Published:Updated:

அமலா பால் புகார்... கைதுசெய்யப்பட்ட ஆண் நண்பர்! - மேலிடத்து போன் கால்?

அமலா பால் - பவ்நிந்தர் சிங் தத்
பிரீமியம் ஸ்டோரி
அமலா பால் - பவ்நிந்தர் சிங் தத்

ன் திருமண வாழ்க்கை கசந்த பிறகு, பவ்நிந்தருடன் ஏற்பட்ட நட்பால், புதிய மனமலர்ச்சியை அமலா பால் பெற்றார் என்பதை மறுப்பதற்கில்லை.

அமலா பால் புகார்... கைதுசெய்யப்பட்ட ஆண் நண்பர்! - மேலிடத்து போன் கால்?

ன் திருமண வாழ்க்கை கசந்த பிறகு, பவ்நிந்தருடன் ஏற்பட்ட நட்பால், புதிய மனமலர்ச்சியை அமலா பால் பெற்றார் என்பதை மறுப்பதற்கில்லை.

Published:Updated:
அமலா பால் - பவ்நிந்தர் சிங் தத்
பிரீமியம் ஸ்டோரி
அமலா பால் - பவ்நிந்தர் சிங் தத்

நடிகை அமலா பால் அளித்த பாலியல் தொல்லை புகாரில், அவரின் முன்னாள் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத் என்பவர் விழுப்புரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாக, மேலும் 11 பேர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. ஆட்சி மேலிடத்திலிருந்து வந்த ஒரு போன் காலால்தான் இந்த வழக்கில் காவல்துறை அதீத வேகம் காட்டுவதாகத் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு எகிறியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணையில் இறங்கினோம்!

நடிகை அமலா பாலும், இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர்கள், 2016-ல் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு, நெருங்கிய நட்பு வட்டம் ஏதுமின்றி தனித்திருந்த அமலா பாலுக்கு, மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங் தத் உடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்புதான், இப்போது கைது விவகாரம் வரை சென்றிருக்கிறது.

அமலா பால் புகார்... கைதுசெய்யப்பட்ட ஆண் நண்பர்! - மேலிடத்து போன் கால்?

நம்மிடம் பேசிய தமிழ்த் திரைப் பிரபலங்கள் சிலர், “பவ்நிந்தர் சிங் ஒரு பாடகராகச் சில ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். ராஜஸ்தானில் பெரிய குடும்பம் அவருடையது என்பதால், பணத்துக்குக் குறைவில்லை. தன் திருமண வாழ்க்கை கசந்த பிறகு, பவ்நிந்தருடன் ஏற்பட்ட நட்பால், புதிய மனமலர்ச்சியை அமலா பால் பெற்றார் என்பதை மறுப்பதற்கில்லை. டெல்லி, மும்பையிலுள்ள பவ்நிந்தர் சிங்கின் வீட்டுக்கு அமலா பால் செல்வது வழக்கம். 2018-ல் விழுப்புரம் மாவட்டம், பெரியமுதலியார் சாவடியில் அமலா பாலும் பவ்நிந்தர் சிங்கும் இணைந்து வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தனர். அந்தச் சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய அமலா பால், திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கினார்.

மார்ச் 2020-ல், அமலா பாலும் தானும் திருமணக் கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் பவ்நிந்தர். சிறிது நேரத்தில் அந்தப் புகைப்படங்களை நீக்கியும்விட்டார். அதற்குள்ளாக, ‘அமலா பாலுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆண் நண்பரைக் கரம்பிடித்தார்’ என்கிற செய்தி தீயாகப் பரவிவிட்டது. இது அமலா பாலுக்குப் பெரிய எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. ‘நான் திருமணம் செய்யவில்லை. அது ஒரு ஃபோட்டோ ஷூட் மட்டுமே’ என்று விளக்கமளித்தார் அமலா பால். இந்த நிகழ்வைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் விழுந்துவிட்டது.

அமலா பால் புகார்... கைதுசெய்யப்பட்ட ஆண் நண்பர்! - மேலிடத்து போன் கால்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமலா பால், தன்னுடைய புகைப்படங்கள் எதையும் பவ்நிந்தர் வெளியிடக் கூடாது எனத் தடை உத்தரவு வாங்கினார். இருவருக்கும் இடையே விரிசல் விழுந்தாலும், தயாரிப்புத் தொழிலில் இணைந்தே பயணித்தார்கள். இவர்கள் தயாரித்த படத்தால் இருவருக்குள்ளும் பணரீதியிலான பிரச்னை ஏற்படவே, அதை வெளியிடக் கூடாது என பவ்நிந்தர் கூறியிருக்கிறார். ஆனால், அதையும் மீறி அமலா பால் அந்தப் படத்தை ஓடிடி தளம் ஒன்றுக்கு விற்பனை செய்திருக்கிறார். இந்தப் பட விற்பனை மற்றும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையின் நீட்சியாகவே, பவ்நிந்தர் சிங்கின் கைது நடந்திருக்கிறது. பவ்நிந்தரைக் கைதுசெய்து சில நாள்களாவது சிறையில் வைக்க வேண்டுமென, ஆட்சி மேலிடத்திலிருந்து ஒரு போன் கால் விழுப்புரம் காவல்துறை உயரதிகாரிகளுக்கு வந்திருக்கிறது. அதனடிப்படையில்தான், விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை” என்றனர் விரிவாக.

அமலா பால் சார்பாக, விக்னேஷ்வரன் என்பவர் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஆகஸ்ட் 26-ம் தேதி புகார் மனு அளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த காவல்துறை, 30-ம் தேதி அதிகாலை புதுச்சேரி ஆரோவில்லில் இருந்த பவ்நிந்தர் சிங்கைக் கைதுசெய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, விசாரணை அதிகாரி இருதயராஜ் நேரில் செல்லாததால், நீதிபதியின் கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல் போலீஸார் திணறி யுள்ளனர். பொறுப்பு விசாரணை அதிகாரி என ஆரோவில் ஆய்வாளர் அன்பரசு அஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கமளித்திருக்கிறார்.

அமலா பால் புகார்... கைதுசெய்யப்பட்ட ஆண் நண்பர்! - மேலிடத்து போன் கால்?

அமலா பாலும், பவ்நிந்தர் சிங்கும் தங்கியிருந்த பெரியமுதலியார் சாவடி ‘மீனாம்பிகை கார்டன்’ வீட்டுக்குச் சென்றோம். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் நம்மிடம், “23,000 வாடகையில பவ்நிந்தர் சிங் இந்த வீட்டுல இருந்தார். அப்பப்ப அமலா பால் இங்கே வந்து ஒரு வாரம் தங்கியிருப்பாங்க. நாயைக் கூட்டிக்கிட்டு ரெண்டு பேரும் வாக்கிங் போவாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடிலருந்து அமலா பால் இங்கே வர்றது இல்லை. இப்ப, பவ்நிந்தர் சிங்கும், அவரோட பெற்றோரும்தான் இந்த வீட்டுல இருக்காங்க” என்றனர்.

அமலா பால் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “பவ்நிந்தர் சிங் எந்தத் தொழிலும் செய்யாமல் இருந்தவர். அவருக்கு வீடு, கார் உள்ளிட்டவை வாங்கிக்கொடுத்தது அமலா பால்தான். அமலாவின் வருமானத்தில்தான் பவ்நிந்தர் வாழ்ந்துவந்தார். அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் அமலா பால் உள்ளாகியிருக்கிறார்” என்றனர்.

இறுதியாக, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் பேசினோம். “யாருடைய அழுத்தத்திலும் இந்தக் கைது நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவில்லை. புகாரிலுள்ள உண்மைத்தன்மையை விசாரித்து, அதன் பிறகே சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்றார் சுருக்கமாக.

சட்டம் தன் கடைமையைச் செய்யும்... அதானே?!