Published:Updated:

ஆடல், பாடல், அம்மா பாசம்...

அம்மாவும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவும் நானும்

அவள் விகடனின் ‘அம்மாவும் நானும்’ - அன்னையர் தினக் கொண்டாட்டம்

ஆடல், பாடல், அம்மா பாசம்...

அவள் விகடனின் ‘அம்மாவும் நானும்’ - அன்னையர் தினக் கொண்டாட்டம்

Published:Updated:
அம்மாவும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவும் நானும்

வருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவள் தாய். ஆனால், நிஜத்தில் அப்படி நடப்பதில்லை. வருடத்தில் ஒரு நாளாவது அவளைக் கொண்டாட வருடந் தோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களை, பெண்மையைப் போற்றுவதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் ‘அவள் விகடன்’, அன்னையர் தினத்தையும் அவள் விகடன் வாசகிகளோடு இணைந்து கொண்டாடிக் களிப்புற்றது.

பூர்விகா அப்ளையன்சஸ் வழங்கிய அவள் விகடனின் ‘அம்மாவும் நானும்’- அன்னையர் தின கொண்டாட்டம் மே 8-ம் தேதி ஞாயிறு அன்று, சென்னை, மேற்கு அண்ணா நகரில் உள்ள கே.யெம்.ராயல் திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த் துடன் சிறப்பாகத் தொடங்கியது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்கினார்கள் தொகுப்பாளர்கள் தீபிகாஷி மற்றும் யோயா.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மாநில சட்ட கமிஷனின் உறுப்பினரு மான எஸ்.விமலா, பட்டி மன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் மற்றும் பிரபல சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் ஆகியோர்.

 தொடக்க விழா...
தொடக்க விழா...

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். விமலா, “உலகத்தின் பேராற்றல் தாய்மை. மனிதனை மனிதனாக வைத்திருப்பதும் தாய்மைதான். அம்மாக்கள் தங்களின் விருப்பங்களை கணவர் மற்றும் பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுக் கிறார்கள். பெற்றவளை கறிவேப்பிலையைப் போல பயன்படுத்துவதைத் தவிர்த்து தாய்மையைப் போற்ற வேண்டியது அனைவரின் கடமை'' என்றார்.

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில், “முதலில் பிள்ளைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ‘யெஸ்’ சொல்வதை அம்மாக்கள் நிறுத்துங்கள். அவர்களின் தவறான செயல்களுக்கு மெளனமாக இருப்பது அவற்றுக்கு சம்மதம் தெரிவிப்பதற்குச் சமம், அம்மாவாக இருப்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம் சுய மரியாதையுடன் வாழ்வது. அம்மாக்கள் அனைவரும் வலிமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

 அம்மாவுடன் நடிகர் தீபக்...
அம்மாவுடன் நடிகர் தீபக்...

பிரபல சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத், “எந்தச் சூழ்நிலையிலும், எல்லோரின் மனமும் முதலில் தேடுவது அம்மாவைதான். குழந்தைகளோடு தோழமை யுடன் பழகினால்தான் அவர்கள் தங்கள் பிரச்னைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்வார்கள். அம்மாக்கள் எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டியதில்லை. கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட வேண்டும். அம்மாக்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அதற்கான நேரத்தை அவர்கள செலவழிக்கத் தவறக் கூடாது” என்றார்.

சிறப்பு விருந்தினர்களின் உரைகள் முடிந்ததும், ஃபிரெஷ்ஷிஸ் மற்றும் ப்ரீத்தி ஸோடியாக் காஸ்மோ இணைந்து சமையல் போட்டியை நடத்தின. மேலும், பட்டிமன்றமும் குழந்தை களுக்கான ஓவியப் போட்டியும் நடந்தன. பனீரைப் பிரதானமாக வைத்து ஒரு மணி நேரத்திற்குள் சமைக்க வேண்டும் என்பதே சமையல் போட்டியாளர்களுக் கான விதிமுறை. விதம்விதமாக சமைத்து டிஸ்பிளே செய்திருந்த உணவுகளை ருசிபார்த்து, வெற்றி யாளர்களை அறிவித்தார் மல்லிகா பத்ரிநாத்.

ஆடல், பாடல், அம்மா பாசம்...

பூர்விகா அப்ளையன்சஸின் விளம்பரம் ஒன்று திரையிடப் பட்டு, அதிலிருந்து பார்வை யாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சரியான பதில் களைச் சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனிடையே தாய்க்கும் தனக்குமான உறவை வெளிப் படுத்தும் வகையிலான அழகு ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள் குழந்தைகள்.

‘சமையலறையின் ராணி இட்லியா, தோசையா?' என்ற தலைப்பில் ஃப்ரெஷ்ஷிஸ் நிறுவனம் நடத்திய விறுவிறுப்பான, நகைச் சுவையான பட்டிமன்றம் அரங்கேறியது. சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் நடுவராக இருந்து ‘என் ஓட்டு இரண்டுக்கும் தான். ஒன்று ராணி என்றால் இன்னொன்று ராஜா....’ என தீர்ப்பளித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காலையில் குளிர்பானங்கள், காபி, டீ, பிஸ்கட் போன்றவையும், மதியம் அறுசுவை உணவும், மாலை காபி, டீ, சமோசாவும் வழங்கப்பட்டன.

 பரிசு தருணங்கள்...
பரிசு தருணங்கள்...
 பரிசு தருணங்கள்...
பரிசு தருணங்கள்...
ஆடல், பாடல், அம்மா பாசம்...

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மென்ட்டலிஸ்ட் கோபாலின் மேஜிக் ஷோ, அரங்கிலிருந்தவர்களை கட்டிப் போட்டது. பிரமிப்பு விலகாமலிருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்த சுப்ரீ்ம் ஃபர்னிச்சர் வழங்கிய மியூசிகல் சேர் போட்டியும், அம்மாவும் பிள்ளைகளும் பங்கேற்ற பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிகழ்ச்சியின் இறுதியில் மற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர் களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அப் போலோ மருத்துவமனை சார்பில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அரங்கிலேயே இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

மாலை நேர நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தின ராக வந்தார் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நாயகன் தீபக். அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது இன்ப அதிர்ச்சியளிக்கும் விதமாக அவரின் தாய், வசந்தா மேடையேறினார். தீபக்கின் ஃபேவரைட்டான `பலாக்கொட்டை சாங்கு கூட்டு' சமைத்துக் கொண்டு வந்தவர், அதை மேடையிலேயே மகனுக்கு ஊட்டி மகிழ்ந்தார். பிறகு இருவரும் ஒருவரையொருவர் எந்த அளவு புரிந்து வைத்துள்ளனர் என்பதை டெஸ்ட் செய்ய `க்விஸ்' போட்டி நடத்தப் பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு இரு வரும் ஒரே பதில்களைத் தந்தது இவர்களது பாசப் பிணைப்பை வெளிப்படுத்தியது.

ஆடல், பாடல், அம்மா பாசம்...
ஆடல், பாடல், அம்மா பாசம்...
ஆடல், பாடல், அம்மா பாசம்...

நிகழ்ச்சி க்ளைமாக்ஸை எட்டியது... பார்வையாளர்கள் பங்கேற்ற அந்த பம்பர் பரிசுப் போட்டியில் வென்றவர் யார் என்ற சஸ்பென்ஸ் அரங்கை நிறைத்திருந்தது. குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்ட இதில், சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ம. ரூபிகா மெகா பரிசை தட்டிச் சென்றார்.

வருடம் முழுக்க குடும்பம், குழந்தைகள், சமையல், வீட்டு வேலைகள் என உழைத்துக் களைக்கும் அம்மாக்களுக்கு அந்த ஒரு நாள் ஆடல், பாடல், கொண்டாட்டம் என வித்தி யாசமான அனுபவத்தைத் தந்திருக்கும். அந்த உணர்வும் நிறைவும் அவர்கள் அத்தனை பேரின் முகங்களையும் நிறைத்திருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism