தொழில்துறை தொடர்பான விஷயங்களில் தமிழகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக் காட்டு, செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பயன்பாடு குறித்த விளக்கமான கொள்கைகளை தமிழக அரசாங்கம் வெளியிட்டிருப்பது.
தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் விவசாயம், வாகன ஓட்டுநரின் நடத்தை, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசாங்கம்தான் இந்தியாவிலேயே முதல்முதலாக செயற்கை நுண்ணறிவைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது (Safe and Ethical AI) பற்றிய நெறிமுறையை வெளியிட்டிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழக முதல்வர் வெளியிட்ட ஏ.ஐ நெறிமுறை
அண்மையில் சென்னையில் சி.ஐ.ஐ நிறுவனம் கனெக்ட்-2020 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. தமிழகத்தில் இன்டர்நெட் தொழில்நுட்பத்தில் நடந்துவரும் வளர்ச்சி குறித்தும், எந்தெந்தத் துறைகளில் எல்லாம் இன்டர்நெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இன்னும் வளர்ச்சி காணலாம் என்பது குறித்தும் இந்த கனெக்ட் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செயற்கை நுண்ணறிவு, ப்ளாக்செயின் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு (Cyber security) ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான நெறிமுறை களை வெளியிட்டார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகூட்டாக உழைத்த அரசு நிறுவனங்கள்
தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி என்னும் அரசு அமைப்பின் சி.இ.ஓ-வாக இருக்கும் சந்தோஷ் மிஸ்ரா, இந்த நவீன தொழில்நுட்பம் தொடர்பாக அனைத்துப் பிரிவினரிடமும் ஒன்றுக்கு பலமுறை பேசி, இந்த நெறிமுறைகளைக் கொண்டுவந்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த நெறிமுறைகளை உருவாக்கி வெளியிட ஹன்ஸ் ராஜ் வர்மாவின் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத் துறையும் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த நெறிமுறை..?
தமிழக அரசாங்கம் தற்போது வெளியிட்டி ருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு குறித்த நெறிமுறைகள் பற்றி மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் சங்கர் வேணுகோபால் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராக இருக்கும் ராமச்சந்திரனிடம் கேட்டோம் அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
‘‘செயற்கை நுண்ணறிவால் சமுதாயத்துக்கு பல நன்மைகள் இருந்தாலும் அதில் இருக்கும் ஓர் ஆபத்து ‘bias’ எனும் அதன் பண்பு. எல்லா சமயங்களிலும் நடுநிலையாக இல்லாமல், வருமானம், சாதி, மதம், மொழி போன்றவற்றை வைத்து மனிதர்கள் எடுத்த பழைய முடிவுகளின் அடிப்படையில் ஒரு பக்கமாக முடிவு எடுப்பதே அந்த ஆபத்து. உலக அளவில் சில நிறுவனங்கள், நாடுகள், நகரங்கள் இதனால் இந்தத் தொழில் நுட்பத்தை சில பயன்பாடு களுக்குப் பயன் படுத்தாமல் தடை விதித்தன. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு குறித்த நெறிமுறைகள் பற்றி வலியுறுத்தும் ஒரு கொள்கையை வெளியிடுவது அரசின் திட்டங்களின் பயன்கள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு களையும் சென்றடைய உதவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எந்தெந்த வகையில் பயன்படும்?
செயற்கை நுண்ணறிவு எப்படி யெல்லாம் நமக்குப் பயன்படும் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
1. பண்டிகைக் காலங்களில் பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்களில் குற்றவாளிகளை எளிதாகக் கண்டுபிடித்து, அவர்கள் எந்த விதமான பாதகமான செயலையும் செய்ய விடாமல் தடுக்கலாம். உதாரணமாக, கும்பமேளா, திருவிழா போன்ற லட்சக் கணக்கான மக்கள் கூடும் இடங்களில் குற்றவாளிகள் முகம் தென்படுகிறதா என்று கேட்டால், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

2. தற்போது இந்தியாவில் ஒருவர் தான் கண்டுபிடித்திருக்கும் புதிய தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை (patent) பெற வேண்டுமெனில் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வேகமாக மாறிவரும் இந்தக் காலத்தில் இத்தனை ஆண்டுக் காலம் காத்திருப்பது சாத்தியம் இல்லாத விஷயம். இந்த நிலையில், காப்புரிமைக்கான விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க செயற்கை நுண்ணறிவு மிகவும் பயன்படும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகள் எளிதில் ஊக்குவிக்கப் படும் நிலை உருவாகும்.
ஏ.ஐ நெறிமுறையின் சிறப்பம்சம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை எல்லாவிதமான தொழில் களிலும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான அடிப்படை களை எடுத்துச் சொல்வதுடன், அதை ஒழுங்குபடுத்துவது எப்படி என்பதை வழிகாட்ட ஓர் அமைப்பை வகுக்கிறது இந்த நெறிமுறை. இந்த அமைப்பு வெளிப்படையாக இருப்பது, பொறுப்பு எடுத்துக்கொள்வது, தவறான பயன்பாடு களிலிருந்து பாதுகாப்பு சார்ந்த தீர்வுகளை மதிப்பிடுவது போன் றவற்றைச் செய்கிறது. புள்ளிகளின் அடிப்படையில் தகவலின் நெறிமுறை அளவை வரிசைப் படுத்தும் ஒரு டாஷ்போர்டும் தந்திருக்கும் கூடுதல் சிறப்பம்சம் என்று சொல்லலாம்.
விளக்கமான வழிகாட்டல் வேண்டும்!
மின்னல் வேகத்தில் வளர்ந்துவரும் இந்தத் துறையில் இதுபோன்ற ஒரு விரிவான அறிக்கையை தமிழக அரசாங்கம் வெளியிட்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. பலப்பல துறைகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எப்படியெல்லாம் தொழில் வளர்ச்சி காண முடியும் என்பதை தமிழக அரசாங்கம் இன்னும் விளக்கமாக எடுத்துச் சொன்னால், அனைவரும் அதைப் புரிந்து கொண்டு, முன்னேற்றம் காண நிச்சயம் உதவும்’’ என்றார்.
செயற்கை நுண்ணறிவு, ப்ளாக்செயின், சைபர்செக்யூரிட்டி குறித்த நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாத் தொழில் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு, தமிழகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகமில்லை!