Published:Updated:

15 ஆண்டுகள் முயற்சிக்குப் பலனாக 8.22 கேரட் வைரம்; மகிழ்ச்சியில் மத்தியப் பிரதேசத் தொழிலாளர்கள்!

மாதிரிப் படம்
மாதிரிப் படம் ( pixabay.com )

நீண்ட நாள்கள் கடின உழைப்புக்குப் பலனாக 8.22 கேரட் வைரத்தை தொழிலாளர்கள் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி கண்டடைந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக விலையுயர்ந்த வைரத்தை வேட்டையாடும் நோக்கில் பல்வேறு சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்துத் தோண்டிவருகின்றனர். நீண்ட நாள்கள் கடின உழைப்புக்குப் பலனாக 8.22 கேரட் வைரத்தை செப்டம்பர் மாதம் 13-ம் தேதி கண்டடைந்தனர். ரத்தன்லால் பிரஜாபதியும், அவரின் மூன்று கூட்டாளிகளும் ஹிராபூர் தபரியான் என்னும் பகுதியில் கண்டெடுத்த இந்த வைரத்தின் மதிப்பு ரூபாய் 40 லட்சம். இதை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியிருக்கிறார்கள். வருகின்ற 21-ம் தேதி நடைபெறும் ஏலத்தில் மற்ற வைரங்களுடன் சேர்த்து இதுவும் ஏலம் விடப்படும் எனவும் கூறுகின்றனர்.

மாதிரி படம்
மாதிரி படம்
pixabay
Vikatan

ஏலத்தின் மூலம் வரும் வருமானத்தில், அரசு ராய்ல்டி மற்றும் வரிகள் போக மீதிப் பணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா தெரிவித்தார். சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகளில் ஒருவரான ரகுவீர் பிரஜாபதி, ``நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பல சிறிய சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்து பணியாற்றிவந்தோம் ஆனால் இங்குதான் எங்களுக்கு வைரம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக ஹிராபூர் தபரியானில் பணியாற்றிவரும் எங்களுக்குச் சிறந்த விருந்தாக இது அமைந்திருக்கிறது’’ என்றார்.

சுரங்கத் தொழிலாளர்கள், அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும், சிறந்த வாழ்வையும் கொடுக்க முடியும் எனக் கூறியிருக்கின்றனர். மாநில தலைநகர் போபாலிலிருந்து 380 கி.மீ தூரத்திலுள்ள பன்னாவில் 12 லட்சம் கேரட் வைரங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு