Published:Updated:

வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்த அமமுக பிரமுகர்; சுவாரஸ்யப் பின்னணி!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று, மாட்டுவண்டி பூட்டிவந்த நபரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். சுற்றுச்சூழல் நலனுக்காக மாட்டுவண்டியில் வந்ததாக அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று பல்வேறு விநோத சம்பவங்கள் நடைபெற்றன. அரசியல் கட்சியினர் கூட்டத்தைத் திரட்டியபடி வந்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்: 16 நாள் கைக்குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்த பெண்!

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடுபவர்கள் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்துவிட்ட நிலையில் அ.ம.மு.க சார்பாக தருவை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாட்டுவண்டியில் வேட்புமனு தாக்கல் செய்ய யூனியன் அலுவலகத்துக்கு வந்தார்.

அ.ம.மு.க கட்சிப் பிரமுகர் வேட்புமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சாலையில் மாட்டுவண்டியில் வந்ததால் அந்தப் பகுதி மக்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். சாலையில் செல்லும் வாகனங்களில் செல்வோரும் அவரை விநோதமாகப் பார்த்தபடியே சென்றார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்த கார்த்திக்
வேட்புமனு தாக்கல் செய்த கார்த்திக்

கார்த்திக் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது. ஆனால், விவசாயிகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். மத்திய அரசு, பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே செல்வதால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளைப் போற்றவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு