ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களுக்கிடையே மோதல், அடிதடி என அதகளப்படுவதுதான் காலம் காலமாக நடந்துவரும் நிகழ்வு.

நெல்லையில் அது மாறத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து செயல்படும் வாய்ப்பை, நெல்லை மாநகர காவல்துறை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர். நெல்லை மாவட்டத்திலும் முன்னணி நடிகர்களின் ரசிகர் மன்றத்தினர் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவிவருகின்றனர். இந்தப் பணியில் அஜித், விஜய் ரசிகர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவதுதான் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக் கிறது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஏழைப்பெண் ஒருவருக்கு உதவி தேவை என்பதை அஜித் ரசிகர்கள் தெரியப் படுத்தவும், விஜய் ரசிகர்கள் களமிறங்கி அந்தப் பெண் ணுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், குழந்தைக்குத் தேவையான பால்பவுடர் உள்ளிட்ட உதவிகளைச் செய்தனர்.

அதேபோல் நெல்லை சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருப்போருக்கு உணவுடன் தண்ணீரும் தேவைப்படுகிறது என்ற தகவலை விஜய் ரசிகர்கள் தெரியப்படுத்தவும், அங்கே ஓடோடிச் சென்று உதவுகின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படி இரு முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து செயல்படுவதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அஜித் ரசிகர் மன்ற நிர்வாகியான அஜித், ‘‘கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக நெல்லை மாநகர காவல்துறை சார்பாக தன்னார் வலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில், அஜித் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பலரும் இடம்பெற்றுள்ளோம். சாலைகளில் பணியாற்றும் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோ ருக்கு முகக்கவசம் வழங்குவது, உணவு கொடுப்பது எனப் பல்வேறு பணிகளைச் செய்கிறோம்.

ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்த ஆதரவற்ற பெண் ஒருவர், தன் தாய் மற்றும் கைக்குழந்தையுடன் சிரமப்படும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதை, காவல்துறை துணை ஆணையரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். அடுத்த சில மணி நேரத் திலேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் கிடைத்துவிட்டன. அவர்களுக்கு உதவியது யார் என விசாரித்தபோது தான் விஜய் ரசிகர்கள் என்பது தெரியவந்தது.

பேட்டையில் ஊனமுற்றவர்கள், திருநங்கைகள் சிலர் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொடுத்த தகவல் மூலம் நாங்கள் உடனடியாக அவர்களுக்கு உதவிகளைச் செய்தோம். கொரோனா பாதிப்புக்குப் பிறகும் இதுபோன்ற மக்கள் பணியைத் தொடர்ந்து மேற்கொள்வோம்’’ என்றார் உற்சாகமாக.

விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவரான ஷஜி நம்மிடம், ‘‘ரசிகர்களுக் கிடையே போட்டி, வெறுப்பு உணர்வு இருந்தது உண்மைதான். இப்போதும்கூட இணையத்தில் ரசிகர்களுக்குள் கருத்து மோதல்கள் நடைபெறுகின்றன. ஆனால், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு காரணமாக எங்களுக்குள் இருந்த போட்டி, வெறுப்பு எல்லாம் நொறுங்கிப் போய் விட்டன. நாகர்கோவில் வடசேரியில் இரு நடிகர் களின் ரசிகர்களும் இணைந்து விழிப்புணர்வு ஓவியம் வரைந்தோம்.

ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பு இல்லா மல் மிகவும் ஏழ்மையில் இருக்கும் ரசிகர்களுக்கு, தளபதி விஜய் 5,000 ரூபாய் அக்கவுன்ட்டில் போடுகிறார். அப்படி மதுரையில் நாகராஜ் என்கிற ரசிகரின் வங்கிக் கணக்கில் பணம் போடப் பட்டது. நாகராஜ் அந்தப் பணத்தை தன்னை விடவும் கஷ்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி நண்பரான சசிகுமார் என்பவருக்குக் கொடுத்து விட்டார். அந்த மாற்றுத்திறனாளி நண்பர் அஜித் ரசிகர். இப்படி எங்களுக்குள் ஓர் இணக்கம் ஏற்பட்டிருக்கிறது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

இதுபற்றி நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணனிடம் கேட்டதற்கு, ‘‘நெல்லை மாநகரில் ரசிகர் மன்றங்களால் பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது என கொரோனாவுக்கு முன்பே முடிவெடுத் தோம். அனைத்து ரசிகர்களையும் அழைத்துப் பேசினோம். சூர்யா, கார்த்தி ரசிகர்கள் ஏற்கெனவே கட்-அவுட், பேனர் கட்டுவதை நிறுத்திவிட்டு அந்தப் பணத்தில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் வாங்கிக் கொடுத்தார்கள். தனுஷ் ரசிகர்கள் சார்பாக திருநங்கைகளுக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தார்கள். நெல்லையில் உள்ள அரசு பெண்கள் பள்ளிகளில் விஜய் ரசிகர்கள் சி.சி.டி.வி அமைத்துக் கொடுத்தார்கள். அஜித் ரசிகர்கள், பள்ளிகளில் தண்ணீர்த்தொட்டி அமைத்துக் கொடுப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் உள்ளிட்ட வற்றை செய்துகொடுத்தார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் பலரும் தன்னார்வலர் களாகப் பணியாற்ற முன்வந்தார்கள். அதை சரியாகப் பயன்படுத்தும் வகையில் குழுக்கள் அமைத்தோம். அதில் பங்காற்றிய இரு நடிகர்களின் ரசிகர்களும் ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கவும் இணைந்து பணியாற்று கின்றனர். ஒரு நடிகரின் ரசிகர்கள் கொடுக்கும் தகவல் மூலம் மற்றொரு நடிகரின் ரசிகர்கள் உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

வரவேற்புக்குரிய மாற்றம்!