Published:Updated:

அம்மோனியம் நைட்ரேட் மட்டுமல்ல... தமிழகத்தில் காத்திருக்கும் ஆபத்துகள்!

அம்மோனியம் நைட்ரேட் அபாயம்

சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்ட பாதரசக் கழிவுகள் அங்கு குவிக்கப்பட்டிருப்பதால், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

அம்மோனியம் நைட்ரேட் மட்டுமல்ல... தமிழகத்தில் காத்திருக்கும் ஆபத்துகள்!

சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்ட பாதரசக் கழிவுகள் அங்கு குவிக்கப்பட்டிருப்பதால், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
அம்மோனியம் நைட்ரேட் அபாயம்

லெபனானில் அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்து மட்டும் நடக்கவில்லையென்றால், இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சென்னை - மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் தகவல் யாருக்கும் தெரிந்திருக்காது.

அம்மோனியம் நைட்ரேட் மட்டுமல்ல... இதைப்போல மக்களின் உயிருக்கு, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக, தமிழகத்தில் காத்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.

ஈரோடு டு பங்களாதேஷ்: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைச் கூறினார். “கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷில் 20 டன் 'வொயிட் பொட்டாஷ்' பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அந்த மூட்டைகளிலிருந்த பார்கோடை வைத்துப் பார்த்தபோது ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் உரக்கடையிலிருந்து அது அனுப்பப்பட்டது தெரியவந்தது. வொயிட் பொட்டாஷைப் போல நாம் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல பொருள்களை இப்படி முறைகேடாக அதிக அளவில் பதுக்கி அனுப்புகிறார்கள். இவையெல்லாம் பெரும் விளைவுகளை உண்டாக்கக்கூடும். எனவே, இதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

அச்சுறுத்திய அரவங்காடு: நீலகிரி மாவட்டத்திலிருக்கும் அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ராணுவ தளவாட உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவுநீர் நேரடியாக அருகிலுள்ள ஓடையில் கலக்கப்பட்டு, அந்த நச்சுக் கழிவு பவானியில் கலப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் விளைவாக, பன்னாட்டு வன உயிர் நிதியம் (WWF) இந்த ஓடையின் நீரை ஆய்வு செய்து, மாசு கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அச்சுறுத்தும் குரோமியக் கழிவுகள்: ராணிப்பேட்டை சிப்காட்டில் நிரந்தரமாக மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமியத் தொழிற்சாலையில் 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், 3,500 வகையான ரசாயன மாசு நேரடியாக நிலம், நீர், காற்று ஆகியவற்றில் கலந்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மோனியம் நைட்ரேட்
அம்மோனியம் நைட்ரேட்
க.பாலாஜி

கொடைக்கானல் மெர்க்குரி ஆபத்து: கொடைக்கானல் தனியார் ஆலையில் பாதரசக் கழிவு டன் கணக்கில் குவிந்திருக்கிறது. இடையில் கடந்த 2019-ம் ஆண்டு கழிவுகளை அகற்றுவதாக ஆலைத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், கழிவுகள் அகற்றப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்ட பாதரசக் கழிவுகள் அங்கு குவிக்கப்பட்டிருப்பதால், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவையில் குவியும் மருத்துவக் கழிவுகள்: கோவை சுற்றுவட்டாரங்களில் வாளையார், வேலந்தாவளம், சி.கோபாலபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் கேரளாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் ம.தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈஸ்வரன், “இப்போது இருக்கும் சட்டத்தை வைத்துக்கொண்டு இந்தக் குற்றங்களைக் குறைக்க முடியாது. சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்” என்றார்.

டெல் அடித்த எச்சரிக்கை பெல்: வேலூர், காட்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்திருக்கிறது, தமிழ்நாடு அரசின் 'டெல்' வெடிமருந்து நிறுவனம். கல்குவாரி, நிலக்கரி சுரங்கம், கடலுக்கு அடியில் பாறைகளைத் தகர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 15 வகை அபாயகரமான வெடிமருந்துகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டன.

2001-ல் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 24 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். பலர் கை கால்களை இழந்தனர். அதன் பிறகு இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பவர் ஃபுல்லான 'டைனமிக்' என்னும் நைட்ரோ கிளிசரின் வெடிமருந்தை கள்ளச்சந்தையில் நக்சலைட்டுகள் வாங்கி, தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். தேசப் பாதுகாப்பு கருதி நைட்ரோ கிளிசரின் உற்பத்திக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இதற்கு பதிலாக திரவத்தைப் போலிருக்கும் 'எம்.எம்.ஏ.எம்' என்ற வெடிமருந்து தயாரிக்கப்பட்டது.

சென்னை - மணலி அம்மோனியம் நைட்ரேட் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் கூடிய ஜூ.வி கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/30ORQ4k > அம்மோனியம் நைட்ரேட் அபாயம்! - எங்கே போச்சு 16,000 டன்? https://bit.ly/30ORQ4k

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism