டோரி
என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?

ஜனவரி 31-ம் தேதி... ஒரே நாளில் இந்தியா முழுவதிலு மிருந்தும் 80,000-க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற இருப்பது, பொதுத்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும்புயலைக் கிளப்பியுள்ளது. விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயப் பணி ஓய்வை மத்திய அரசு திணிப்பதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கொந்தளிக்கின்றனர்.

மதிவாணன், சந்தோஷம்
மதிவாணன், சந்தோஷம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவருவதால், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 80,000-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 11,000 பேர் விருப்ப ஓய்வு பெற கடிதம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. `50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம்’ என அறிவிக்கப்பட்டதையடுத்து, பலர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். விண்ணப்பித்தவர்கள் ஜனவரி 31-ம் தேதியுடன் ஓய்வுபெற்றுவிட்டால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும். அந்த நிறுவனம் மேலும் பின்னோக்கிச் செல்லும் என்று பலரும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் (பி.எஸ்.என்.எல்) அகில இந்திய துணைத்தலைவர் சி.கே.மதிவாணனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ‘‘ மத்திய அரசு ‘கார்ப்பரேட் நிறுவனங்களைச் சமாளிக்க வேண்டும். முடிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும்’ எனச் சொல்லி, 2000-ம் ஆண்டு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை உருவாக்கியது. ‘தொலைத் தொடர்புத் துறையின்கீழ் இருந்த சேவைகளைப் பிரித்து தனி நிறுவனம் ஆக்கினால், பிற்காலத்தில் அது தனியார் நிறுவனமாக மாறிவிடும்’ என்று அப்போதே நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். நாங்கள் பயந்தது இப்போது நடந்துவருகிறது.

என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?
என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நாங்கள் கலந்துகொள்ளாதபடி செய்தனர். தனியார் நிறுவனங்களோ, குறிப்பிட்ட நகரப் பகுதிகளை மட்டும் தேர்வுசெய்து 2ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தன. ஆனால், ‘உங்களுக்கு எங்கு 2ஜி வேண்டும்?’ என்று எங்களிடம் கேட்கவே இல்லை. இதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்தியா முழுவதுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பி.எஸ்.என்.எல் வைத்திருந்த 40,000 கோடி ரூபாய் நிதியிலிருந்து 20,000 கோடி ரூபாய் நிதியை 2ஜி-க்கு தாரைவார்த்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பின்னடைவு அப்போதே தொடங்கிவிட்டது.

2ஜி அலைக்கற்றையை ஆரம்பக் காலத்திலேயே கொடுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை, 3ஜி சேவையைக் கொடுப்பதற்கு இழுத்தடிப்பு செய்தது. அனைத்து தனியார் நிறுவனங்களும் தற்போது 4ஜி-க்கு மாறிவிட்ட நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னும் 3ஜி நெட்வொர்க் சேவையை மட்டுமே அளிக்கிறது” என்றவர் வி.ஆர்.எஸ் விவகாரம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

“பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடங்கும்போது மூன்று லட்சம் பேர் பணியில் இருந்தோம். தற்போது பணியில் இருப்பது 1.53 லட்சம் பேர் மட்டுமே. அதில் 78,000-க்கும் அதிகமானோர் விருப்ப ஓய்வு என்ற பேரில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். ஏற்கெனவே இருந்ததில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான பணியாளர்களே இனி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை செய்வார்கள். பி.எஸ்.என்.எல் ஊழியர் களுக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தி லிருந்தே சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். விருப்ப ஓய்வு பெறுபவர் களுக்கு பெரிய தொகை ஒன்றைக் கொடுப்பதாகச் சொல்லி ஆசைகாட்டி வெளியேற்றுகின்றனர். இதுமட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள 80,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு, பத்து மாதங்களாக சம்பளம் கொடுக்கப்பட வில்லை.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்

இதைச் சொன்னால், ‘தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இதைவிட குறைவான ஊழியர்களே இருக்கின்றனர். வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை மட்டுமே அந்த ஊழியர்களுக்கு செலவுசெய்யப்படுகிறது. அதனால்தான் அவர்கள் லாபத்தில் இயங்குகின்றனர்’ என்கிறது மத்திய அரசு. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாமே நஷ்டத்தில்தான் இயங்கு கின்றன. பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

இப்படியான சூழலில் ஜியோ சேவைகளை இலவசமாகக் கொடுத்தது ட்ராய்க்குத் தெரியாதா? நடுநிலையோடு செயல்பட வேண்டிய ட்ராய், அம்பானி போன்றோருக்கு உடந்தையாகச் செயல்படுகிறது. இன்னும் சில வருடங்களில் அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை ஏற்படும். பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பது மட்டுமே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது’’ என்றார் வேதனையுடன்.

பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் (சென்னை தொலைபேசி வட்டம்) சந்தோஷத்திடம் பேசினோம். “பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில், 77 சதவிகிதம் அளவுக்கு வருமானம் குறைந்துவிட்டது. அந்த வருமானம் முழுக்கவே ஊழியர்களின் சம்பளத் துக்குச் சென்றுவிடுவதுதான் நஷ்டத்துக் கான காரணம். மீதம் இருக்கும் பணத்தைவைத்து வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனம் என்பதால், எல்லோருக்கும் என்ன நடக்கிறது எனத் தெரிகிறது. தனியார் துறையின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது. ஆனால், அது வெளியே தெரிவதில்லை. தனியார் நிறுவனங்கள், பல லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்திருக்கின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கடன் குறைவாகத்தான் இருக்கிறது. ஊழியர்களின் சம்பளம், ஜி.எஸ்.டி, ஸ்பெக்ட்ரம் வாடகை என செலவினங்கள்தான் அதிக அளவில் இருக்கின்றன. இந்த நிலையைச் சமாளிக்கத்தான் அரசு ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன்’’ என்றார்.

எல்லாம் சரி... பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது பி.எஸ்.என்.எல்?